என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள அமைச்சர்"

    • இந்தத் தாக்குதலை இடதுசாரி ஜனநாயக முன்னணி கண்டித்துள்ளன.
    • பினராயி விஜயன், அமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு நடத்தியப் போராட்டத்தில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் மருத்துவ அலட்சிய சம்பவங்கள் தொடர்பாக அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என கடந்த ஒருவாரமாக காங்கிரஸ் போரட்டம் நடத்திவருகிறது.

    இந்நிலையில் கண்ணூரில் ரயில் ஏற சென்ற அவரை போராட்டக்காரர்கள் மறித்துள்ளனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின்போது ரயில் நிலையத்தில் இருந்த மாநில சட்டமன்ற சபாநாயகர் ஷம்சீர், அமைச்சரின் கை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    உடனே அமைச்சர் வீணா சார்ஜ் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.ஜெயராமன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கண்ணூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் வீணா சார்ஜை நலம் விசாரித்தார். மேலும் அவரது உடல்நலம் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.



     

    பெண்ணியவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல என கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். #SabarimalaProtests #DevaswomsMinister
    பத்தனம்திட்டா:

    சபரிமலை தீர்ப்புக்கு வலுத்து வரும் எதிர்ப்பு போராட்டங்களையும் மீறி ஆந்திராவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரெகானா என இரண்டு பெண்கள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்தை நெருங்கினர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டது.

    இதுபற்றி தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:-

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. உண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. பெண்ணியவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது.



    இன்று கோவிலுக்கு வந்த பெண்களின் பின்னணி குறித்து போலீசார் விசாரிக்கவில்லை. பெண்ணியத்தை நிரூபிக்கவோ, போராட்டம் நடத்தவோ சபரிமலை உகந்த இடம் அல்ல. பெண்ணியவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaProtests #DevaswomsMinister

    ×