என் மலர்
நீங்கள் தேடியது "Jairam Ramesh"
- ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேரு எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
- சுப்ரீம் கோர்ட் நீதிபதி விவியன் போசுக்கு நேரு எழுதிய மன்னிப்புக் கடிதத்தைப் பகிர்ந்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் பொது செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நிர்வாகத்துறை, நீதித்துறை இடையிலான உறவுகள் அதிகம் பேசப்படுகிறது. 1959, ஜூன் 26 அன்று அப்போதைய பிரதமர் நேரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி விவியன் போசுக்கு எழுதிய ஒரு அசாதாரண மன்னிப்புக் கடிதத்தைப் பகிர்ந்துள்ள அவர், நேரு சிறந்த நிறுவன கட்டமைப்பாளர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் நேரு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கடந்த பல நாட்களாக நான் தொடர்ந்து பயணத்தில் இருக்கிறேன். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நான் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாக உங்களுக்கு எழுதுவது எனது நோக்கமாக இருந்தது. ஆனால் எனது பயணம் காரணமாக, என்னால் அதை செய்ய முடியவில்லை. கல்கத்தா வழக்கறிஞர் சங்க செயலாளரிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது.
அதில் உங்களைப் பற்றி நான் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து வழக்கறிஞர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அனுப்பியிருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் நான் தெரிவித்த கருத்துகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கருத்துக்கள் முறையற்றவை என்பதை நான் உணர்கிறேன். என்னிடம் கேள்வி கேட்கப்பட்ட நேரத்தில் வேறு பல விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். நான் செய்த இந்தச் செயலுக்கு நீங்கள் என் மன்னிப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என எழுதியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
- ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால் மீண்டும் 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. .
- மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பின்வாசல் வழியாக நாட்டிற்குள் அனுமதிக்கும் செயலாகும்.
இந்தியா - அமெரிக்கா இடையேயே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால், 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஒப்பந்தப்படி, அமெரிக்காவிலிருந்து இந்தியா செய்யும் வருடாந்திர இறக்குமதிகள் மூன்று மடங்காக உயர்ந்து, நமது நீண்டகால வர்த்தக உபரியை இல்லாமல் ஆக்கிவிடும்.
அமெரிக்காவுக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற சேவைகளின் ஏற்றுமதி விஷயத்தில் நிச்சயமற்ற நிலை தொடரும். அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு முன்பை விட அதிக வரிகள் விதிக்கப்படும்.
இந்திய விவசாயிகளின் கண்ணோட்டத்தில் இந்த இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை வர்த்தக அமைச்சர் தற்காத்துப் பேசுவது, மிகத் தந்திரமாக உண்மையை மறைக்கும் செயலாகும்.
முதலாவதாக, இந்த அறிக்கையில் "கூடுதல் பொருட்கள்" என்று ஒரு விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவை எவை என்று விளக்கப்படவில்லை.இது மிகவும் வெளிப்படைத்தன்மை இன்றி, ஏதோ ஒன்று மறைக்கப்படுவதையே இது காட்டுகிறது.
இரண்டாவதாக,மெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் வர்த்தகத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் தடைகளை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (GM crops) மற்றும் பால் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது என்று இதற்குப் பொருள் கொள்ளாமல் வேறு எப்படிப் புரிந்துகொள்வது?
மூன்றாவதாக, அமெரிக்காவிலிருந்து மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும் DDGS (Distillers Dried Grains with Solubles) இந்தியாவிற்குப் பயனளிக்கும் என்று பெரிதாகப் பேசப்படுகிறது.
ஆனால், இந்த DDGS என்பது மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து தயாரிக்கப்படுவது. இது மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பின்வாசல் வழியாக நாட்டிற்குள் அனுமதிக்கும் செயலாகும்.
நான்காவதாக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான சோயாபீன் விவசாயிகள், இந்த DDGS மற்றும் சோயாபீன் எண்ணெய் இறக்குமதியால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்." என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் 1% செல்வந்தர்களிடம் நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்வம் குவிந்துள்ளது
- ஒரு குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது.
இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை விட மோசமான நிலையை எட்டியுள்ளதாக காங்கிரஸ் சாடியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் 1% செல்வந்தர்களிடம் நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்வம் குவிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
1922 முதல் 2023 வரையிலான இந்தியாவின் வருமானம் மற்றும் செல்வச் செழிப்பு குறித்த ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், "மோடியின் பில்லியனர் ராஜ் ஆட்சி, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை விட அதிக ஏற்றத்தாழ்வு கொண்டதாக உள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் சாதாரண குடிமக்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் தேக்கமடைந்துள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது.
அரசு தனக்குச் சாதகமற்ற பொருளாதாரத் தரவுகளை மறைக்கிறது. 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாதது மற்றும் நுகர்வோர் செலவின ஆய்வுகளை வெளியிடாதது போன்றவை மிகப்பெரிய கொள்கை தோல்வி" என்று தெரிவித்துள்ளார்.
- 12-வது கேள்வி முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.
- மத்திய அரசு அரசியல் கட்சிகள், மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.
இந்தியா முழுவதும் அடுத்த வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது.
அதன்பிறகு மக்களை தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பாளரான பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம் என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிப்பதாவது:-
நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்டு வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027, முதல் பகுதி வருகிற செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு ஆகும். 2-ம் கட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். இமாச்சல பிரதேசம், லடாக், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் 2027 பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி அரசு திடீரென தனது நிலைப்பாட்டில் இருந்து பல்டி அடித்து மக்களை தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
வீட்டுக்கணக்கெடுப்பு படிவத்தின் 12-வது கேள்வியில் குடும்பத்தினர் தலைவர் பட்டியலினத்தினரா, பழங்குடியினரா எனக் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்டவரா அல்லது பொதுப்பிரிவனரா? என்பது தெளிவாக கேட்கப்படவில்லை.
இந்த 12-வது கேள்வி பல்வேறு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அந்த கேள்வி மோடி அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்கள் மற்றும் ஒரு விரிவான, நியாயமான, நாடு தழுவிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அதன் அர்ப்பணிப்பு குறித்ததாகும்.
மோடி அரசு இது தொடர்பாக உடனடியாக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
- சர்தார் படேலின் மகள் மற்றும் தனிச் செயலாளராக இருந்த மணிபென் படேலின் நாட்குறிப்பில் உள்ள பதிவுகளைச் சுட்டிக்காட்டினார் .
- ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களுக்காகவே அரசு நிதியைப் பயன்படுத்த விரும்பினார்.
குஜராத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜவஹர்லால் நேரு பாபர் மசூதியைக் கட்ட அரசு நிதி நிதியைப் பயன்படுத்த விரும்பினார் என்றும், ஆனால் சர்தார் வல்லபாய் படேல் அதை உறுதியாக எதிர்த்து தடுத்தார் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு ஆதாரமாக அப்போதைய பாஜக தலைவர்கள் மற்றும் சர்தார் படேலின் மகள் மற்றும் தனிச் செயலாளராக இருந்த மணிபென் படேலின் நாட்குறிப்பில் உள்ள பதிவுகளைச் சுட்டிக்காட்டினார் .
அந்த நாட்குறிப்பின்படி, 1950 செப்டம்பர் 20 அன்று நேரு, பாபர் மசூதி குறித்து ஒரு கேள்வியை எழுப்பியதாகவும், அதற்குப் படேல், "மசூதி கட்ட அரசு பணம் கொடுக்க முடியாது" என்று தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ராஜ்நாத் சிங்கின் கூற்றுக்களை மறுத்த காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் இது வரலாற்றைத் திரிக்கும் முயற்சி என்று சாடினார்.
மேலும், மணிபென் படேலின் நாட்குறிப்பின் அசல் குஜராத்தி பக்கங்களை இன்று பாராளுமன்ற கூட்டத்திற்கு வருகை தந்த ராஜ்நாத் சிங்கிடம் ஜெய்ராம் ரமேஷ் தந்துள்ளார்.
முன்னதாக ராஜ்நாத் சிங் பரப்பும் கருத்துகளுக்கும் அசல் பதிவுகளுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
நேரு எப்போதும் கோவிலோ, மசூதியோ, தேவாலயமோ என எந்த மத ஸ்தாபனத்திற்கும் அரசுப் பணம் செலவழிக்கப்படுவதை எதிர்த்தார் என்றும், மாறாக ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களுக்காகவே அரசு நிதியைப் பயன்படுத்த விரும்பினார் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
- திரித்துக் கூறுவதில் மாஸ்டரான பிரதமர் மோடி இதற்கு பதிலளிப்பாரா?..
- 2005-ஆம் ஆண்டு கராச்சிக்குச் சென்ற அத்வானி, ஜின்னாவின் கல்லறையில் பார்வையாளர் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகள் இவை
பாராளுமன்றத்தில் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு நிறைவு குறித்த விவாதத்தின்போது ஜவஹர்லால் நேரு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளுக்கு, காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில்,நேரு திருப்திப்படுத்தும் அரசியல் செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், திரித்து பேசுவதில் மாஸ்டரான பிரதமர் மோடி இதற்கு பதிலளிப்பாரா?..
1940 மார்ச் மாதம் லாகூரில் பாகிஸ்தான் தீர்மானத்தை முன்மொழிந்த நபருடன் எந்த இந்தியத் தலைவர் கூட்டணி அமைத்தார்? அது பாஜகவின் சியாம பிரசாத் முகர்ஜிதான்.
2005 ஜூன் மாதம் கராச்சியில் ஜின்னாவை எந்த இந்தியத் தலைவர் பாராட்டினார்? அது எல்.கே. அத்வானிதான்.
2009-ஆம் ஆண்டு தனது புத்தகத்தில் ஜின்னாவைப் புகழ்ந்த இந்தியத் தலைவர் யார்? அவர் பாஜகவின் ஜஸ்வந்த் சிங்" என்று பதிவிட்டுள்ளார்.
2005-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சிக்குச் சென்ற அத்வானி, ஜின்னாவின் கல்லறையில் பார்வையாளர் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகள் இவை, "வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தவர்கள் பலர் உள்ளனர்.
ஆனால், உண்மையில் வரலாற்றை உருவாக்கியவர்கள் மிகச் சிலரே. முகமது அலி ஜின்னா அத்தகைய அரிதானவர்களில் ஒருவர்.
பாகிஸ்தான் அரசியலமைப்புச் சபையில் அவர் ஆற்றிய உரை ஒரு கிளாசிக். ஒவ்வொரு குடிமகனும் தங்கள் மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் உள்ள ஒரு மதச்சார்பற்ற தேசத்தை அவர் வலியுறுத்தினார்" என்று எழுதியிருந்தார்.
- கடந்த ஏழு மாதங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 61 முறை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்திவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
- அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த உச்சிமாநாட்டிற்குள் மோடி தனது நல்ல நண்பருடனான இராஜதந்திர அரவணைப்பை மீண்டும் தொடங்குவாரா?
ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் மூன்று அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.
இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டைப் புறக்கணித்துள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி அதில் தைரியமாக பங்கேற்கிறார் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் இல் பதிவிட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், "அடுத்த ஜி-20 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறும், அந்த நேரத்தில், இந்தியா அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம்.
ஆனால், கடந்த ஏழு மாதங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 61 முறை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்திவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
அடுத்த 12 மாதங்களில் அவர் இன்னும் எத்தனை முறை அதை மீண்டும் மீண்டும் சொல்ல முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த உச்சிமாநாட்டிற்குள் மோடி தனது நல்ல நண்பருடனான இராஜதந்திர அரவணைப்பை மீண்டும் தொடங்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
- இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
- நேற்று கூட சவுதி அரேபியா பட்டத்து இளவரசரை சந்திக்கும்போது இதை கருத்தை தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவியது. இருநாட்டு ராணுவ தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போர் நிறுத்தப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நான்தான் தலையிட்டு நிறுத்தினேன் எனத் தெரிவித்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. ஆனால், டிரம்ப் தலையிடவில்லை என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
ஆனால், உலகத் தலைவர்களை சந்திக்கும்போதெல்லாம், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினேன் எனத் தெரிவித்து வருகிறது.
அமெரிக்க நேரப்படி நேற்று சவுதி பட்டத்து இளவரசரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் "இந்த கூற்று நிறுத்தப்பட்டுள்ள என நினைத்தால் உலகிற்கு மீண்டும் நினைவூட்டுகிறார். இதற்கு முன்னதாக சவுதி அரேபியா, கத்தார், எகிப்பு, பிரிடடன், நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் பல்வேறு இடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதை தெரிவித்தார். தற்போது 60-வது முறையாக கூறியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
சவுதி பட்டத்து இளவரசர் உடனான சந்திப்பின்போது டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
நான் உண்மையில் 8 போர்களை நிறுத்தி விட்டேன். மற்றொரு போரை நிறுத்த புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. புதினை பார்த்து எனக்கு சற்று ஆச்சர்யமாக உள்ளது. நான் நினைத்ததை விட சற்று நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால், நாங்கள் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினோம். பட்டியலை நான் வெளியிட முடியும். அந்த பட்டியலில் என்னைவிட உங்களுக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- LIC இன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
- அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதி முதலீடு.
அதானி குழுமத்தின் நலனுக்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்பு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோதானி (மோடி + அதானி) கூட்டு முயற்சியானது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் (LIC) அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியது என்பது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
2025 மே மாதத்தில் பல்வேறு அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதியை முதலீடு செய்வதற்கான திட்டத்தை இந்திய அதிகாரிகள் வரைவு செய்து செயல்படுத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் இலக்குகளாக அதானி குழுமத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது" மற்றும் "மற்ற முதலீட்டாளர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது ஆகியவை அறிவிக்கப்பட்டன.
இந்த மோதானி மெகா மோசடி முழுமையையும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே விசாரிக்க முடியும் என்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது வருகிறது. இது தொடர்பாக 100 கேள்விகளை நாங்கள் எழுப்பியுள்ளோம்.
நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் யாருடைய அழுத்தத்தின் கீழ், நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு தனியார் நிறுவனத்தை பிணை எடுப்பது என்று முடிவு செய்தனர்?
2024 செப்டம்பர் 21, அன்று அமெரிக்காவில் கவுதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எல்ஐசி பங்குகள் நான்கு மணி நேர வர்த்தகத்தில் 7,850 கோடி ரூபாய் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.
முதல் கட்டமாக, குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு (PAC), LIC எவ்வாறு அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்திக்கப்பட்டது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- டிரம்ப் இந்தியாவின் கொள்கையை அறிவிப்பது கடந்த 6 நாட்களில் இது 4-வது முறையாகும்.
- டிரம்பிடமிருந்து ரஷிய எண்ணெய் பற்றிய தகவல்களையும் பெறுகிறோம்.
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீபாவளி வாழ்த்துகளை பரிமாறி கொண்டார்.
இதுகுறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறும்போது," ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளதாகவும் மேலும் கொள்முதலை குறைக்கும்" என்றார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக எண்ணெய் வாங்க போவதில்லை என்று டிரம்ப் மீண்டும் கூறியதற்கு காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மோடி மறைப்பதை டிரம்ப் வெளிப்படுத்துகிறார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி இறுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசியதை ஒப்புக்கொண்டுள்ளார். டிரம்ப் தனக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்ததாக மட்டுமே கூறினார். ஆனால் மோடி எதை மறைத்தாலும், டிரம்ப் வெளிப்படுத்துகிறார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறித்து பேசிய தாகவும் இந்த இறக்குமதி நிறுத்தப்படும் என்று அவருக்கு உறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். டிரம்ப் இந்தியாவின் கொள்கையை அறிவிப்பது கடந்த 6 நாட்களில் இது 4-வது முறையாகும்.
முதலில் டிரம்ப்பிடம் இருந்து ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களைப் பெற்றோம். இப்போது அவரிடமிருந்து ரஷிய எண்ணெய் பற்றிய தகவல்களையும் பெறுகிறோம். பிரதமர் மோடி எதை மறைக்கிறார்? அவர் எந்த அழுத்தத்தில் இருக்கிறார்? அவர் எதற்கு பயப்படுகிறார்? ஹவ்டி மோடி-நமஸ்தே டிரம்ப் முற்றிலும் கெட்டுப்போனது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
- பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியை அந்த மாநில மக்கள் தூக்கி வீச தயாராகி விட்டார்கள் என்றார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை நிறுத்தியது நான்தான் என 52-வது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரை 2 முறையும், ராணுவ தளபதியை 2 முறையும் டிரம்ப் சந்தித்த பிறகும், பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை.
ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என 2 முறை டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக விவகாரங்களைப் பேசும் மோடி, இந்த விவகாரத்தில் மெளனமாக இருப்பது ஏன்?
பீகாரில் நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க. ஆட்சியை அந்த மாநில மக்கள் தூக்கி வீச தயாராகி விட்டார்கள் என்றும், நிதிஷ்குமார் எடுப்பார் கைப்பிள்ளை என்றும் கடுமையாக தெரிவித்துள்ளார்.
- பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு குறு தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தில் உள்ளது.
- பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்ததால், அரசியல் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகத் இருக்கின்றன.
மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் அவரது தொழிலதிபர் நண்பர்களின் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவில் செல்வம் ஒரு சிலரிடம் குவிந்து கிடப்பது குறித்து ஒன்றன்பின் ஒன்றாக அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
மில்லியன் கணக்கான இந்தியர்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடும் அதே வேளையில், நாட்டின் பாதி செல்வத்தை வெறும் 1,687 பேர் மட்டுமே வைத்துள்ளனர்.
மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் இயக்கப்படும் இந்த மிகப்பெரிய செல்வக் குவிப்பு, நம் நாட்டில் மிகப்பெரிய பொருளாதார சமத்துவமின்மையை உருவாக்குகிறது.
இந்த சமத்துவமின்மை பரவலான சமூக பாதுகாப்பின்மை மற்றும் அதிருப்தியை உருவாக்குகிறது.
மற்ற நாடுகளில் சமீபத்திய நிகழ்வுகள், இதே தீவிர பொருளாதார சமத்துவமின்மையும், முடக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகளும் அரசியல் குழப்பத்திற்கு ஊக்கியாக மாறிவிட்டன என்பதைக் காட்டுகின்றன.
இந்த அரசாங்கம் இந்தியாவை அதே பாதையில் தள்ளுகிறது. அதிகார உறவு காரணமாக ஒரு சில தொழிலதிபர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். பிரதமரின் கொள்கைகள் அவரது சில தொழிலதிபர் நண்பர்களின் நன்மைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.
இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு குறு தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தில் உள்ளது.
இந்த அழுத்தம் உள்நாட்டுக் கொள்கைகள் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கை தோல்விகளின் விளைவாகும்.
சாதாரண மக்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்புகள் சுருங்கி வருகின்றன. பணவீக்கம் மிக அதிகமாக உயர்ந்து, வேலை செய்பவர்கள் கூட சேமிப்பிற்குப் பதிலாக கடனில் அதிகளவில் சுமையாக உள்ளனர்.
கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடுகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன, மேலும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பலவீனமடைந்து வருகின்றன.
மில்லியன் கணக்கான மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு வலையை வழங்கிய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற வெற்றிகரமான திட்டங்கள் இப்போது ஊதிய நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் கூட கிடைப்பதில்லை.
செல்வத்தின் இத்தகைய தீவிர மையப்படுத்தல் பொருளாதாரத்திற்கு ஒரு பிரச்சனை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் ஆன்மாவின் மீதான நேரடித் தாக்குதலாகும். பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்ததால், அரசியல் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகத் இருக்கின்றன.
இது வளர்ந்து வரும் சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான குடிமக்கள் ஜனநாயகம் மற்றும் வளர்ச்சியின் செயல்முறையிலிருந்து படிப்படியாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.






