search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Statue of Unity"

    • மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • அகமதாபாத்தில் அமைக்கப்பட்ட ஒற்றுமை சிலையை பில் கேட்ஸ் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்.

    அகமதாபாத்:

    மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை சிலையை பில் கேட்ஸ் நேற்று பார்வையிட்டு, அஞ்சலி செலுத்தினார்.

    இதுதொடர்பாக பில் கேட்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஈர்க்கக்கூடிய ஒற்றுமை சிலையைப் பார்வையிட அழைத்தமைக்கு நரேந்திர மோடிக்கு நன்றி. இது ஒரு பொறியியல் அதிசயம் மற்றும் சர்தார் பட்டேலுக்கு ஒரு பெரிய அஞ்சலி. இது உள்ளூர் பழங்குடி சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பை உருவாக்குவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள செய்தியில், இதைப் பார்த்ததில் மகிழ்ச்சி! ஒற்றுமை சிலையில் உங்கள் அனுபவத்தை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி. இனி வரும் காலங்களில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் அதைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • 1956, அக்டோபர் 14 அன்று டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் காலமானார்
    • சர்தார் படேல் சிலையை உருவாக்கிய சிற்பி இதனை வடிவமைத்துள்ளார்

    தலித்துகள் உரிமைகளுக்காக போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவருமான 'பாபா சாகிப்' டாக்டர். பீம் ராவ் அம்பேத்கர், 1891 ஏப்ரல் 14 அன்று பிறந்தார்.

    அம்பேத்கர், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பிரதமர் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான முதல் அமைச்சரவையில் சட்ட மற்றும் நீதி துறை அமைச்சராக இருந்தவர். 1956, அக்டோபர் 14 அன்று டாக்டர். அம்பேத்கர் காலமானார். இந்த நாளை அவரது தொண்டர்கள் 'தம்மா சக்ரா பரிவர்தன் தினம்' என கொண்டாடுகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவில், வரும் அக்டோபர் 14 அன்று மேரிலாண்ட் மாநிலத்தில் அக்கோகீக் (Accokeek) பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகி வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் (AIC) 'சமத்துவத்திற்கான சிலை' (Statue of Equality) என பெயரிடப்பட்ட 19 அடி உயர அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட இருக்கிறது. "ஒற்றுமைக்கான சிலை" (Statue of Unity) எனும் பெயரில் இந்திய மாநிலம் குஜராத்தில் இந்திய சுதந்திர போராட்ட தலைவரான சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த புகழ் பெற்ற சிற்பி ராம் சுதார் (Ram Sutar) கைவண்ணத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு உலகெங்கிலுமிருந்து பல முக்கிய பிரதிநிதிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குஜராத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிறிய அளவிலான சிலைகளை நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. #StatueofUnity #SardarVallabhbhaiPatel
    ஆமதாபாத்:

    இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் குஜராத்தின் நர்மதை ஆற்றங்கரையோரம் சிலை நிறுவப்பட்டு உள்ளது. ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் உலகிலேயே உயரமான இந்த சிலையை கடந்த அக்டோபர் மாதம் 31-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.



    இந்தநிலையில் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குஜராத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் ஒற்றுமையின் சிலையின் மாதிரியான சிறிய அளவிலான சிலைகளை நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. #StatueofUnity #SardarVallabhbhaiPatel

    வல்லபாய் பட்டேலின் சிலையின் உயரத்தை விட அதிக உயரமாக இருக்கும் வகையில் ஆந்திர சட்டசபையை கட்ட முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். #ChandrababuNaidu #APAssembly
    அமராவதி:

    குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்துக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இதுதான் உலகத்திலேயே உயரமான சிலை ஆகும்.

    பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது இதற்கான கட்டுமான திட்டத்தை உருவாக்கினார். அவரது முயற்சியின் காரணமாக இந்த சிலை நிறுவப்பட்டது.

    இப்போது இதைவிட உயரமான சிலை மற்றும் கட்டுமானங்களை அமைப்பதற்கு பலரும் போட்டி போடுகிறார்கள்.

    அயோத்தியில் ராமருக்கு 201 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    கர்நாடக அரசு காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை அமைப்பதாக அறிவித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் வீரசிவாஜிக்கு மிகப் பெரிய உயரமான சிலை ஒன்றை அமைக்கும் திட்டம் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் வல்லபாய் பட்டேல் சிலையை விட மிக அதிக உயரத்தில் ஆந்திர மாநில சட்டசபை கட்டிடத்தை கட்ட சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.

    ஒன்றுபட்ட ஆந்திராவின் தலைநகரமாக ஐதராபாத் இருந்து வந்த நிலையில் புதிய மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவின் தலைநகரம் விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டது.

    இதற்காக விஜயவாடா அருகே அமராவதி என்ற பெயரில் புதிய நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது. அங்கு சட்டசபை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் கட்டப்படுகிறது.

    சட்டசபை கட்டிடத்துக்காக கட்டிட வடிவமைப்பு பணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இங்கிலாந்தை சேர்ந்த கட்டிட வடிவமைப்பு நிறுவனமான நார்மா பாஸ்டர்ஸ் இந்த வடிவமைப்பை உருவாக்கி உள்ளது.

    சட்டசபை கட்டிடம் 3 அடுக்குகளாக கட்டப்படுகிறது. அதன் மத்தியில் மிக உயரமான கோபுரம் ஒன்று அமைக்கப்படுகிறது. இந்த கோபுரம் தான் கட்டிடத்துக்கு அழகை கொடுக்கும் வகையில் கட்டப்படுகிறது.

    அந்த கோபுரத்தின் உயரம் என்ன என்பது முடிவு செய்யப்படாமல் இருந்தது. இப்போது வல்லபாய் பட்டேலின் சிலையின் உயரத்தை விட அதிக உயரமாக இருக்கும் வகையில் 250 மீட்டர் உயரத்தில் கட்டுவது என்று முடிவு எடுத்துள்ளனர்.

    அதாவது பட்டேல் சிலையை விட 68 மீட்டர் கூடுதல் உயரமாக இந்த கோபுரம் இருக்கும்.

    ஏற்கனவே உள்ள வடிவமைப்பில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சில மாற்றங்களை செய்துள்ளார். அதன்படி கோபுர கட்டுமானத்தில் மாற்றங்கள் செய்து 250 மீட்டர் உயரத்துக்கு கட்டப்படுகிறது.

    இந்த கோபுரம் லில்லி மலர் வடிவத்தில் இருக்கும். அதாவது லில்லி மலரை கவிழ்த்து வைத்தால் எப்படி இருக்குமோ? அதுபோன்ற வடிவமாக கட்டப்படுகிறது.

    அதன் மேல் உச்சி வரை மக்கள் சென்று அமராவதி நகரை பார்வையிடலாம். இதற்காக கோபுரத்தில் 2 பார்வை மாடங்கள் அமைக்கப்படுகின்றன.

    முதல் மாடம் 80 மீட்டர் உயரத்தில் இருக்கும். அதில், 300 பேர் இருக்கும் வகையில் வசதி செய்யப்படுகிறது. அடுத்த மாடம் 250-வது மீட்டர் உயரத்தில் இருக்கும். அதில் 20 பேர் நின்று பார்வையிடலாம்.

    கீழிருந்து மேலே கடைசி வரை செல்வதற்கு லிப்டு வசதிகள் செய்யப்படுகிறது. மேல் பகுதி முழுவதும் கண்ணாடியால் கவர் செய்யப்பட்டு இருக்கும்.

    புயல், நிலநடுக்கம் ஆகியவற்றையும் தாங்கும் வகையில் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது. சட்டசபை கட்டிடத்துக்கான டெண்டர் பணி இந்த மாதம் இறுதி செய்யப்பட உள்ளது. 2 வருடத்தில் கட்டுமான பணியை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    ஏற்கனவே தலைமை செயலகம் கட்டும் பணிக்காக 5 கட்டிட டிசைன்கள் தேர்வு செய்யப்பட்டு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  #ChandrababuNaidu #APAssembly

    படேல் சிலை திறப்பு விழா வளாகத்தில் அமைக்கப்பட்ட பிழையான தமிழ் பெயர் பலகை திருத்தி அமைக்கப்படும் என்று குஜராத் மாநில தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. #SardarPatel #UnityStatue
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயர உலகின் மிகப்பெரிய சிலையை கடந்த 31-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இதையொட்டி சிலை திறப்பு விழா வளாகத்தில் ‘ஸ்டாட்சு ஆப் யூனிட்டி’ என்பது ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ் என பல்வேறு மொழிகளில் அப்படியே எழுதப்பட்டு இருந்தது. ஆனால் தமிழில் ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என பிழையாக எழுதப்பட்டு இருந்தது.

    ஒற்றுமையின் சிலை என மொழி பெயர்க்காமல் ஆங்கில வார்த்தை தமிழில் அப்படியே பிழையுடன் எழுதப்பட்டது. தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அறிந்த அமைச்சர் க.பாண்டியராஜன் சிலை அமைக்கும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனே அவர்கள் தமிழ் எழுத்தை மறைத்துவிட்டார்கள். பிரதமர் விழா என்பதால் உடனடியாக புதிய பெயர் பலகை வைக்க நேரம் இல்லாமல் போய்விட்டது என தெரிவிக்கப்பட்டது.

    இதுபற்றி அமைச்சர் பாண்டியராஜன் கூறும்போது, சிலை அமைப்பு பணி குழுவில் தமிழர்களும் இடம் பெற்று இருந்தனர். இருந்தும் தவறு நடந்து இருப்பது துரதிர்ஷ்ட வசமானது என்றார்.

    இதற்கு குஜராத் மாநில தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘ஸ்டாட்சு ஆப் யூனிட்டி’ என்ற ஆங்கில வாசகம் 10 மொழிகளில் இடம் பெற்று இருந்தது. தமிழ் வாசகம் தவறானது என்று சில பார்வையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு இருந்ததும் உடனடியாக அதை அகற்ற உத்தரவிடப்பட்டது. இது சரிசெய்யப்பட்டு விரைவில் மீண்டும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.   #SardarPatel #UnityStatue

    உலகின் மிக உயரமாக உருவாக்கப்பட்ட வல்லபாய் படேலின் சிலையில், தமிழ் மொழிப்பெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #VallabhbhaiPatel #Tamil #StatueofUnity
    அகமதாபாத்:

    இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமான இந்த சிலை உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த சிலைக்கு ‘ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி’ அதாவது ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில். இந்த சிலைக்கு கீழே பல்வேறு மொழிகளில் ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற சிலையின் பெயர் மொழிப்பெயர்க்கப்பட்டு இருந்தது. அந்த வரிசையில் தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மிகவும் மோசமாக இருப்பதால் சர்ச்சையாகி உள்ளது.



    ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற ஆங்கில வார்த்தையை கூகுளில் மொழிப்பெயர்ப்பு செய்து இருந்தால் கூட ஒற்றுமையின் சிலை என வந்திருக்கும் ஆனால், ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள். இதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.



    இதையடுத்து, தமிழ் மொழிப்பெயர்ப்பின் மீது வண்ணம் பூசி அதை தற்காலிகமாக மறைத்து உள்ளனர். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட உலகின் மிக உயரமான சிலையில் தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மோசமான நிலையில் இருப்பது, தமிழை வஞ்சிக்கும் பார்வையை வெளிப்படுத்துவதாக கருத்துக்களும், கண்டங்களும் கூறப்படுகிறது. #VallabhbhaiPatel #Tamil #StatueofUnity
    ×