என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசியலமைப்புக்கு எதிரானது: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நகலை கிழித்தெறிந்த ஓவைசி
    X

    அரசியலமைப்புக்கு எதிரானது: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நகலை கிழித்தெறிந்த ஓவைசி

    • மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
    • அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.

    புதுடெல்லி:

    வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கிடையே, பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    இந்நிலையில், ஐதராபாத் எம்பியான அசாதுதின் ஒவைசி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் குறித்து பேசியதாவது:

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர் சட்டங்களை ஏற்றுக் கொள்ளாமல் அதனை மகாத்மா காந்தி கிழித்து எறிந்தார். அதுபோலவே, நானும் இந்தச் சட்டத்தைக் கிழிக்கிறேன்.

    கோவில்கள் மற்றும் மசூதிகளின் பெயரால் இந்த நாட்டில் பிரிவினையை உருவாக்க பா.ஜ.க. விரும்புகிறது. இதை நான் கண்டிக்கிறேன். மேலும் 10 திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×