என் மலர்
நீங்கள் தேடியது "MSME"
- பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு குறு தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தில் உள்ளது.
- பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்ததால், அரசியல் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகத் இருக்கின்றன.
மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் அவரது தொழிலதிபர் நண்பர்களின் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவில் செல்வம் ஒரு சிலரிடம் குவிந்து கிடப்பது குறித்து ஒன்றன்பின் ஒன்றாக அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
மில்லியன் கணக்கான இந்தியர்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடும் அதே வேளையில், நாட்டின் பாதி செல்வத்தை வெறும் 1,687 பேர் மட்டுமே வைத்துள்ளனர்.
மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் இயக்கப்படும் இந்த மிகப்பெரிய செல்வக் குவிப்பு, நம் நாட்டில் மிகப்பெரிய பொருளாதார சமத்துவமின்மையை உருவாக்குகிறது.
இந்த சமத்துவமின்மை பரவலான சமூக பாதுகாப்பின்மை மற்றும் அதிருப்தியை உருவாக்குகிறது.
மற்ற நாடுகளில் சமீபத்திய நிகழ்வுகள், இதே தீவிர பொருளாதார சமத்துவமின்மையும், முடக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகளும் அரசியல் குழப்பத்திற்கு ஊக்கியாக மாறிவிட்டன என்பதைக் காட்டுகின்றன.
இந்த அரசாங்கம் இந்தியாவை அதே பாதையில் தள்ளுகிறது. அதிகார உறவு காரணமாக ஒரு சில தொழிலதிபர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். பிரதமரின் கொள்கைகள் அவரது சில தொழிலதிபர் நண்பர்களின் நன்மைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.
இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு குறு தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தில் உள்ளது.
இந்த அழுத்தம் உள்நாட்டுக் கொள்கைகள் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கை தோல்விகளின் விளைவாகும்.
சாதாரண மக்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்புகள் சுருங்கி வருகின்றன. பணவீக்கம் மிக அதிகமாக உயர்ந்து, வேலை செய்பவர்கள் கூட சேமிப்பிற்குப் பதிலாக கடனில் அதிகளவில் சுமையாக உள்ளனர்.
கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடுகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன, மேலும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பலவீனமடைந்து வருகின்றன.
மில்லியன் கணக்கான மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு வலையை வழங்கிய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற வெற்றிகரமான திட்டங்கள் இப்போது ஊதிய நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் கூட கிடைப்பதில்லை.
செல்வத்தின் இத்தகைய தீவிர மையப்படுத்தல் பொருளாதாரத்திற்கு ஒரு பிரச்சனை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் ஆன்மாவின் மீதான நேரடித் தாக்குதலாகும். பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்ததால், அரசியல் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகத் இருக்கின்றன.
இது வளர்ந்து வரும் சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான குடிமக்கள் ஜனநாயகம் மற்றும் வளர்ச்சியின் செயல்முறையிலிருந்து படிப்படியாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.
- ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும்.
- நீங்கள் உங்கள் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார கொள்கைகள் மூலம் சிறு குறு தொழில் துறையை முற்றிலுமாக அழித்துவிட்டீர்கள்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அபராதமாக விதித்த 25 சதவீத வரி நாளை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வர உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க சுங்கத் துறை அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டது.
இதனால், ஏற்கனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இதற்கிடையே நேற்று குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, "விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், சிறு தொழில்களின் நலன்தான் மிக முக்கியமானவை. அமெரிக்காவின் மிரட்டலால், நமக்கு அழுத்தம் அதிகரிக்கலாம். ஆனால், அனைத்தையும் நாம் தாங்கிக் கொள்வோம்.
நான் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும். வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு வெளியே இந்திய பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக ஒரு பெரிய பலகையை வைத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்நிலையில் அமெரிக்காவின் வரிவிதிப்பு, விசித்திரமான இந்திய வெளியுறவு கொள்கையின் விளைவு என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
வரிவிதிப்பு மற்றும் இந்திய பொருட்களை வாங்குவது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, "நாம் கடைப்பிடித்து வரும் மிகவும் விசித்திரமான வெளியுறவுக் கொள்கையின் விளைவுகளை நாம் அனைவரும் இப்போது பார்த்து வருகிறோம்.
இதற்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பார்ப்போம். வெறும் அலங்கார பேச்சுக்கள் மட்டும் போதாது.
நீங்கள் உங்கள் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார கொள்கைகள் மூலம் சிறு குறு தொழில் துறையை (MSME) முற்றிலுமாக அழித்துவிட்டீர்கள்.
அப்படி இருக்கும்போது மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை எவ்வாறு வாங்குவார்கள். உற்பத்தி இல்லாத இடத்தில், பொருட்களை எப்படி வாங்க சொல்ல முடியும்" என்று வினவியுள்ளார்.
- ஸ்மார்ட் மீட்டரில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.
- மின்வாரியத்துக்கு அரசு வழங்கி வரும் 10 சதவீத மானியம் நிறுத்தப்படும்போது அரசுக்கு நிதிச்சுமை குறையும்.
சென்னை:
தமிழ்நாட்டில் குறு-சிறு தொழில் நிறுவனங்கள் 2 லட்சத்துக்கும் அதிகமாக இயங்கி வருகிறது. சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருப்பூர், கோவை, ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, நெல்லை பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் அதிகமாக இந்த தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
'எம்.எஸ்.எம்.இ' என்று அழைக்கப்படும் இந்நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின்சார பயன்பாட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். 25 சதவீத கூடுதல் மின்கட்டணத்தை குறைக்க கோரி வலியுறுத்தினார்கள்.
இதனால் தமிழக அரசு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 25 சதவீத கூடுதல் கட்டணத்தை 15 சதவீதமாக அரசு குறைத்தது. மீதி 10 சதவீதத்தை மின் வாரியத்துக்கு அரசு மானியமாக வழங்கியது. இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை உருவானது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, எலக்ட்ரானிக் மின் மீட்டரை ஜூன் மாதத்திற்கு பிறகு ஸ்மார்ட் மீட்டராக மாற்ற உள்ளதாகவும் அரசு தெரிவித்திருந்தது. அப்போது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தப்படும் மின் பயன்பாட்டை தனியாக கணக்கிட்டு அதன்படி 25 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இதன்படி இப்போது சென்னையில் உள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவன தொழிற்பேட்டைகளில், எலக்ட்ரானிக் மீட்டரை ஸ்மார்ட் மீட்டராக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக மார்ச் முதல் வாரம் டெண்டர் முடிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு சென்னையில் உள்ள குறு-சிறு தொழிற்சாலைகளில் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் பணி ஜூன் மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஸ்மார்ட் மீட்டரில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.
அதேபோல் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும்.
அதன் அடிப்படையில் 25 சதவீதம் கட்டணம் கூடுதலாக கணக்கிட்டு வசூலிக்கப்படும். இதற்காக சென்னை புறநகரில் உள்ள தொழிற்பேட்டைகளில் 10 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன்மூலம் மின்வாரியத்துக்கு அரசு வழங்கி வரும் 10 சதவீத மானியம் நிறுத்தப்படும்போது அரசுக்கு நிதிச்சுமை குறையும்.
- குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தி வருகிறது.
- நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது,
இன்று MSMEDay!
நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS), பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்கப் புத்தொழில் நிதி (TN SC/ST Fund), சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள், தமிழ்நாடு தென்னை நார்க் கொள்கை 2024, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை – 2023
உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தி வருகிறது.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் MSME-க்கள் இன்னும் பெரும்பங்காற்றத் தேவையான ஊக்குவிப்பையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம்! என்று கூறியுள்ளார்.






