என் மலர்
நீங்கள் தேடியது "Lok Sabha"
- 33% இடஒதுக்கீடு மசோதா முழுமை பெறவில்லை என்று ராகுல் காந்தி கருத்து.
- நாட்டின் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஆகும்.
பாராளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் 454 வாக்குகள் ஆதரவாகவும், 2 வாக்குகள் எதிராகவும் பதிவாகி உள்ளன.
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 18) துவங்கி வெள்ளி கிழமை (செப்டம்பர் 22) வரை என மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா மீதான விவாதம் நேற்றும், இன்றும் நடைபெற்று வந்தது. இன்று முழுக்க இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், தற்போது மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
- இந்த மசோதாவை மக்களவையில் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று இந்த மசோதா தாக்கல் செய்ய முடிவானது.
புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று பிற்பகல் கூடின. அந்த கூட்டத்தில் முதலில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டன.
மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்நிலையில், மக்களவையில் மகளிர் இட ஓதுக்கீடு மசோதா குறித்து பேச தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கி பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி இன்று உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் டெல்லி சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்டது.
- கலாச்சாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி பேசும்போது ஆம் ஆத்மி கட்சியினர் கூச்சலிட்டனர்.
புதுடெல்லி:
டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார்.
அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து பா.ஜ.க. எம்.பி.க்கள் பேசினர்.
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பா.ஜ.க. பேசிவந்த நிலையில் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் உள்ள இந்த சட்ட மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கலாச்சாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி பேசிக் கொண்டிருக்கும்போது, ஆம் ஆத்மி கட்சியினர் கூச்சலிட்டனர்.
இதனால் கோபமடைந்த அவர், வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத் துறை வரும் என எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் எம்.பி.க்களை மிரட்டும் அவரது இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மசோதாவை முறியடிக்க பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், கட்சி தலைவர்களையும் சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு திரட்டினார்.
- 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார்.
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. எனவே, இந்த அவசர சட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விஷயத்தில் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார்.
அப்போது யூனியன் பிரதேசங்களில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்றும், டெல்லி யூனியன் பிரதேசமாக இருப்பதால், விதிகளை உருவாக்கவும் மத்திய அரசுக்கு முழு உரிமை உண்டு என்றும் அமித் ஷா கூறினார்.
மேலும் இந்த மசோதாவைக் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக இணைந்துள்ள எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனத்தையும் அமித் ஷா முன்வைத்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சிதறிவிடும் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ கவலைப்படவில்லை, கூட்டணியை காப்பாற்ற வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் என சாடினார்.
அமித் ஷா பதிலுரை வழங்கிய பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
- எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இடையூறு செய்வதாக அதிருப்தி
- நேற்று அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரண்டு அவைகளும், குறிப்பாக மக்களவையில் அவை நடவடிக்கை ஏதும் நடைபெறாத நிலை உள்ளது.
இன்று காலை அவை தொடங்கியதும், ஓம் பிர்லா சபாநாயகர் இருக்கைக்கு வரவில்லை. ராஜேந்திர அகர்வால் தலைமை தாங்கினார். அப்போது காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி ''அவை நடவடிக்கைகளை நடத்த, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அவர் எங்களுடைய பாதுகாவலர்'' என்றார்.
உடனே, இன்று அவைத்தலைவராக இருக்கும் ராஜேந்திர அகர்வால், ''இந்த தகவலை அவருக்கு தெரிவிக்கிறேன்'' என்றார்.
முன்னதாக,
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். இதனால் கூட்டத்தொடரின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு மக்களவையில் தொடர்ந்து உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி அடைந்துள்ளார்.
குறிப்பாக நேற்றுமுன்தினம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயல்களால் சபாநாயகர் ஓம் பிர்லா வருத்தமடைந்தார். அவை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்கள் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
நேற்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைப்பதால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது சபாநாயகர் ஓம் பிர்லா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டேன் என கூறியதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகரின் அதிருப்தி குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை நடவடிக்கைகள் நேற்று தொடங்கியபோது ஓம் பிர்லா சபாநாயகருக்கான இருக்கையில் இல்லை. பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி அவையை தலைமை தாங்கி நடத்தினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஒழுங்கை பராமரிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் வழக்கம்போல் அவையில் அமளி நீடித்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
- எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை வரமாட்டேன் என கூறியதாக தகவல்.
- பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி மக்களவையை தலைமை தாங்கி நடத்தினார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். இதனால் கூட்டத்தொடரின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வாறு மக்களைவயில் தொடர்ந்து உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக நேற்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயல்களால் சபாநாயகர் ஓம் பிர்லா வருத்தமடைந்தார். அவை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்கள் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைப்பதால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது சபாநாயகர் ஓம் பிர்லா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டேன் என கூறியதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகரின் அதிருப்தி குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை நடவடிக்கைகள் இன்று தொடங்கியபோது ஓம் பிர்லா சபாநாயகருக்கான இருக்கையில் இல்லை. பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி அவையை தலைமை தாங்கி நடத்தினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஒழுங்கை பராமரிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் வழக்கம்போல் அவையில் அமளி நீடித்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
- மசோதாவை தாக்கல் செய்ய காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இந்த மசோதாவுக்கான எதிர்ப்புகள் அனைத்தும் அரசியல் என அமித் ஷா தெரிவித்தார்.
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரிகள் நியமனம், மாறுதல் தொடர்பான அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிக அதிகாரம் உண்டு. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டத்திற்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதை பாராளுமன்றத்தில் சட்டமாக்க விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார். இதற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்நிலையில், டெல்லி சேவைகள் தொடர்பான அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தாக்கல் செய்ய காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னதாக மசோதா தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது, டெல்லி தொடர்பாக எந்த மசோதாவையும் கொண்டு வருவதற்கு மக்களவைக்கு அதிகாரம் இருக்கிறது என்றும், உச்ச நீதிமன்ற சமீபத்திய தீர்ப்பில் ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
'டெல்லி தொடர்பாக எந்த சட்டத்தையும் இயற்றும் அதிகாரத்தை அரசியலமைப்பு இந்த அவைக்கு வழங்கியுள்ளது. டெல்லி மாநிலம் தொடர்பாக பாராளுமன்றம் எந்தச் சட்டத்தையும் கொண்டு வரலாம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. இந்த மசோதாவுக்கான எதிர்ப்புகள் அனைத்தும் அரசியல். இந்த மசோதாவை கொண்டு வர அனுமதிக்கவேண்டும்' என அமித் ஷா பேசினார்.
- நமது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் டெல்லி மக்களுக்கு எதிரானது என்று ராகவ் சத்தா தெரிவித்தார்.
- மாநிலங்களவையில் மசோதா தோற்கடிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக மக்களவையில் இன்று சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டத்திருத்த மசோதா- 2023 என்ற இந்த மசோதாவை உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் அறிமுகம் செய்து பேசினார்.
இந்த மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா கூறுகையில், இந்த மசோதா முந்தைய அவசரச் சட்டத்தை விட மோசமானது என்றும், நமது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் டெல்லி மக்களுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாக்களிலேயே மிகவும் ஜனநாயக விரோத பேப்பர் என்றும், இது ஜனநாயகத்தை அதிகாரத்துவம் மூலம் மாற்றிவிடும் எனவும் குறிப்பிட்டார்.
இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசாங்கத்திடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் பறித்து ஆளுநர் மற்றும் அதிகாரவர்க்கத்திடம் ஒப்படைக்கிறது. இது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியின் அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்க்கும் எனவும் ராகவ் சத்தா தெரிவித்தார்.
மக்களவையில் இந்த மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடிந்தாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு போதிய உறுப்பினர்கள் இருப்பதால் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
- அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் பேசினார்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், மக்களவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் மசோதாவை அறிமுகம் செய்து பேசினார்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் எதிர்ப்பு தெரிவித்தார். இது கூட்டாட்சி ஒத்துழைப்பு என்ற கருத்தை மீறுவதாக இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் கூறிய அவர், இந்த மசோதா டெல்லி துணைநிலை ஆளுநரின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் என்றார்.
- இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
- உத்தர பிரதேசம் 2-வது இடத்திலும், மகாராஷ்டிரா 3-வது இடத்திலும் உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் குறித்து தெலுங்கானா எம்.பி. கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூ.7,53,860 கோடியாக உள்ளது. அதிக கடன் வாங்கியது தமிழ்நாடு தான்.
இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளது என தெரிவித்துள்ளார்.