என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் எம்.பி"

    • மேல்சபையில் இன்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது.
    • AIMIM தலைவர் அசாதுதீத் ஒவைசி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மேல்சபையில் இன்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன.

    வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்து இருந்தார். வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதாக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று காலை அறிவித்தார்.

    இந்நிலையில் வக்பு வாரிய சட்டத் திருந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத் மற்றும் AIMIM தலைவர் அசாதுதீத் ஒவைசி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    "இந்த மசோதா வக்பு சொத்துக்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை மீது தன்னிச்சையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்றும், முஸ்லிம் சமூகத்தின் மத சுயாட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • வனவிலங்குகள் வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
    • இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனப்பகுதியின் அருகே உள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக வன விலங்குகள் புகுந்து பொதுமக்களைத் தாக்கி வருகிறது. கடந்த மாதம் 31-ம் தேதி யானை தாக்கியதில் லட்சுமணன் (65) என்பவர் பலியானார். கடந்த 10-ம் தேதி மானந்தவாடி பகுதியில் அஜீஷ் (42) என்பவரை காட்டு யானை விரட்டிச் சென்று தாக்கியது. இதில் அவரும் உயிர் இழந்தார். இந்த சம்பவங்கள் வயநாடு மாவட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர்.

    இந்தப் பணியில் தற்காலிக வன ஊழியரும், சுற்றுலா வழிகாட்டியுமான பால் (50) என்பவரும் இருந்தார். இவர் காட்டுப்பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதிக்கு மக்கள் வராமல் இருக்க அவர்களை திருப்பி விட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டு யானை பாலை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வன ஊழியர் பால் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் இறங்கினர். நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது வன ஊழியர் பால் உடலுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சுமார் 4½ மணி நேரம் நீடித்த இந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது.

    வனத்துறை வாகனத்தை முற்றுகையிட்டவர்கள், அதில் வந்த துணை வன அதிகாரி ஷாஜியை தாக்கினர். வாகனத்தையும் சேதப்படுத்தினர். இதனால் நிலைமையை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். இந்த சமய த்தில் அங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். அவர்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    இதற்கிடையே, சம்பவம் குறித்து வயநாடு தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உத்தர பிரதேச மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தில் இருந்த அவர், தனது பயணத்தை நிறுத்திவிட்டு நேற்று மாலை கேரளா சென்றார்.

    இந்நிலையில், இன்று காலை ராகுல் காந்தி வயநாடு மாவட்டம் மானந்தவாடிக்குச் சென்றார். அங்கு யானை தாக்கியதில் பலியான அஜீஷ் வீட்டிற்கு சென்ற அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அஜீஷின் மகன் ஆலனை தனது அருகில் அமரவைத்துப் பேசினார். அஜீஷின் மனைவி ஷீபா, பெற்றோர் ஜோசப்-எல்சி ஆகியோரிடமும் ராகுல் காந்தி பேசினார். அதன்பின், அங்கிருந்து புறப்பட்ட அவர், பலியான பால் வீட்டுக்குச் சென்றார். அங்கு பாலின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் மற்றும் கட்சியினர் சென்றிருந்தனர்.

    • மத்திய அமைச்சரை வீழ்த்தி முதல் முறை எம்.பியாக நாடாளுமன்றம் வந்தார் முன்னாள் ஜேஎன்யூ பல்கலைக்கழக பேராசிரியர் பிமோல் அகோய்.
    • தாய்மார்களையும், விதவைகளையும் பற்றி யோசித்து பாருங்கள். அதன்பின்னர் தேசியவாதம் குறித்து பேசுங்கள்

    பாராளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வரும் நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய எதிர்கட்சி எம்.பிக்கள் பாஜக மீது காரசாரமான முறையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

    அந்த வகையில் வன்முறையால் துண்டாடப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் பாஜக மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சனை வீழ்த்தி வெற்றிபெற்று முதல் முறை எம்.பியாக நாடாளுமன்றம் வந்த முன்னாள் ஜேஎன்யூ பல்கலைக்கழக பேராசிரியர் பிமோல் அகோய்-க்கு நேற்று இரவு கூட்டம் முடியும் சமயத்தில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

    ஏற்கனேவே பலர் கூட்டத்திலிருந்து வெளியேறிய நிலையில் கிட்டத்தட்ட பெரும்பாலும் காலியாக இருந்த இருக்கைகளுக்கு மத்தியில் பிமோல் பேசத் தொடங்கினார். ஆனால் அவரின் பேச்சு அனைவரையும் வாயடைக்கச் செய்வதாக மிகவும் கூர்மையாக இருந்தது.

     

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து அவர் பேசியதாவது, மணிப்பூரில் இன்னும் 60,000 மக்கள் மிகவும் மோசமான நிலையில் நிவாரண முகாம்களில் கடந்த ஒரு வருடமாக வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் மக்களின் அவஸ்த்தையும் கோபமும் என்னைப்போன்ற ஒரு ஒன்றுமற்ற மனிதனை  அமைச்சராக இருந்தவரை வீழ்த்தச் செய்து ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்றத்துக்கு என்னை அனுப்பியுள்ளது. அந்த வலியை எண்ணிப்பாருங்கள். ஆனால் நமது பிரதமர் [மணிப்பூர் விஷயத்தில்] மௌவுனமாக உள்ளார். ஜனாதிபதி உரையிலும் மணிப்பூர் கலவரம் பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெற வில்லை. இந்த மௌனம் சாதரணமானது அல்ல.

    மவுனம் தான் மணிப்பூர் போன்ற தென்கிழக்கு மாநிலங்களிடம் நீங்கள்  பேசும் மொழியா? என்று நீங்கள் அக்கறை காட்டாத மணிப்பூர் மாநிலம் உங்களை பார்த்து கேட்கிறது, மணிப்பூரில் 200 க்கும் மேற்பட்டோர் கலவரத்தால் இறந்தனர். உள்நாட்டுப்போர் நடப்பது போன்ற சூழலே அங்கு உள்ளது . ஆனால் கடந்த 1 வருடமாக அது யார் கண்களுகும் தெரியவில்லை.

    உங்கள் நெஞ்சில் கைவைத்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடற்று நிற்பவர்களையும், தாய்மார்களையும், விதவைகளையும் பற்றி யோசித்து பாருங்கள். அதன்பின்னர் தேசியவாதம் குறித்து பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் மணிப்பூரை பற்றி மோடி பேசத் தொடங்கினாள் நான் அமைதி ஆகிறேன் என்று தெரிவித்தார் 

    • உருது கவிஞரும் காங்கிரஸ் எம்.பி.யுமான இம்ரான் பிரதாப்கர் மீது குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
    • படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

    சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு கவிதையைப் பதிவிட்டதற்காக உருது கவிஞரும் காங்கிரஸ் எம்.பி.யுமான இம்ரான் பிரதாப்கர் மீது குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

    இம்ரான் பதிவிட்ட கவிதை வெறுப்பு மற்றும் வன்முறை செய்தியைப் பரப்புவதாகக் கூறி, போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். வழக்கை ரத்து செய்ய கோரி இம்ரான் பிரதாப்கர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் எஃப்ஐஆரை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றம் சென்றார்.

    இதன் மீதான விசாரணை தற்போது நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இம்ரானுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார். எதிர் தரப்பில் குஜராத் அரசு வழக்கறிஞர் ஆஜரானார்.

    விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், குஜராத் காவல்துறையும் உயர் நீதிமன்றமும் இந்த உருது கவிதையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது. தயவுசெய்து உங்கள் புத்தியை பயன்படுத்துங்கள். இது ஒரு கவிதை மட்டுமே. எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல. "யாராவது வன்முறையில் ஈடுபட்டாலும் கூட, நாம் அதில் ஈடுபடுவதில்லை" என்பதே இந்தக் கவிதையின் செய்தி. படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. எஃப்ஐஆரில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    ×