என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போகோ ஹராம்"

    • உமர் நபி தற்கொலை குண்டுவெடிப்பை "தியாகம்" என்று நியாயப்படுத்தும் பழைய வீடியோ வெளியானது
    • இதுபோன்ற செயல்கள் நாட்டின் சட்டத்திற்கும் எதிரானவை.

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி அன்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. பலர் காயம் அடைந்தனர்.

    இது சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என என்ஐஏ நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவத்தில் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட காரை அவருக்கு வாங்கி கொடுத்ததாக காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், டெல்லியில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் உமர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில், தற்கொலை படை தாக்குதலை சிலர் தவறாக பேசுகிறார்கள், உண்மையில் அது தியாக நடவடிக்கை என உமர் பேசியுள்ளான்.

    இந்நிலையில், உமர் பேசிய பழைய வீடியோ குறித்து AIMIM கட்சி தலைவர் ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் நபி தற்கொலை குண்டுவெடிப்பை "தியாகம்" என்று நியாயப்படுத்தும் விதமாக ஒரு பழைய வீடியோ உள்ளது. இஸ்லாத்தில் தற்கொலை செய்து கொள்வது ஹராம், அப்பாவிகளைக் கொல்வது ஒரு பெரிய பாவம். இதுபோன்ற செயல்கள் நாட்டின் சட்டத்திற்கும் எதிரானவை. இது பயங்கரவாதம், வேறு எதுவும் இல்லை.

    ஆபரேஷன் சிந்தூர் மற்றும் மகாதேவ் ஆகியவற்றின் போது அமித்ஷா கடந்த ஆறு மாதங்களில் எந்த உள்ளூர் காஷ்மீரியும் பயங்கரவாதக் குழுக்களில் சேரவில்லை என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார். இந்தக் குழு எங்கிருந்து வந்தது? இந்தக் குழுவைக் கண்டறியத் தவறியதற்கு யார் பொறுப்பு?" என்று பதிவிட்டுள்ளார். 

    நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட 16 பேர் கொல்லப்பட்டனர்.
    அபுஜா:

    நைஜீரியாவில் தடை செய்யப்பட்ட போகோ ஹராம் பயங்கரவாதிகள், அரசுப் படைகள் மீதும், பொதுமக்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் பதற்றம் நிறைந்த வடகிழக்கு மாநிலமான போர்னோவில் நேற்று போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

    மைதுகுரியின் புறநகர்ப்பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், உள்ளூர் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 5 பேர், பொதுமக்களில் 11 பேர் என 16 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

    பயங்கரவாதிகள் கருப்பு அங்கி அணிந்து மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்குதல் நடத்தியதாகவும், பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளில் இருந்து தப்பி ஓடி புதர்களில் மறைந்துகொண்டதாகவும் பொதுஜன கூட்டு அதிரடிப்படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். 
    நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #BokoHaram
    அபுஜா :

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 8 ஆண்டுகளாக போகோ ஹாரம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தாக்குதல் நடத்தி இதுவரை 20 ஆயிரம் பேரை கொன்று குவித்துள்ளனர்.

    இந்நிலையில், நைஜீரியாவின் போரானோ மாகாணத்தில் உள்ள அந்நாட்டு ராணுவ தளத்தை குறிவைத்து பயங்கர ஆயுதங்களுடன் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    இதில், நைஜீரிய ராணுவத்தை சேர்ந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதல் நடைபெற்ற பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான ஆயுதங்களையும் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் சூறையாடி சென்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது. #BokoHaram
    ×