என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்தார் படேல்"

    • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்தார் வல்லபாய் படேல் சொன்ன கருத்துக்களை உண்மையிலேயே மதித்தால், ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்ய வேண்டும்.
    • காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், ஆனால் நேரு அவரது முயற்சிகளைத் தடுத்தார் என்று பிரதமர் மோடி பேசினார்.

    இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக இன்று கொண்டாடப்பட்டுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி டெல்லியில் அவர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, சர்தார் வல்லபாய் படேல், இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி ஆகிய இருவரும்தான் நாட்டின் ஒற்றுமைக்காக மிகக் கடுமையாக உழைத்தார்கள்.

    அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் மரியாதை கொடுத்திருக்கிறது. பாஜகவும் அதன் தலைவர்களும் நேருவுக்கும் படேலுக்கும் இடையில் மோதல் நிலவியதுபோன்ற பொய்யான பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் மிக நல்ல உறவில் இருந்தனர்.

    பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்தார் வல்லபாய் படேல் சொன்ன கருத்துக்களை உண்மையிலேயே மதித்தால், ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்ய வேண்டும்.

    இன்று நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. இதற்குபாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸுமே காரணமாக இருக்கின்றன. நாட்டில் நடக்கும் அத்தனை தவறுகளுக்கும் இவர்களே மூல காரணமாக உள்ளனர்

    சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்ஸை ஏன் தடை செய்தார் என்பதற்கான காரணங்களை அவர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

    சர்தார் படேல், ஷியாம் பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் காந்தியின் மரணத்தைக் கொண்டாடி, இனிப்புகளை விநியோகித்தனர்' என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ்ஸின் பேச்சுகள் விஷம் நிறைந்தவை" என்று தெரிவித்தார்.

    முன்னதாக, காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், ஆனால் நேரு அவரது முயற்சிகளைத் தடுத்தார் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் இதற்கு பதிலடியாக கார்கே பேசியுள்ளார்.   

    1948 மகாத்மா காந்தி படுகொலைக்கு பின் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு பின்பு 1949 இல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

    • சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆங்கிலம் கற்பதை ஆர்எஸ்எஸ் கும்பல் விரும்பவில்லை என ராகுல் காந்தி இதனை விமர்சித்தார்.
    • ஒப்பிடற்கரிய சர்தார் வல்லபாய் படேல் வகித்த உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா போன்ற ஒருவர் வகிப்பது அவருக்கு அவமானம்.

    இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் நேரம் வந்துவிட்டது என்ற அமித் ஷாவின் கூற்று விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆங்கிலம் கற்பதை ஆர்எஸ்எஸ் கும்பல் விரும்பவில்லை என ராகுல் காந்தி இதனை விமர்சித்தார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், "பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் கொண்டு வருவதில் மத்திய உள்துறை அமைச்சர் முற்றிலும் தோல்வியடைந்துள்ளார்.

    இந்த பயங்கரவாதிகள் பூஞ்ச் (டிசம்பர் 2023) மற்றும் கங்கங்கீர் மற்றும் குல்மார்க் (அக்டோபர் 2024) ஆகிய இடங்களிலும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

    மணிப்பூரில் கூட அமைதியையும், இயல்பு நிலையையும் மீட்டெடுப்பதில் மத்திய உள்துறை அமைச்சர் படுதோல்வி அடைந்துள்ளார். அவர் சாதித்தது எல்லாம் தன் மகனுக்கு உத்தரவாதமான வேலை வாய்ப்பை(ஐசிசி தலைவர் பதவியை) வழங்கியது மட்டுமே.

    இப்போது மத்திய உள்துறை அமைச்சர் மிகவும் அபத்தமான அறிக்கைகளை வெளியிடுகிறார். லட்சக்கணக்கான இந்தியர்கள், ஆங்கிலம் தவிர்த்து, அதிகமான இந்திய மொழிகளைப் பேசுகிறார்கள். ஒப்பிடற்கரிய சர்தார் வல்லபாய் படேல் வகித்த உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா போன்ற ஒருவர் வகிப்பது அவருக்கு அவமானம்" என்று தெரிவித்துள்ளார். 

    • படேல் இல்லாவிட்டால் இந்தியாவின் வரைபடம் இன்றைய நிலையில் இருந்திருக்காது என அமித் ஷா தெரிவித்தார்.
    • சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர்.

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார். அவரது 147-வது பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களிடையே பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இந்தியாவின் முதல் பிரதமராக சர்தார் வல்லபாய் படேல் பதவியேற்றிருந்தால், நாடு இன்று எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை சந்தித்திருக்காது என தெரிவித்தார்.

    ஒருவர் மறைந்த பிறகும் நீண்ட காலமாக நினைவு கூரப்படுபவராக இருந்தால் அவரை நிச்சயம் 'மிக சிறந்தவர்' என்றுதான் சொல்ல முடியும். அதுதான் சர்தார் வல்லபாய் படேல். அவர் இல்லாவிட்டால், இந்தியாவின் வரைபடம் தற்போது இருக்கும் நிலையில் இருந்திருக்காது. லட்சத்தீவு, ஜோத்பூர், ஜூனாகத், ஐதராபாத் மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளை ஒன்றாகக் கொண்டு வந்த பெருமை அவரையே சேரும். மத்திய போலீஸ், உளவுத்துறை மற்றும் பல நிறுவனங்களுக்கு அடித்தளமிட்டவர் சர்தார் படேல் என தெரிவித்தார்.

    • மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • அகமதாபாத்தில் அமைக்கப்பட்ட ஒற்றுமை சிலையை பில் கேட்ஸ் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்.

    அகமதாபாத்:

    மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை சிலையை பில் கேட்ஸ் நேற்று பார்வையிட்டு, அஞ்சலி செலுத்தினார்.

    இதுதொடர்பாக பில் கேட்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஈர்க்கக்கூடிய ஒற்றுமை சிலையைப் பார்வையிட அழைத்தமைக்கு நரேந்திர மோடிக்கு நன்றி. இது ஒரு பொறியியல் அதிசயம் மற்றும் சர்தார் பட்டேலுக்கு ஒரு பெரிய அஞ்சலி. இது உள்ளூர் பழங்குடி சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பை உருவாக்குவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள செய்தியில், இதைப் பார்த்ததில் மகிழ்ச்சி! ஒற்றுமை சிலையில் உங்கள் அனுபவத்தை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி. இனி வரும் காலங்களில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் அதைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    ×