என் மலர்

  நீங்கள் தேடியது "Islam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்.
  • இறையருளைப்பெற்று இம்மையிலும் மறுமையிலும் நற்பலன்களைப்பெறுவோம், ஆமீன்.

  தான் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருப்பது இயல்பு. அதிலும் மனித மனம் பேராசை மிக்கது. 'எதிலும் வெற்றி, எல்லாவற்றிலும் வெற்றி' என்ற எண்ணமே இன்றைய மனித சமுதாயத்தில் மேலோங்கி இருக்கிறது.

  ஆனால், எல்லாரும் வெற்றியாளர் ஆகிவிட முடியுமா?, எல்லோரும் பெரும் பாக்கியம் பெற்றவர்களாக ஆக முடியுமா?

  ஆம், முடியும் என்று ஆணித்தரமாக கூறுகிறது இஸ்லாம். அத்துடன் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் இஸ்லாம் வழிகாட்டுகிறது.

  இதற்கு முதலில் நீங்கள் ஏக இறைவன் அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும், அவனை முறைப்படி வணங்க வேண்டும். இறைவன் வகுத்த வழியில் உங்கள் வாழ்க் கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

  ஈமான் (இறையச்சம்), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் கொண்டது இஸ்லாம். இந்த கடமைகள் குறித்த விவரங்கள் உள்பட மனித வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று திருக்குர்ஆன் விரிவாக எடுத்துரைக்கிறது.

  ஒரு முஸ்லிம் இந்த கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும், இஸ்லாமிய வழியில் மனித வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை நபிகள் பெருமகனார் முகம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டி, நமக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.

  அவற்றை பின்பற்றி நடந்தால் நமது வாழ்க்கையும் வெற்றியாகும், நாமும் வெற்றியாளர்களில் ஒருவராக, பெரும்பாக்கியம் நிறைந்தவர்களாக இந்த உலகில் வாழ முடியும். அதுமட்டுமின்றி மறுமையிலும் நமது வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று நம்பிக்கை அளிக்கிறது திருக்குர்ஆன்.

  இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

  "மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்". (திருக்குர்ஆன் 2:21.)

  "எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து (அவனுக்கு மாறு செய்வதை விட்டு) விலகிக் கொண்டார்களோ அத்தகையவர்தாம் நிச்சயமாக பெரும் பாக்கியம் பெற்றவர்கள்". (திருக்குர்ஆன் 24:52)

  அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்து வந்தால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளான்:

  "(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களைப் பூமிக்கு அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். மேலும், அவன் தன்னையே வணங்கும்படியாகவும், யாதொன்றையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கின்றான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள் தாம்". (திருக்குர்ஆன் 24:55).

  "(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து (அவனுடைய) தூதரை (முற்றிலும்) பின்பற்றி வாருங்கள். நீங்கள் (இறைவனுடைய) அருளை அடைவீர்கள்" (திருக்குர்ஆன் 24:56).

  "பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள். திண்ணமாக, தொழுகை ஒரு பாரமான செயல்தான்; ஆனால் இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற அடியார்களுக்கு அது பாரமான செயலே அல்ல" (திருக்குர்ஆன் 2:45).

  வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இறைவன் நமக்கு காட்டியுள்ள இந்த வழிகளை பின்பற்றி வாழ்வோம், இறையருளைப்பெற்று இம்மையிலும் மறுமையிலும் நற்பலன்களைப்பெறுவோம், ஆமீன்.

  பேராசிரியர் அ. முகம்மது அப்துல் காதர், சென்னை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வரலாற்றில் அதிகமாக பேசப்படாத ஒரு நபித்தோழர் உண்டு.
  • நபித்தோழர் ஜுலைபீப் வாழ்வியலில் நிகழ்வுகள் நமக்கு கற்றுத் தரும் பாடமாக இருக்கிறது.

  அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் நபிகளார் வெளித் தோற்றங்களை பார்ப்பதில்லை. அதே போல ஈமான் கொண்ட நல்லடியார்களும் வெளித் தோற்றங்களை பார்ப்பதில்லை. நபித்தோழர் ஜுலைபீப் வாழ்வியலில் நிகழ்வுகள் நமக்கு கற்றுத் தரும் பாடமாக இருக்கிறது.

  வரலாற்றில் அதிகமாக பேசப்படாத ஒரு நபித்தோழர் உண்டு. ஜுலைபீப் என்பது அவரது பெயராகும். அவரது முகம் மற்றும் உடல் தோற்றம் அழகு குறைந்ததாக காணப்பட்டது. இதனால் இவருக்கு எவரும் பெண் தர முன்வரவில்லை. அவரது உணர்வுகளை புரிந்து கொண்ட நபிகளார் குறிப்பிட்ட ஒரு வீட்டில் பெண் இருக்கிறாள். நீர் போய் அவ்வீட்டில் பெண் கேளும் என்றார்கள்.

  அந்த வீட்டிற்கு சென்று ஜுலைபீப் பெண் கேட்டார். அந்த வீட்டார் பெண் கொடுக்க மறுத்து விட்டார்கள். மனமுடைந்த நிலையில் திரும்பி வந்த ஜுலைபீப் நடந்தவற்றை நபியிடம் சொன்னார். பின்பு ஜுலைபீப்பை நபிகளார் வேறொரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வீட்டிலிருந்தவர் தன் மனைவியிடம் இதுபற்றி ஆலோசித்தார். அப்போது அவரது மனைவி, தன் மகளோ சிறந்த அழகி.

  அப்படிப்பட்டவரை அழகில் குறைந்தவருக்கு திருமணம் செய்து கொடுப்பது சரியாக இருக்குமா? என்று தயங்கினார். இதைக்கேட்டுக் கொண்டிருந்த அந்த வீட்டுப்பெண் தன் பெற்றோரை அழைத்து இவ்வாறு கூறினார்: "அல்லாஹ்வின் தூதரே நம் வீடு தேடி வந்து ஜுலைபீப் பிற்கு பெண் கேட்கிறார்கள். கேட்பது நபிகளார் என்பதால் நான் அதற்கு சம்மதிக்கின்றேன்" என்றார். இதையடுத்து அவர்கள் திருமணம் சிறப்பாக நடந்தது. இவர்களின் வாழ்க்கை மிகச் சிறப்பாகவும் செல்வச் செழிப்புடையதாகவும் அமைந்தது.

  காலங்கள் பல உருண்டோட, போருக்கான பிரகடம் செய்யப்பட்டது. அப்போரில் ஜுலைபீபும் கலந்து கொண்டார். போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்ற போதிலும் ஜுலைபீப் வீரமரணம் அடைந்தார். யுத்த களத்தில் ஜுலைபீப்பின் உடலை நபிகளார் தேடச் சொன்னார்கள். ஜுலைபீப் (ரலி) ஏழு எதிரிகளுக்கு மத்தியில் வீர மரணமடைந்தவராக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலைப் பார்த்த நபிகளாரின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

  "இவர் என்னைச் சேர்ந்தவர், நான் அவரைச் சேர்ந்தவன்" என்று நபிகளார் கூறினார்கள். அதன்பின் நபிகளாரே தன் கைகளால் ஜுலைபீபின் உடலை தூக்கிச்சென்று அடக்கம் செய்தார்கள். இது ஜுலைபீப்பிற்கு கிடைத்த மகத்தான பெரும் பாக்கியமாகும். அழகும் அழகின்மையும் இறைவன் தந்ததே. எனவே, எதற்காகவும் எவரையும் புறம் தள்ளுவதோ, அல்லது ஒதுக்கி வைப்பதோ கூடாது என்பதையே நபிகளாரின் இந்த வாழ்வியலில் நிகழ்வுகள் நமக்கு கற்றுத் தரும் பாடமாக இருக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருக்குர்ஆனில் சுமார் ஒன்பது இடங்களில் வணிகம், வியாபாரம் குறித்து பேசப்பட்டிருக்கின்றன.
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே மிகப்பெரிய வணிகர்தான்.

  பொருள்கள்தான் இன்று வாழ்க்கையை தீர்மானிக்க கூடியதாக இருக்கிறது. கொடுப்பதும்-வாங்குவதும்தான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வணிகத்திற்கு முக்கிய இடத்தை இஸ்லாம் வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

  திருக்குர்ஆனில் சுமார் ஒன்பது இடங்களில் வணிகம், வியாபாரம் குறித்து பேசப்பட்டிருக்கின்றன. மத்யன்வாசிகள் என்ற சமூகத்திற்கு அளவையில் சரியாக அளந்துகொடுக்க வேண்டும் என்பதைப் பயிற்றுவிக்க சுஐப் எனும் இறைத்தூதரையே அந்த சமூக மக்களுக்கு இறைவன் அனுப்பி வழிகாட்டியிருக்கிறான் என்றால் வணிகத்திற்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம்.

  இவ்வளவு ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே மிகப்பெரிய வணிகர்தான். தனது இளமைக்காலத்தின் பெரும்பகுதியை வணிகம் சார்ந்த பயணத்திற்காக அவர் செலவளித்திருக்கிறார். வணிகத்திற்காக நான்கு முறை ஏமனுக்கும், இரண்டு முறை ஷாம் நாட்டிற்கும் சென்று வந்திருக்கிறார்.

  வியாபாரத்தில் நேர்மையாளர், உண்மையாளர், நம்பிக்கையாளர் என்ற நற்பெயர் பெற்று சிறந்து விளங்கியவர் நபியவர்கள். அந்த காலத்தில் வணிகர்கள், தரகர்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தனர். நபியவர்கள்தான் வணிகர் (துஜ்ஜார்) சமுதாயமே! என முதலில் அழைத்தார்கள். வணிகர்களுக்கு உண்டான முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தினார்கள். நேர்மையுடனும், நீதியுடனும் நடந்துகொள்ள வலியுறுத்தினார்கள்.

  'உண்மை பேசி நாணயத்துடன் நடந்துகொள்ளும் ஒரு வணிகர், மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் ஆகியோருடன் இருப்பார்கள்' என்று நபியவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி).

  'விற்பதிலும், வாங்குவதிலும் மென்மையாக நடந்துகொண்ட மனிதரை சுவர்க்கத்தில் அல்லாஹ் நுழைய வைப்பான்' எனவும், 'கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கடனைக் கோருவதிலும் மென்மையுடனும், நற்பண்புடனும் நடந்து கொள்ளும் மனிதர்மீது அல்லாஹ் அருள்பொழிவான்' எனவும் நபியவர்கள் வாக்குறுதி தருகிறார்கள்.

  வியாபாரத்தில்; வணிகத்தில் வெற்றிபெற வேண்டுமானால் நேர்மையாக செயல்பட முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள். ஒருபொருள் சேதமடைந்திருக்கிறது என்று சொன்னால் அந்தப்பொருளை விற்கக்கூடாது அல்லது அந்த பொருளை விற்கும்பொழுது வாங்குபவர்களிடம் அது சேதமடைந்த விவரத்தை கூறிவிட்டுதான் விற்க வேண்டும். இதுதான் இஸ்லாம் சொல்லும் வழிமுறை.

  இது இன்று பின்பற்றப்படுகிறதா? பொருள் சேதமடைந்திருந்தாலும் பசைபோட்டு ஒட்டி யாருக்காவது விற்று காசாக்குகிறார்கள். காலாவதியாகிவிட்ட பொருளை யாருக்கு தெரியப்போகிறது என்று விற்று காசாக்குகிறார்கள். பொருள்களில் கலப்படம் செய்து விற்று காசாக்குகிறார்கள். எடை குறைவாக போட்டு விற்று காசாக்குகிறார்கள். பொருட்களை பதுக்கி வைத்து தட்டுப்பாடு வரும்போது விற்று காசாக்குகிறார்கள். இப்படித்தான் வணிகம் போய்க்கொண்டிருக்கிறது. இப்படி செய்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

  'அளவையிலும், நிறுவையிலும் மோசடி செய்பவர்களுக்கு கேடு உண்டாகும்' என்று திருக்குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது. 'பதுக்கல் செய்பவன் பாவியாவான்' என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.

  நபியவர்கள் சொன்னார்கள் 'மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு மனிதர் தாம் சம்பாதித்தது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழியிலா, அனுமதிக்கப்படாத (ஹராமான) வழியிலா என்பதைப் பொருட்படுத்தமாட்டார்கள்' (நூல்: புகாரி).

  ஒருமுறை நபியவர்களை பார்த்து 'யாவற்றிலும் சிறந்த சம்பாத்தியம் எது?' என்று வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் 'ஒருவன் தன் கையால் உழைப்பதும், மோசடி செய்யாமல், பொய் பேசாமல் இருப்பதும் ஒருவன் நடத்தும் வணிகமும் தான்' (நூல்: முஸ்னது அஹ்மத்).

  நபிகளாரின் கூற்றுப்படி சிறந்த சம்பாத்தியமாக நேர்மையான வணிகம் இருக்கிறது. நபியவர்களின் வலியுறுத்தலின்படி வணிகத்தை, வியாபாரத்தை மோசடி செய்யாமல் நேர்மையுடன் நடத்த வேண்டும். இன்னும் சொல்லப்போனால் வணிகத்தை தர்மத்துடன் கலந்து நடத்த வேண்டும். இதுவே இறைவனின் விருப்பமாகும். நபியவர்களின் வழிமுறையாகும்.

  வி. களத்தூர் பாரூக்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மழை நீரைச் சேமிப்பது குறித்தும் திருக்குர்ஆன் அழகாக விளக்கியுள்ளது.
  • விவசாயம் செழிக்க நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய கடமையை இஸ்லாம் நம் மீது விதிக்கிறது..

  விவசாயம் மனித வாழ்வில் மூச்சுக் காற்றாகும். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தை பேணிப் பாதுகாத்தல் அவசியமாகும். உலகில் ஏற்படும் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வாக, பல தருணங்களில் தன்னை நிலைநிறுத்தும் இஸ்லாம். விவசாயம், நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்தும் பல இடங்களில் பதிவுசெய்கிறது. விவசாயம் செழுமைப் பெறுவதற்காக மழை மூலம் நீரைப் பூமிக்கு இறக்கி வைப்பதாக திருக்குர் ஆன் கூறுகிறது.

  வானத்திலிருந்து "அருள் வளமிக்க" தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம். (திருக்குர்ஆன் 50 : 9). கடல் நீர் ஆவியாகி பிறகு மழையாய் மறுபடியும் பூமிக்கு வருகிறது. இது இயற்கையின் அழகிய அமைப்பு. நாம் மழைநீரைச் சரியான முறையில் சேமித்து நமது வாழ்வாதாரத்திற்குப் பயனாக அமைத்துக்கொள்வது மனித சமூகத்தின் முதல் கட்டப் பணியாகும்.

  மழை நீரைச் சேமிப்பது குறித்தும் திருக்குர்ஆன் அழகாக விளக்கியுள்ளது. காற்றைச் சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர், வானிலிருந்து நீர் பொழிவித்து, அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம். நீங்கள் அதனைச் சேமித்துவைப்போராய் இல்லை. (திருக்குர்ஆன் 15:22) நம் வருங்கால தலைமுறைகளின் வாழ்க்கை சீராக அமைவதற்கும், தண்ணீர் பற்றாக்குறை என்ற வார்த்தை உயிரற்று போவதற்கும் மழை நீர் சேமிப்பு நம் அன்றாட செயல்பாடுகளின் பட்டியலில் ஒன்றாக அமைதல் வேண்டும். மழை அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது.

  அதன் மூலம் பெறப்படும் தண்ணீரும் பொதுவானது‌. தனக்குக் கிடைத்த நீரை தன் தேவைகளுக்குப் போக மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது மனித சமூகத்தின் கடமையாகும். மற்றவர்களுக்குப் பகிராமல் தன்னகத்தே வைத்துக் கொள்வது மிகப்பெரிய அநியாயமாகும். இவ்வாறு செய்வதை நபியவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். (தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், (அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்ததாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி)

  மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. அவர்களில் ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன். (நூல்: புகாரி) கைப்பிடியளவு தண்ணீர் கிடைத்தாலும் அதனை வீண் விரயம் செய்வதாகாது. தண்ணீரை அசுத்தம் செய்வதை நபிமொழிகள் தடை செய்கின்றன.

  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உறங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும், பானத்தையும் மூடிவையுங்கள்'' என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி) வாழ்வாதாரத்தின் மையவோட்டமாக திகழும் விவசாயம் செழிக்க நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய கடமையை இஸ்லாம் நம் மீது விதிக்கிறது.. நிலத்தடி நீரைப் பாதுகாத்து வருங்கால தலைமுறைகளிடம் ஒப்படைப்பது தண்ணீருக்கு நாம் செய்யும் கடமையாகும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எல்லா கால கட்டங்களிலும் இறை வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட மனிதர்களும் வாழ்வார்கள்.
  • ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு கதாபாத்திரமாக அல்லாஹ் படைத்துள்ளான்.

  முஸ்லிமாக இருக்கிற ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை கடமைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானதுதான் மனிதப் படைப்பின் நோக்கத்தை அடுத்தவருக்கும் எடுத்துச் சொல்வது.

  ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு கதாபாத்திரமாக அல்லாஹ் படைத்துள்ளான். மனிதனும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப செயல்படுகிறான். உதாரணமாக: அப்பா, அம்மா, குழந்தை, மகன், மகள், சகோதரன், சகோதரி என்று அவரவர்கள் தங்களது பங்களிப்பை செவ்வனே நிறைவேற்றுகின்றனர். அதேவேளை இந்தக் கதாபாத்திரங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வழிமுறையையும் இறைவன் மிகத்தெளிவாக வரையறை செய்துள்ளான்.

  அந்த வழிகாட்டும் முறை இன்று நேற்று தொடங்கியதல்ல. மாறாக, முதல் மனிதர் ஆதம் (அலை) எப்போது இந்த பூமிக்கு வந்தாரோ அன்று முதல் இந்த வழிகாட்டுதலும் கூடவே வந்துவிட்டது. மனிதர்களை படைத்தது ஏன் என்ற காரணத்தை பின்வருமாறு இறைவன் குறிப்பிட்டுக் காட்டுகிறான்: "நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை". (திருக்குர்ஆன் 51:56) உலகில் வாழும் மனிதர் அனைவரும் தங்களைப் படைத்த இறைவனை வணங்க வேண்டும், அவனுக்கு மட்டுமே கீழ்படிந்து நடக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கித்தான் ஒவ்வொரு கதாபாத்திரமும் நடைபோட வேண்டும் என்று இறைவன் விரும்புகின்றான்.

  எல்லா கால கட்டங்களிலும் இறை வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட மனிதர்களும் வாழ்வார்கள். ஏற்றுக்கொள்ளாத மனிதர்களும் வாழ்வார்கள். ஏற்றுக்கொண்டவர்கள் ஏற்றுக்கொள்ளாத மனிதர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்பது இறைவனின் கட்டளை. அதற்காகத்தான் இறைத்தூதர்கள் வருகை புரிந்தனர். இந்தப் பணியில் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஆயினும் மனம் தளராமல் இந்தப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் செய்த சீர்திருத்தத்தின் காரணத்தால்தான் இன்று உலகில் பலகோடி பேர் இறைநம்பிக்கையாளர்களாக திகழ்கின்றனர்.

  இப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இல்லை. எனில் அந்தப் பணியை செய்வது யார்? அந்த இறைத்தூதரை ஏற்று வாழும் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளர்கள் மீதும் இது அடிப்படை கடமையாகும். இறுதி இறைத்தூதரை ஏற்றுக்கொண்ட மக்களை அருள்மறை குர்ஆனில் இறைவன் சிலாகித்துக் கூறுகின்றான். சிறந்த சமுதாயத்தினர் என்று புகழாரம் சூட்டுகின்றான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற பணியை இனிமேல் செய்யவேண்டியது பொறுப்பு அவர்களைச் சாரும் என்ற காரணத்தால் மட்டுமே அவர்கள் சிறப்புக்குரியவர்கள் என்றும் கூறுகின்றான்.

  அல்லாஹ் கூறுகின்றான்: "மேலும் இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் 'உம்மத்தன் வஸத்தன்' (சமநிலையுடைய சமுதாயமாக) ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாயும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராயும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக". (திருக்குர்ஆன் 2:143) எனவே முஸ்லிமாக இருக்கிற ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை கடமைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானதுதான் மனிதப் படைப்பின் நோக்கத்தை அடுத்தவருக்கும் எடுத்துச் சொல்வது.

  இங்கே இன்னொன்றையும் நினைவில் இருத்த வேண்டும். என்னவென்றால், இந்தக் கடமையில் நாம் தவறும் பட்சத்தில் மறுமையில் இதற்காக இறைவனிடம் பதில் சொல்ல வேண்டிவரும் என்பதையும் மறந்துவிடலாகாது. சொல்லாலும் செயலாலும் ஏனையோருக்கு சான்று பகர்வோராக மாறும்போதுதான் நாம் முழுமையான முஸ்லிமாக மாறுகிறோம். அப்போதுதான் இறைவனின் கூற்றுப்படி நாமும் சிறந்த சமூகமாகத் திகழ முடியும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நலிந்தவர்களின் உரிமைகளை பறிக்காமல், அவர்களின் உரிமைகளை வழங்கிட இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதன்படி நடக்க நாம் அனைவரும் உறுதி கொள்வோம்.
  நலிந்தவர்களின் உரிமைகளை மீட்டுக்கொடுப்பதில் இஸ்லாம் முனைப்புக் காட்டுகிறது. சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க பலசாலிகளுடன் போட்டி போட்டு தங்களின் உரிமைகளை போராடி பெறுவதில் பலமிழந்து பின்தங்கி இருப்பவர்கள்தான் இந்த நலிந்த பிரிவினர்.

  தங்களின் உரிமைகளையும், சலுகைகளையும் பெறமுடியாமல் தவியாய் தவிக்கும் இவர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களின் இயலாமையும், பலவீனமும் காரணமாக அமைந்து விடுகிறது. இந்த பிரிவினர் சமுதாயத்தில் பலவிதமான முகங்களாக பரவலாக காணப்படுகின்றனர்.

  இவர்களின் கண்ணீரைப் போக்க, துயரங்களை துடைக்க இஸ்லாம் பாடுபடுகிறது, ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  பராஉ பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்: “நபி (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவற்றில் ஒன்று ‘நலிந்தவருக்கு உதவுவது’ என்றார்கள்”. (நூல்: புகாரி)

  ‘கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும், ஏழைகளுக்காகவும் பாடுபடுபவர் இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார், அல்லது இரவில் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

  “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘நான் இந்த அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய்-தந்தை உண்டா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’, என்றார். ‘அவ்வாறாயின் அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்று கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

  முஸ்அப் பின் ஸஅத் (ரலி) அறிவிக்கிறார்: “என் தந்தை ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ‘தம் வீரச்செயல்களின் காரணத்தால் தமக்குப் பிறரைவிட ஒரு சிறப்பு இருக்கவேண்டும். (போரில் கிடைக்கும் செல்வத்தில் அதிகப்பங்கு கிடைக்க வேண்டும்)’ எனக் கருதினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உங்களிடையேயுள்ள நலிந்தவர்களின் பொருட்டால்தான் உங்களுக்கு (இறைவனின் தரப்பிலிருந்து) உதவி கிடைக்கிறது’ என்று கூறினார்கள்”. (நூல்: புகாரி)

  “இறைவனின் உதவி இந்த சமுதாயத்திற்கு கிடைப்பதெல்லாம் நலிந்தவர்களின் பிரார்த்தனையாலும், அவர்களின் தொழுகையாலும், அவர்களின் தூய எண்ணத்தினாலும்தான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: முஸ்அப் பின் ஸஅத் (ரலி), நூல்: நஸயீ)

  “என்னை நலிந்தவர்களுடன் தேடிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: நஸயீ)

  “சொர்க்கவாசிகள் யார் என்று நான் உங்களுக்கு தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) நலிந்தவர்கள்; பணிவானவர்கள். அவர்கள் இறைவனின் மேல் ஆணையிட்டு எதையேனும் கூறினால், இறைவன் அதை அவ்வாறே நிறைவேற்றி வைப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர் : ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி), நூல்: புகாரி)

  ஆபூபக்கர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்த போது, அவர்கள் ஆற்றிய முதல் உரையில், ‘மக்களே! நான் உங்கள் மீது தலைமை பொறுப்பேற்றுள்ளேன். நான் உங்களைக் கொண்டு உயர்ந்தவன் அல்ல. நான் நல்லது செய்தால், எனக்கு உதவிடுங்கள். நான் தவறு செய்தால் என்னை நேராக வழி நடத்துங்கள். உண்மை அமானிதமாகும். பொய் மோசடியாகும். உங்களில் நலிந்தவர் என்னிடம் பலசாலி ஆவார். அவரின் (இழந்த) உரிமைகளை மீட்டுக் கொடுப்பேன். உங்களில் பலசாலி என்னிடம் பலம் அற்றவர் ஆவார். அவரிடமிருந்து நலிந்தவரின் உரிமையை மீட்டெடுப்பேன்’ என்று சபதம் எடுத்தார்கள்.

  “இறைவா! பெண்கள், அநாதைகள் ஆகிய இரு நலிந்த பிரிவினரின் உரிமைகளை நான் பாழ்படுத்துவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்”.

  நலிந்தவர்களின் உரிமைகளை பறிக்காமல், அவர்களின் உரிமைகளை வழங்கிட இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதன்படி நடக்க நாம் அனைவரும் உறுதி கொள்வோம்.

  அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.

  இதையும் படிக்கலாம்...பதவிக்காக ஆசைப்படாதீர்கள்...
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘‘பொறுப்புகளை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” என்கிறது திருக்குர் ஆன் (4:58).
  அரசுப்பணியோ, தனியார் பணியோ, எந்த துறையாக இருந்தாலும் ஒருவர் அங்கு வகிக்கும் பதவி அல்லது பணி என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். அது சாதாரண பணியாளராக இருந்தாலும், நிர்வாகத்தில் உயர்வாக உள்ள பதவியாக இருந்தாலும் சரியே.

  பதவியுடன் இணைந்து இருக்க வேண்டியது அதை ஏற்று வாழும் மனிதனின் திறமைகளும், ஒழுக்கபலமும் தான். தகுதி உள்ளவர்கள் பதவியைப்பெற்றால் அதில் வெற்றிகளை குவிப்பார்கள், அதன்மூலம் மனித சமூகத்திற்கு பயன்களையும் பெற்றுத்தருவார்கள்.

  இஸ்லாம் பதவியை ஒரு அமானிதமாக கருதுகிறது. அதை உரியவர்களுக்கு ஒப்படைப்பது சமூக மக்களின் கடமையாக எடுத்துரைக்கிறது.

  ‘‘பொறுப்புகளை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” என்கிறது திருக்குர் ஆன் (4:58).

  அதாவது தகுதியில்லாத, பலவீனமான, ஒழுக்கமற்ற, பொறுப்பற்ற மக்களிடம் பதவிகளை ஒப்படைக்காதீர்கள். ஆகவே இஸ்லாத்தில் பதவி என்பது கேட்டு பெறுவதல்ல. மாறாக ஒப்படைக்கப்படுகின்ற ஓர் விலைமதிக்க முடியாத அமானிதம் ஆகும். ஒவ்வொரு பொறுப்பும் மறுமை நாளில் படைத்த இறைவனின் நீதி மன்றத்தில் விசாரிக்கப்படும்.

  நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: “பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதை கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப்படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்குக் கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி செய்யப்படும்”.

  பொறுப்பின் சுமையை அறியாதவரும், அதிகார மோகம் கொண்டவர்களும்தான் பதவிக்கு ஆசைப்படுவார்கள். இதற்கு மாற்றமாக பதவியை ஒரு பொறுப்பாக உணர்ந்து செயல்படுபவர்கள், அதன் மீது ஆசை கொள்ளாதவர்கள் மீது இறைவனின் உதவியும், வழிகாட்டலும் கிடைக்கும்.

  பதவி பெறுபவர்களைவிட பதவியில் அமர்த்தும் பொது மக்கள் மீதும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. ஆளுமை, திறமை, நல்லொழுக்கம் உள்ளவர்களைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்த வேண்டும். நன்மக்கள் இருந்தால்தான் நல்ல தலைவர்களை இந்த சமூகம் பெறும். எனவே மக்கள் சுயநலம் இல்லாமல், பாரபட்சம் காட்டாமல் நல்லவர்களை, வல்லவர்களை பதவியில் அமர்த்த வேண்டும்.

  அவ்வாறு பதவியில் அமர்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர வேண்டும். தனது செயல்களை கண்காணித்துக் கொண்டும், மதிப்பீடு செய்து கொண்டும் இருக்க வேண்டும். ஆலோசனைகளின் அடிப்படையில் பாரபட்சம் இல்லாத நிலையில் முடிவுகள் எடுக்க வேண்டும். மக்களுக்கும் அதைவிட மேலாக படைத்த இறைவனுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் என்ற நம்பிக்கையோடு பயணிக்க வேண்டும். மக்கள்நலன் முதன்மையாக இருக்கும் பட்சத்தில் பதவியாளர்கள் சேவை உணர்வோடும், அன்போடும் நடந்து கொள்வார்கள்.

  நபிகள் நாயகம் கூறினார்கள்: “உங்களின் தலைவர்களில் சிறந்தவர்கள், அவர்களை நீங்கள் அன்பு கொள்வீர்கள், அவர்கள் உங்களை அன்பு கொள்வார்கள்”.

  இத்தகைய ஒழுக்கங்களோடு ஆட்சியாளர்கள், பொது மக்கள் செயல்படும் பொழுது சமூகத்தில் அமைதியும், வளர்ச்சியும் செழித்தோங்கும் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. இதற்கு முன்னுதாரணமாக நபிகள் நாயகத்திற்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் இருந்தார்கள்.

  ஆகவேதான் அண்ணல் காந்தி அடிகளார் கலீபா உமர் அவர்களின் ஆட்சியை விரும்பினார்கள். ‘இந்திய நாடு உயர வேண்டும் என்றால், கலீபா உமரைப் போன்ற நேர்மையான ஆட்சியாளர் ஆள வேண்டும்’ என்று ஆசைப்பட்டார்கள்.

  நாட்டில் அமைதி, பொருளாதார செழிப்பு, பெண்களின் பாதுகாப்பது, தொழில் வளர்ச்சி, பன்முக முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் பதவியில் நல்லவர்கள் வருவதும், அத்தகைய தலைமுறையை உருவாக்குவதும் நம் அனைவரின் தலையாய கடமை ஆகும்.

  நசீர் அதாவுல்லாஹ், சென்னை
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு இறைவன் அருள்புரிவானாக! என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)
  மனித மனங்களில் குடி கொண்டிருக்கும் குணநலன்களில் உயர்வான நற்குணம் பெருந்தன்மை.

  பெருந்தன்மை என்றால் என்ன?

  நமது உள்ளங்களிலும், எண்ணங்களிலும் மற்றவர்கள் குறித்து நல்உணர்வுடனும், நல்ல மனநிலையிலும் இருக்கும் தன்மையே பெருந்தன்மை.

  யாரைப் பற்றியும் உள்ளத்தாலும், எண்ணத்தாலும் தீய எண்ணங்களை மனதிலிருந்து அகற்றுவதே பெருந்தன்மையின் அடையாளமாகும்.

  பெருந்தன்மையாளர்கள் தாங்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, பிறரும் மகிழ்ச்சியாக வாழ ஆசைப்படுவார்கள்.

  பெருந்தன்மையை அனைத்து வடிவங்களிலும் காணமுடியும். அதை கொடுக்கல் வாங்கலில் வெளிப்படுத்தலாம். கடனை திருப்பிக் கேட்பதில் வெளிப்படுத்தலாம். கடனை திருப்பிக் கொடுப்பதில் வெளிப்படுத்தலாம். வழக்காடுவதில் வெளிப்படுத்தலாம். பிறரை மன்னிப்பதிலும் வெளிப்படுத்தலாம்.

  ‘வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு இறைவன் அருள்புரிவானாக! என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)

  “ஒரு மனிதர் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றார். அப்போது அவரிடம் ‘நீ உலகில் என்ன நற்செயல் புரிந்துள்ளாய்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிப்பேன். காசு விஷயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வேன்’ என்று கூறினார். இதனால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)

  “பெருந்தன்மையுடன் நடந்த இந்த மனிதரைப் பார்த்து இறைவன் ‘பெருந்தன்மையுடன் நடப்பதற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். எனவே, என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்யுங்கள்’ என வானவர்களிடம் கூறினான் என நபி (ஸல்) தெரிவித்தார்கள்”. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)

  பெருந்தன்மையாக நடந்து கொள்வது இறைவனையே கவர்ந்துவிட்டது. இதற்கு பிரதிபலனாக இறைவன் அவரின் பாவங்களை தள்ளுபடி செய்து, அவரை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்துள்ளான். அந்த மனிதர் உலகில் செய்த ஒரே காரியம் பெருந்தன்மையாக நடந்து கொண்டது மட்டுமே. பெருந்தன்மையாக நடப்பதற்கு இறைவனிடம் உயர்ந்த பதவியும், சிறந்த விருதும் கிடைத்துவிடுகிறது.

  இறைவனே பெருந்தன்மை மிக்கவன்தானே!

  “(அவனே) சிம்மாசனத்திற்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்”. (திருக்குர்ஆன் 85:15)

  பெருந்தன்மை என்பது இறைவனின் ஓர் அருட்குணம். அந்த குணத்தை வெளிப் படுத்துவோருக்கு இறைவன் தனிமரியாதையை வழங்கி, மற்றவர்களின் முன்னிலையில் கவுரவிக்கின்றான்.

  இத்தகைய தன்மையை நபி (ஸல்) அவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் கடைப் பிடித்து வந்தார்கள்.

  “ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம் தான் கொடுத்த ஒட்டகத்தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது அவர் நபிகளாரிடம் கடுமையாகப் பேசினார். எனவே, நபித்தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி ‘அவரை தண்டிக்க வேண்டாம்; விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி, அவரிடமே கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். நபித்தோழர்கள் ‘அவருக்குத் தரவேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயது உடைய ஒட்டகம்தான் எங்களிடம் உள்ளது’ என்றார்கள். அதற்கு நபியவர்கள் ‘அதையே வாங்கி, அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்லமுறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்’ என்று கூறி பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

  அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் பெருந்தன்மையாக நடந்து கொண்டதைப் போன்று நாமும் நடந்து, இறைவனின் உயர்பதவியை அடைவோம்.

  அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.

  இதையும் படிக்கலாம்...சமூக பொறுப்புணர்வு அவசியம்...
  ×