என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாதுதீன் ஓவைசி"

    • உமர் நபி தற்கொலை குண்டுவெடிப்பை "தியாகம்" என்று நியாயப்படுத்தும் பழைய வீடியோ வெளியானது
    • இதுபோன்ற செயல்கள் நாட்டின் சட்டத்திற்கும் எதிரானவை.

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி அன்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. பலர் காயம் அடைந்தனர்.

    இது சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என என்ஐஏ நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவத்தில் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட காரை அவருக்கு வாங்கி கொடுத்ததாக காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், டெல்லியில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் உமர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில், தற்கொலை படை தாக்குதலை சிலர் தவறாக பேசுகிறார்கள், உண்மையில் அது தியாக நடவடிக்கை என உமர் பேசியுள்ளான்.

    இந்நிலையில், உமர் பேசிய பழைய வீடியோ குறித்து AIMIM கட்சி தலைவர் ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் நபி தற்கொலை குண்டுவெடிப்பை "தியாகம்" என்று நியாயப்படுத்தும் விதமாக ஒரு பழைய வீடியோ உள்ளது. இஸ்லாத்தில் தற்கொலை செய்து கொள்வது ஹராம், அப்பாவிகளைக் கொல்வது ஒரு பெரிய பாவம். இதுபோன்ற செயல்கள் நாட்டின் சட்டத்திற்கும் எதிரானவை. இது பயங்கரவாதம், வேறு எதுவும் இல்லை.

    ஆபரேஷன் சிந்தூர் மற்றும் மகாதேவ் ஆகியவற்றின் போது அமித்ஷா கடந்த ஆறு மாதங்களில் எந்த உள்ளூர் காஷ்மீரியும் பயங்கரவாதக் குழுக்களில் சேரவில்லை என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார். இந்தக் குழு எங்கிருந்து வந்தது? இந்தக் குழுவைக் கண்டறியத் தவறியதற்கு யார் பொறுப்பு?" என்று பதிவிட்டுள்ளார். 

    • தற்போதைய சூழலில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தால் நாட்டில் சமூக நிலையற்ற தன்மையை ஏற்படும்.
    • இந்த மசோதாவை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் நிராகரித்து விட்டது.

    நாடு முழுவதும் உள்ள வக்பு வாரியங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை முறைப்படுத்த வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழு, பா.ஜ.க. கூட்டணி எம்.பி.க்கள் தெரிவித்த 14 திருத்தங்கள் ஏற்றுக் கொண்டு, எதிர்க்கட்சியினரின் 44 திருத்தங்களை நிராகரித்தது. இறுதியாக, 655 பக்க அறிக்கை தயார் செய்யப்பட்ட நிலையில், அதற்குக் குழுவில் உள்ள 14 உறுப்பினர்கள் ஆதரவும், 11 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். பின்னர், பாராளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பாராளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இந்த நிலையில், தற்போதைய சூழலில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தால் நாட்டில் சமூக நிலையற்ற தன்மையை ஏற்படும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அசாதுதீன் ஓவைசி, "அரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். தற்போதைய சூழலில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தால் நாட்டில் சமூக நிலையற்ற தன்மையை ஏற்படும். இந்த மசோதாவை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் நிராகரித்து விட்டது"

    "நீங்கள் இந்தியாவை 'விக்சித் பாரத்' ஆக்க விரும்புகிறீர்கள், எங்களுக்கு 'விக்சித் பாரத்' வேண்டும். இந்த நாட்டை 80கள் மற்றும் 90களின் முற்பகுதிக்கு மீண்டும் கொண்டு செல்ல விரும்புகிறீர்கள், அது உங்கள் பொறுப்பு. இது எனது சொத்து, யாராலும் கொடுக்கப்படவில்லை. அதை நீங்கள் என்னிடமிருந்து பறிக்க முடியாது. வக்பு என்பது எனக்கு ஒரு வழிபாட்டு முறை என்று கூறினார். 

    ×