என் மலர்
நீங்கள் தேடியது "Asaduddin Owaisi"
- அனைத்து எதிர்க்கட்சிகளும், பாஜக வெற்றி பெற உதவுகின்றன.
- நேரு பிரதமராக இருந்தபோது பாபர் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டன.
அகமதாபாத்:f
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
இன்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் யார் சிறந்த இந்து என்பதை காட்டிக் கொள்வதில் பிரதமர் மோடியுடன் போட்டி போட்டுக் கொண்டிருப்பது தெரிகிறது. அது டெல்லி முதல்வராக இருந்தாலும் சரி, காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் சரி, அல்லது சமாஜ்வாதி கட்சி அல்லது ராஷ்டிரிய ஜனதாதள கட்சியாக இருந்தாலும், இதை காட்டிக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள்.
காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும், வெறுப்புடன் சேர்ந்து வெறுப்பை எதிர்த்துப் போராடுகிறார்கள். இதன் மூலம் பாஜக தேர்தலில் வெற்றி பெறுகிறது. பாஜக ஏன் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகிறது என்பது குறித்து ராகுல் காந்தி அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஜெய் சியா ராம் குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸுக்கு இதுபோன்ற அறிக்கைகள் வருவது சகஜம், ராகுலின் இது போன்ற கருத்து எனக்கு ஆச்சரியமாக இல்லை,
நேரு பிரதமராக இருந்தபோது பாபர் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டன. பாபர் மசூதி வலுக்கட்டாயமாக திறக்கப்பட்டபோது, ராகுலுடையது தந்தை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். பாபர் மசூதி உடைக்கப்பட்டபோது பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தார். எனவே, காங்கிரசார் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது இயல்பானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சீன ஆக்கிரமிப்பை தடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன்.
- நீங்கள் அனைவரும் அரசியல் சக்தியாக வரவில்லை என்றால் இங்கு எதுவும் மாறாது.
மத்தியப் பிரதேசத்தில் விரைவில் மாநகராட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சியினர் (ஏஐஎம்ஐஎம்) சில பகுதிகளில் போட்டியிடுகிறது.
இதையொட்டி, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி நேற்று தனது கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக பறை சாற்றும் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டில் காங்கிரஸ் வீணான சக்தியாக மாறிவிட்டது. அது அதன் இருப்பை இழந்துவிட்டது. அதனால் காங்கிரசுக்காக உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள்.
இந்திய நிலத்தை சீன நாடு ரகசியமாக அத்துமீறி ஆக்கிரமித்து வருவதால், எல்லையில் கவனம் செலுத்தி சீன ஆக்கிரமிப்பை தடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன். இதற்கு யார் காரணம் என்று காங்கிரசையும், பாஜகவையும் நான் கேட்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அரசியல் சக்தியாக வரவில்லை என்றால் இங்கு எதுவும் மாறாது.
இவ்வாறு அவர் பேசினார்.
மும்பை:
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி நேற்று மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் நகருக்கு வந்தார். அங்கு சதார் பஜார் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்க சென்றார். அப்போது வெளியே நிறுத்தப்பட்ட எம்.பி.யின் காரின் முன்பகுதியில் நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பதை, அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தான்கிதி என்பவர் கவனித்தார். இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக எம்.பி.யின் கார் டிரைவரிடம் ரூ.200 அபராதம் செலுத்தும்படி கூறினார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அசாதுதீன் ஒவைசி எம்.பி.யின் ஆதரவாளர்கள் அங்கு வந்தனர். இதனால் பரபரப்பு சூழல் உருவானதால் அங்கு போலீஸ் அதிகாரிகளும் விரைந்து வந்தனர். ஆனால் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.பி.யின் காருக்கு அபராதம் விதிப்பதில் உறுதியாக இருந்தார். இதனால் வேறு வழியின்றி எம்.பி.யின் கார் டிரைவர் ரூ.200 அபராதம் செலுத்தினார்.
இந்தநிலையில் எம்.பி.யின் காருக்கு துணிச்சலுடன் அபராதம் விதித்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தான்கிதியை சோலாப்பூர் நகர போலீஸ் கமிஷனர் ஹரிஷ் பைஜால் நேரில் அழைத்து ரூ.5 ஆயிரம் வெகுமதி அளித்து பாராட்டினார்.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து அங்கு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சந்திரசேகராவின் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி, காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி, பா.ஜனதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவை இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆதிலாபாத்தில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பேசும் போது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியை கடுமையாக சாடினார். அக்கட்சியுடன், சந்திரசேகரராவின் கட்சி ரகசியமாக நட்பு வைத்து உள்ளது. மஜ்லிஸ் கட்சியினருக்கு சந்திரசேகரராவ் பிரியாணியை அனுப்புகிறார் என்று கூறினார்.
இதற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
குகட்பாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒவைசி பேசியதாவது:-

பிரதமர் மோடி திடீரென்று பாகிஸ்தானுககு சென்று முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மோடியை நவாஸ்செரீப் விருந்துக்கு அழைக்கவில்லை. ஆனால் நவாஸ்செரீப் கையை பிடித்தபடி அவரது வீட்டுக்குள் மோடி சென்றார். அப்போது அங்கு என்ன சாப்பிட்டார் என்பதை அமித்ஷாவிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #AsaduddinOwaisi #AmitShah #ChandrasekharRao
தெலுங்கானா மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 7-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்கு நிர்மல் தொகுதியில் அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இத்தாஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவர் அசதுத்தீன் ஒவைசி எம்.பி., பிரசாரம் செய்தார்.
அப்போது அவர், “இந்த தொகுதியில் நான் பிரசாரத்தை ரத்து செய்தால் ரூ.25 லட்சம் லஞ்சம் தருவதாக காங்கிரஸ் கட்சி பேரம் பேசியது. இது தொடர்பாக இடைத்தரகர் ஒருவர் எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஒருவருடன் தொலைபேசியில் பேசி உள்ளார். அந்த ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது” என்ற திடுக்கிடும் புகாரை கூறினார்.
ஆனால் இந்த புகாரை அந்த தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நிராகரித்தனர்.