ஐன்ஸ்டீனுடன் நேருவின் பெயரும், எப்ஸ்டீனுடன் மோடியின் பெயரும் வரலாற்றில் நினைவுகூறப்படும் - காங்கிரஸ் எம்.பி

மகாராஷ்டிராவை சேர்ந்த உருது கவிஞர் இம்ரான் பிரதாப்கர்ஹி காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம். பி ஆக உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் இடம்பெற்றுள்ளது.
ஐன்ஸ்டீனுடன் நேருவின் பெயரும், எப்ஸ்டீனுடன் மோடியின் பெயரும் வரலாற்றில் நினைவுகூறப்படும்  - காங்கிரஸ் எம்.பி
Published on

மகாராஷ்டிராவை சேர்ந்த உருது கவிஞர் இம்ரான் பிரதாப்கர்ஹி. இவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம். பி ஆக உள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் மாநிலங்களவையில் இம்ரான் உணர்ச்சிபொங்க உரையாற்றி உள்ளார்.

அவையில் அவர் பேசியதாவது, நாட்டில் சட்டம் என்பது சிலரைத் தேர்ந்தெடுத்து மட்டுமே பாய்கிறது. பரேலியில் தொழுகை நடத்தியவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுகிறது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தயாரான கிறிஸ்தவர்கள் மீது வழக்குகள் போடப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தின் பெதுல் பகுதியில், மக்களின் எதிர்ப்பையும் மீறி ஒரு பள்ளிவாசல் இடிக்கப்படுகிறது.

வாரணாசியில் நீதிமன்றத் தடை உத்தரவு இருந்தும் இஸ்லாமியர்களின் கடைகள் இடிக்கப்படுகின்றன. 42 முஸ்லிம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற பிறகு, அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்தனர்.

சில மாநிலத் தலைவர்கள் ஜனநாயக நெறிமுறைகளை வெளிப்படையாக மீறி வருகிறார்கள். கலவரத்தை தூண்டுபவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு அமைதிக்கு குரல் கொடுப்பவர்களை குறிவைக்கிறது.

சிறுபான்மையினரை இலக்கு வைப்பதும், நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை ஒடுக்குவதும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.

வரலாறு இந்த அரசாங்கத்தை அதன் கோஷங்களை வைத்து மதிப்பிடாது. எளிய மக்களை அது எவ்வாறு பாதுகாத்தது மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை எவ்வாறு நிலைநாட்டியது என்பதை வைத்தே மதிப்பிடும் என்று பேசிய அவர், இறுதியாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரைக் குறிப்பிட்டு தனது உரையை முடித்தார்.

அதாவது, பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் பெயரை நாடு நினைவில் வைத்திருக்கும் அதே வேளையில், நேரு நினைவுகூரப்படுவார், அதே நேரத்தில் நரேந்திர மோடி எப்ஸ்டீன் கோப்புடன் நினைவுகூரப்படுவார் என்று அவர் கூறினார்.

எப்ஸ்டீன் கோப்புகள்:

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார்.

கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

மேலும் உலக பணக்காரர் பில் கேட்ஸ், ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி அதற்கான மருந்துகளை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

அதேநேரம் எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் இடம்பெற்றுள்ளது. ஆனால் இவற்றில் உண்மை இல்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com