search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramjan"

    • ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
    • நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டுகளைப் போலவே. 2024-ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

    2024-ஆம் ஆண்டு. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி,7,040 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

    • திரிகூடபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் ரம்ஜானை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் இமாம் அப்துல் ரஷீத் பைஜி கிராத் ஓதினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் ஒன்றியம் திரிகூடபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் ரம்ஜானை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    திரிகூடபுரம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான, செல்லத்துரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் முத்தையாபாண்டி, கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ், நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரிகூடபுரம் தி.மு.க. தெற்கு கிளை செயலாளரும், ஊராட்சி மன்ற துணைத்தலைவருமான செய்யது மீரான் வரவேற்றார். முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் இமாம் அப்துல் ரஷீத் பைஜி கிராத் ஓதினார். நிகழ்ச்சியில் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் முகமது யூசுப், பொருளாளர் வாவா கனி,

    சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சரவணன், கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், கவுன்சிலர் திவான் மைதீன், காளிமுத்து, செய்யது மசூது, யாசின், முருகானந்தம், 2-வது வார்டு கவுன்சிலர் கடல் என்ற செல்லத்துரை இளைஞரணி செயலாளர் சதாம், துணை செயலாளர் அஜ்மீர், கே.ஆர்.யாசின் மற்றும் ஊர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ரம்ஜான் மாதத்தை மதிக்காத பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார். #Pakistanfiring #Mehbooba
    ஜம்மு:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரா, ஆர்னியா உள்ளிட்ட எல்லைப்பகுதி காவல் சாவடிகளின்மீது  பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த எல்லை பாதுக்காப்பு படைவீரர் மற்றும் பொதுமக்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியை நிலைநாட்ட இந்தியா எடுத்துவரும் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் மதிப்பளித்து ஒத்துழைக்க வேண்டும்.

    ரம்ஜான் நோன்பு மாதம் என்பதால் இருதரப்பு தாக்குதல்களை நிறுத்திகொள்ள வேண்டும் என்னும் நிலைப்பாட்டை இந்தியா முன்னெடுத்துள்ளது. ஆனால், ரம்ஜான் மாதத்துக்கு பாகிஸ்தான் மதிப்பளிக்கவில்லை என்பதைதான் இன்றைய தாக்குதல் காட்டுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள கனூர் கிராமத்தின்மீது இந்திய படைகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரை அழைத்து இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Pakistanfiring #Mehbooba
    ×