search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு
    X

    பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு

    • புதுக்கோட்டை பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்
    • கர்நாடக முதல்வரிடம், தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு

    புதுக்கோட்டை,

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளதை கண்டித்தும், இதனை எதிர்க்காத தமிழக தி.மு.க. அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் இயக்கம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் புதுக்கோட்டையில் பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.பின்னர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-கர்நாடகாவில் தற்போது ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையில் காவிரிஆற்றில் மேகதாது இடத்தில் புதிய தடுப்பணை கட்டப்படும் என தெரிவித்துள்ளனர் . அதற்கு தமிழக முதல்வர் கண்டனம்தெரிவிக்காமல் அங்கு சென்று வந்துள்ளார். தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டார். காவிரி விசயத்தை அரசியலாக்க விரும்பவில்லை. தமிழக அமைச்சர் கள் முதல்வருக்கு அழுத்தம் தரவேண்டும். இல்லையெனில் புதுக்கோட் டையில் அமைச்சர் ரகுபதி வீட்டு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கர்நாடகாவில் 2012 பாஜக அரசு அணை கட்டும் பணிகளை ஆரம்பித்த போது அதற்கு தமிழக பாஜக சார்பாக எதிர்ப்பு தெரிவித்தோம் என்றார்.பேட்டியின் போது மாவட்ட பொதுச் செயலாளர் குருஸ்ரீராம், மாவட்ட பார்வையாளர் பழ.செல்வம், மாநில பொதுக்குழு மயில் சுதாகர், தரவு மேலாண்மை மாநில செயலாளர் கார்த்திகேயன், நகரத்தலைவர் சக்திவேல், ஊடகப்பிரிவு தலைவர் கோவேந்திரன், மாவட்ட செயலாளர் சுந்தரவேல், பிரசாத் உட்பட பலர் இருந்தனர்.

    Next Story
    ×