என் மலர்
நீங்கள் தேடியது "Gujarat government"
- உருது கவிஞரும் காங்கிரஸ் எம்.பி.யுமான இம்ரான் பிரதாப்கர் மீது குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
- படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு கவிதையைப் பதிவிட்டதற்காக உருது கவிஞரும் காங்கிரஸ் எம்.பி.யுமான இம்ரான் பிரதாப்கர் மீது குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இம்ரான் பதிவிட்ட கவிதை வெறுப்பு மற்றும் வன்முறை செய்தியைப் பரப்புவதாகக் கூறி, போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். வழக்கை ரத்து செய்ய கோரி இம்ரான் பிரதாப்கர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் எஃப்ஐஆரை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றம் சென்றார்.
இதன் மீதான விசாரணை தற்போது நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இம்ரானுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார். எதிர் தரப்பில் குஜராத் அரசு வழக்கறிஞர் ஆஜரானார்.
விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், குஜராத் காவல்துறையும் உயர் நீதிமன்றமும் இந்த உருது கவிதையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது. தயவுசெய்து உங்கள் புத்தியை பயன்படுத்துங்கள். இது ஒரு கவிதை மட்டுமே. எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல. "யாராவது வன்முறையில் ஈடுபட்டாலும் கூட, நாம் அதில் ஈடுபடுவதில்லை" என்பதே இந்தக் கவிதையின் செய்தி. படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. எஃப்ஐஆரில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குஜராத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் ஒற்றுமையின் சிலையின் மாதிரியான சிறிய அளவிலான சிலைகளை நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. #StatueofUnity #SardarVallabhbhaiPatel
குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயர உலகின் மிகப்பெரிய சிலையை கடந்த 31-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதையொட்டி சிலை திறப்பு விழா வளாகத்தில் ‘ஸ்டாட்சு ஆப் யூனிட்டி’ என்பது ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ் என பல்வேறு மொழிகளில் அப்படியே எழுதப்பட்டு இருந்தது. ஆனால் தமிழில் ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என பிழையாக எழுதப்பட்டு இருந்தது.
ஒற்றுமையின் சிலை என மொழி பெயர்க்காமல் ஆங்கில வார்த்தை தமிழில் அப்படியே பிழையுடன் எழுதப்பட்டது. தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அறிந்த அமைச்சர் க.பாண்டியராஜன் சிலை அமைக்கும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனே அவர்கள் தமிழ் எழுத்தை மறைத்துவிட்டார்கள். பிரதமர் விழா என்பதால் உடனடியாக புதிய பெயர் பலகை வைக்க நேரம் இல்லாமல் போய்விட்டது என தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி அமைச்சர் பாண்டியராஜன் கூறும்போது, சிலை அமைப்பு பணி குழுவில் தமிழர்களும் இடம் பெற்று இருந்தனர். இருந்தும் தவறு நடந்து இருப்பது துரதிர்ஷ்ட வசமானது என்றார்.
இதற்கு குஜராத் மாநில தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘ஸ்டாட்சு ஆப் யூனிட்டி’ என்ற ஆங்கில வாசகம் 10 மொழிகளில் இடம் பெற்று இருந்தது. தமிழ் வாசகம் தவறானது என்று சில பார்வையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு இருந்ததும் உடனடியாக அதை அகற்ற உத்தரவிடப்பட்டது. இது சரிசெய்யப்பட்டு விரைவில் மீண்டும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. #SardarPatel #UnityStatue






