என் மலர்
இந்தியா

'டிரம்பால் முடியும்போது உங்களால் ஏன் முடியாது?' - மதுரோவைப் போல... மோடியை வம்புக்கு இழுத்த ஓவைசி
- 56 இன்ச் மார்பு இருந்தால், துணிச்சலாகச் செயல்பட்டு, பயங்கரவாதிகளை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும்
- டிரம்பால் முடிந்தால் உங்களாலும் (மோடி) முடியும்
டிரம்பால் மற்றொரு நாட்டின் அதிபரையே பிடித்து வர முடியும்போது, பிரதமர் மோடியால் ஏன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் 26/11 மும்பை தாக்குதல் குற்றவாளிகளை கொண்டுவர முடியாது என ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி,
"அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் படைகள் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்து, அவரது நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றதாக கேள்விப்பட்டோம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைதுசெய்ய முடிந்தால், நீங்களும் (பிரதமர் மோடி) பாகிஸ்தானுக்கு சென்று 26/11 பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை இந்தியாவிற்கு கொண்டு வர முடியும்.
மோடி அவர்களே, நாங்கள் உங்களிடம் கேட்கிறோம், மசூத் அசார் ஆகட்டும் அல்லது லஷ்கர்-இ-தைபாவைச் சேர்ந்த கொடூரமான ஒரு அரக்கனாக இருக்கட்டும், 26/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்டவர்களை இந்தியாவுக்குக் கொண்டு வர ஏன் இந்திய ராணுவத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பக்கூடாது? டிரம்பால் முடிந்தால் உங்களாலும் முடியும். டிரம்புக்கு ஒன்றும் சளைத்தவர் அல்ல நீங்கள். அப்கி பார் டிரம்ப் சர்க்கார் " எனப் பேசியுள்ளார்.






