என் மலர்
நீங்கள் தேடியது "opposition"
- பள்ளி இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
- சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் கோவிந்தபுத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தில் தற்போது ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு அளவீடு செய்து உள்ளனர். இதனை அறிந்த அந்த கிராம மக்கள், தற்போதுள்ள நடுநிலைப்பள்ளி எதிர்காலத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியாக மாறும்போது, அதற்கு இடம் தேவைப்படும். எனவே அரசு பள்ளிக்கு சொந்தமான இந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டக்கூடாது என்றும், அதனை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளனர்.இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பள்ளிக்கு சொந்தமான இடத்திலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு வேலைகள் நடைபெற்று வருவதை அறிந்த அந்த கிராம மக்கள் நேற்று காலை ஒன்று கூடி கோவிந்தபுத்தூர் கிராமத்தில் முத்துவாஞ்சேரி தா.பழுர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மனித நேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம்
- 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு
கறம்பக்குடி.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது சுலைமான் தலைமையில் சமீபத்தில் கேரளாவில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பை மீறி இந்த படம் திரையரங்குகளில் வெளியிட்டால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விடும் என்றும், ஆகவே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் முன்னிலையில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
- இந்து முன்னணி அமைப்பாளர் முருகையன் தலைமையில் 9 பேர் காமராஜ் சிலை முன்பு கூடினர்.
- காதலர் தின வாழ்த்து பேனர் வைக்கப்பட்டிருந்தன.
புதுச்சேரி:
புதுவையில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் காமராஜர் சிலை சந்திப்பில் இன்று போராட்டம் நடத்தினர்.
இந்து முன்னணி அமைப்பாளர் முருகையன் தலைமையில் 9 பேர் காமராஜ் சிலை முன்பு கூடினர். அப்போது எதிரில் உள்ள தனியார் நகைக்கடையில் காதலர் தின வாழ்த்து பேனர் வைக்கப்பட்டிருந்தன. அதன் எதிரே சென்று இந்து முன்னணியினர் கோஷமிட்டனர்.
காதலர் தினத்தை வணிகர்கள் ஊக்கப்படுத்தக்கூடாது என கூறி அவர்கள் கோஷமிட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது காதலர் தின வாழ்த்து அட்டையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து முருகையன் உட்பட 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- சாமிபிள்ளை தோட்டம் அருகே மதுபானக்கடை அமைக்கப்பட உள்ளது.
- இதனால் அந்த மதுபானக்கடை திறக்கப்படவில்லை.
புதுச்சேரி:
புதுவை கருவடிகுப்பம் கிழக்கு கடற்கரை சாலை சாமிபிள்ளை தோட்டம் அருகே மதுபானக்கடை அமைக்கப்பட உள்ளது.
குடியிருப்புகளை ஒட்டிய மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மதுபானக்கடை அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை உருவாக்கி பல போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இதனால் அந்த மதுபானக்கடை திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் மீண்டும் மதுக்கடையை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலை மதுபானக்கடை அருகே போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் லெனின்துரை தலைமை வகித்தார். இந்தியகம்யூனிஸ்டு சேதுசெல்வம், சுப்பையா, மார்க்சிஸ்டு சத்யா, காங்கிரஸ் வினோத், மற்றும் பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர். மதுக்கடையை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.
- தாரமங்கலத்தில் கடந்த பல வருடங்களாக அன்றாட சேகரிக்கும் குப்பை கழிவுகளை சேகரித்து அதனை 25-வது வார்டு சின்னாகவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
- இதுபற்றி தகவல் அறிந்த கிழக்குபாவடி பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலத்தில் கடந்த பல வருடங்களாக அன்றாட சேகரிக்கும் குப்பை கழிவுகளை சேகரித்து அதனை 25-வது வார்டு சின்னாகவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. அங்கு இந்த குப்பைகள் மலைப்போல் தேங்கி சுகாதார விளைவுகளை ஏற்படுத்தி வந்ததால் அந்த பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், சமூக ஆர்வலர்கள் பசுமை தீர்பாய நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் வந்த நிலையில் நீதிமன்றம் குப்பை கிடங்கை உடனடியாக நகராட்சி நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றம் தீர்ப்பின் படி கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு பல இடங்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது 20-வது வார்டு கிழக்கு பாவடி தெரு பகுதியில் கிடங்கு அமைப்பது என்று உறுதி செய்யப்பட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இதையரிந்த 10,20-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பியும், போராட்டம் நடத்தியும் வந்த நிலையில் ஒப்பந்ததாரர் அருள்லட்சுமி நிறுவனத்தினர் பணியை தொடக்க பூமி பூஜை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த கிழக்குபாவடி பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
நகராட்சிக்கு உட்பட்ட 10,20-வது வார்டு கிழக்குப்பாவடி பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கைத்தறி, விசைத்தறி ஜவுளி தொழில் செய்து வருகிறோம்.இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் அரசு ஆரம்ப துணை சுகாதார மருத்துவ மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,இதனை ஒட்டி விவசாய மற்றும் வேளாண் தோட்டக்கலை அலுவலகமும், தனியார் ஜவுளி நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரிந்தும் வருகின்றனர்.
இதற்கும் மேலாக இந்த குப்பை கிடங்கு அமையவுள்ள இடத்தை ஒட்டி எங்கள் பகுதியின் குடிநீர் ஆதாரமாக விளங்க கூடிய குறுக்குபட்டி ஏரி அமைந்துள்ளது.இந்த இடத்தில் கிடங்கு அமைவதால் ஏரி நீர்நிலை, கிணற்று நீர், ஆழ்துளை நீர் மாசுபாடு ஏற்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் பரிசிலனை செய்ய வேண்டும் இல்லை யேல் அடுத்தகட்ட போராட் டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதனை தொடந்து அனைத்து பொதுமக்களும் நகராட்சி அலுவலகம் சென்று தங்களது கோரிக் கையை அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி குப்பை கிடங்கு அமைக்கபடுவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- ராகுல் காந்தி தலைவர் பதவியை தட்டிக்கழிக்காமல் ஏற்று கொள்ள வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.
- பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமராக வர கடுமையாக உழைக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை ெதற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார்தலைமையில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் வட்டாரத்தலைவர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட துணைத்தலைவர்கள் வக்கீல் கோ.அன்பரசன், பட்டுக்கோட்டை வக்கீல் ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் குணா பரமேஸ்வரி, முன்னாள் மாநில துணைத்தலைவர் பட்டுக்கோட்டை கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில்,அகில இந்திய காங்கிரஸ் துணைத்தவைர் ராகுல்காந்தி தலைமையில் அடுத்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தொடங்க உள்ள நடைபயண ஆரம்ப விழாவில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1000 பேர் கலந்து கொள்ள வேண்டும்.
நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் 50 பேர்செல்ல வேண்டும்.
செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர்தேர்தலில் ராகுல் காந்தி தலைவர் பதவியை தட்டிக்கழிக்காமல் ஏற்று கொள்ள வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.
2024- –ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமராக வர கடுமையாக உழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - அரியலூர், மன்னார்குடி- பட்டுக்கோட்டை, கும்பகோணம் -விருத்தாச்சலம் ரயில்பாதை திட்டத்திற்கு அதிக அளவு பணம் ஒதுக்கி மேற்படி திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தஞ்சாவூரிலிருந்து பெங்களுருக்கு புதிதாக விரைவு ரயில் ஒன்றை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாநகர மாவட்ட கோட்ட தலைவர் கதர்.வெங்கடேசன், வட்டாரத்தலைவர்கள் நாராயணசாமி, சேக்இப்ராகிம்ஷா, அய்யப்பன், பாண்டிதுரை, சித்திரக்குடி ஆண்டவர், கனகராஜ், அதிராம்பட்டிணம்நகர தலைவர் தமிழ் அன்சாரி, சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர்சதா.
வெங்கட்ராமன், வழக்கறிஞர் மைனர், சோழபுரம் ராஜேந்திரன், இளைஞர்காங்கிரஸ் நிர்வாகிகள் ரமேஷ் சிங்கம், கீர்த்திவாசன், ராஜ்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் சண்முகம், முகிலன், சுப்புராமன், சாமி மனோகரன், ஜான் தனசேகர், மாரிமுத்து, வீராசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அலுவலகத்திற்கு பூசாரி போல மாலை அணிந்தும், மணி அடித்தவாறும், சாமி ஆடியபடியும் ஒருவர் வந்து மனு அளித்தார்.
- பாதுகாப்பு கருதி கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.
நெல்லை:
மேலப்பாளையம் மேல கருங்குளத்தை சேர்ந்தவர் முருகன் என்ற முருகையா. இவர் அப்பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோவிலின் தர்மகர்த்தாவாக உள்ளார்.
இவர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு பூசாரி போல மாலை அணிந்தும், மணி அடித்தவாறும், சாமி ஆடியபடியும் வந்து ஒரு மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை கோவிலின் அருகே இடமாற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவிலுக்கு தினமும் காலையிலும், மாலையிலும் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கைக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த தமிழர் விடுதலை களம் பகுதி செயலாளர் கணேசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தர்மகர்த்தாவுடன் வந்திருந்தனர்.
மகளிர் மட்டும் பஸ்
மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் கல்லூரிக்கு வந்து செல்வதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து கல்லூரிக்கு மகளிர் மட்டும் பஸ் இயக்க வேண்டும் எனவும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
- கீழக்கரையில் ‘அல்வா’ கொடுக்கும் போராட்டம் நடந்தது.
- காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வை கண்டித்து வீரகுல தமிழர் படை சார்பில் நடந்தது.
கீழக்கரை
கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையை மேம்படுத்த கோரியும், சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ.வை கண்டித்து வீரகுல தமிழர் படை சார்பில் பொதுமக்களுக்கு 'அல்வா' கொடுக்கும் போராட்டம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், வி.சி.க. முன்னாள் மாவட்ட செயலாளர் வேந்தை சிவா, நகர் செயலாளர் பாசித் இலியாஸ், சி.பி.எம். ரெட் ஸ்டார் மாவட்ட செயலாளர் யோகேஸ்வரன், ம.நே.ம., கட்சி செய்யது இப்ராகிம், வீர குல தமிழர் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மது கணேஷ் உள்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.
- திருச்சி பாலக்கரையில் நில வணிகர்கள் நல சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- நில வணிக தரகர்களுக்கு பிடிக்கப்படும் 15 சதவீத ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
திருச்சி:
நில வணிகர்கள் நல சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரையில் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அப்துல் நாசர் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் கருமாரி கருணாகரன் முன்னிலை வகித்தார். இளைஞரணி மாநில செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளர் பால்பாண்டியன், மாநில பொருளாளர் எஸ்.ஏ.ரஹீம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நிர்வாகிகள் மகாதேவன், எம்.பி.ராஜா, ரியாஸ் அகமது, மாநகர் மாவட்ட செயலாளர் யாசின், ஆரிப், ஏ.பி.ஆர் ரியல் எஸ்டேட் கதிர்ராசா, அன்சாரி, பயாஸ், ரியாஸ், சுப்ரீம் ரமேஷ், வெங்கடேசன்,கடலூர் அப்துல் கசன், காதர், பால யோகா உள்பட ஏராளமானநிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் புறநகர் மாவட்ட தலைவர் குண்டூர் கணேசன் நன்றி கூறினார். கூட்டத்தில் நில வணிக தரகர்களுக்கு பிடிக்கப்படும் 15 சதவீத ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.அனைத்து உறுப்பினர்களுக்கும் இலவசமாக காப்பீட்டு வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தேசிய சின்னத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது.
- கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பங்கு நம் நினைவில் இருக்கும்.
தலைநகர் டெல்லியில் ரூ.971 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தால் ஆன 6.5 மீ உயரம் உள்ள தேசிய சின்னத்தின் எடை சுமார் 9500 கிலோ ஆகும். இதை தாங்கும் வகையில் சுமார் 6500 கிலோ எடையுள்ள எஃகு தூண்கள் நான்கு புறங்களிலும் கட்டப்பட்டுள்ளன.
இந்த தேசிய சின்னத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். முன்னதாக அங்கு நடைபெற்ற பூஜையிலும் அவர் கலந்து கொண்டார்.
This morning, I had the honour of unveiling the National Emblem cast on the roof of the new Parliament. pic.twitter.com/T49dOLRRg1
— Narendra Modi (@narendramodi) July 11, 2022
பாராளுமன்ற கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பிரதமர் உரையாடினார்.இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் பதிவில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் உரையாடினேன். அவர்களுடைய முயற்சிகள் கண்டு நாம் பெருமை அடைகிறோம். நமது நாட்டிற்கான அவர்களின் பங்கு என்றும் நம் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தது தொடர்பாக, காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் மற்றும் ஏஐஎம்ஐஎம் போன்ற எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இது அரசியலமைப்பு மீறல் என்று அந்த கட்சிகள் கூறியுள்ளன. இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைமை செய்தித் தொடர்பாளரும் தேசிய ஊடகப் பொறுப்பாளருமான அனில் பலுனி தெரிவித்தார்.
புதிய பாராளுமன்றத்திற்கு அடித்தளம் அமைத்தது மோடி என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் வெளியிட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும், அவர் குறிப்பட்டார். கட்டுமான பணிகள் முடிந்ததும், கடடிடம், பாராளுமன்ற நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
திறப்பு விழாவை கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள், நிர்வாக செயல்முறையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பாராளுமன்றத்தின் வடிவமைப்பு முதல் நிதி மற்றும் கட்டுமான மேற்பார்வை வரை, முழு வேலைகளும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் வரம்பிற்கு உட்பட்டது என்றும் பலூனி குறிப்பிட்டார்.