என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா வருகிறார் சுபான்ஷு சுக்லா: மத்திய மந்திரி தகவல்
    X

    இந்தியா வருகிறார் சுபான்ஷு சுக்லா: மத்திய மந்திரி தகவல்

    • சுபான்ஷு சுக்லா ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்றார்.
    • இதன்மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா. இவர் அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்றார். அங்கு 14 நாட்கள் தங்கி, ஆராய்சி செய்த அவர் கடந்த, மாதம் 15-ம் தேதி பூமிக்குத் திரும்பினார்.

    இதன்மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

    இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, விரைவில் இந்தியா வருகிறார் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

    வரும் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விண்வெளி தின விழாவில் கலந்துகொள்கிறார். அவர் தனது சொந்த ஊரான லக்னோ செல்லும் முன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×