என் மலர்

  நீங்கள் தேடியது "Registration"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பி.எம்.கிசான் வலைதளத்தில் நிலம், ஆதார், இ-கே.ஒய்.சியை பதிவேற்றம் செய்திட வேண்டும்.
  • வருகிற 31-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்த புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைக்கும்.

  மேட்டூர்:

  மேச்சேரி வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்த அனைத்து வேளாண் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.6 ஆயிரம் என 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடி மாற்றம் மூலமாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 12-வது தவணை தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவத்துள்ளது.

  எனவே பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களது நில ஆவணங்களா பட்டா, சிட்டா மற்றும் ஆதார் போன்றவற்றை மேச்சேரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து நிலம் தங்கள் பெயரில் இருப்பதை உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  மேலும் இத்திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான நிதி விடுவிடுப்பு நடைபெறுவதால் தகுதியான விவசாயிகள் அனைவரும் தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து பி.எம்.கிசான் வலைதளத்தில் இ-கே.ஒய்.சியை பதிவேற்றம் செய்திட வேண்டும். எனவே விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையுடன் இ-சேவை மையத்தியோ அல்லது கிராம தபால் அலுவலர்களையோ அணுகி, தங்களது விரல் ரேகையினை பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வருகிற 31-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்த புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது
  • ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் போட்டிகள் துவங்க உள்ளது.

  திருப்பூர் :

  திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.'நாக் அவுட்' முறையில் நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுழற்கோப்பை, பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் போட்டிகள் துவங்க உள்ளது.

  இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் ஆர்வமுள்ள, திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அணிகள் தங்கள் அணியை சங்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 93442 07615 என்ற எண்ணில் தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சார்பதிவாளர் முத்து மாரியப்பன் விண்ணப்பத்தில் உள்ள வாரிசு சான்றிதழ் மற்றும் ஆதார் எண்களை இணையத்தில் சரி பார்த்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  புதியம்புத்தூர்:

  ஓட்டப்பிடாரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முத்துராஜ் என்பவரின் சொத்துகளை அவரது மனைவி பொன்செல்வி (வயது55) என்பவர் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு விண்ணப்பம் வந்திருந்தது.

  பெயர் மாற்றம்

  சார்பதிவாளர் முத்து மாரியப்பன் விண்ணப்பத்தில் உள்ள வாரிசு சான்றிதழ் மற்றும் ஆதார் எண்களை இணையத்தில் சரி பார்த்தார். அப்போது பத்திரப் பதிவுக்காக குறிப்பிட ப்பட்டிருந்த முத்துராஜின் மகள் பாலசவுந்தரி என்பவரின் ஆதார் எண்ணை சரிபார்த்ததில் அதில் வேறொருவரின் பெயர் வந்தது.

  போலி ஆதார்

  இதனால் சந்தேகம் அடைந்த சார் பதிவாளர் நடத்திய விசாரணையில், பாலசவுந்தரிக்கு பதிலாக முப்புலிவெட்டியை சேர்ந்த நட்டார் மனைவி ஒளி முத்தம்மாள் என்பவரை அழைத்து வந்தது தெரிந்தது.

  இதையடுத்து சார்- பதிவாளர் அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )சுதேசன், சப்- இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தீவிர விசாரணை நடத்தினர்.

  அதில் போலி ஆதார் கார்டு மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்ற புதியம்புத்தூர் மேல மடத்தை முத்துராஜ் மனைவி பொன் செல்வி, அவரது மகன் சுமன்ராஜ், தூத்துக்குடி சேர்ந்த முத்துராஜா மனைவி சசி பாலா (28), பத்மநாபன் மனைவி பொன்சுமதி, புதியமுத்தூர் மேல மடத்தைச் சேர்ந்த பொன்னுத்தாய் (75), முப்புலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த நட்டார் மனைவி ஒளி முத்தம்மாள் (39) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் மாவட்டத்தை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
  • 156 வகையான இ.எஸ்.ஐ., பி.எப், பிடித்தம் செய்யப்படாத தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.

  சேலம்:

  சேலம் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுதளம் என்ற ஒரு தரவுதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

  இந்த தரவு தளத்தல் கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், பேக்கிங் செய்வோர், தச்சு வேலை செய்வோர், கல் குவாரி தொழிலாளர்கள், மர ஆலைத்தொழிலாளர்கள், உள்ளூர் கூலித் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், அங்கன்வாடிப்பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 156 வகையான இ.எஸ்.ஐ., பி.எப், பிடித்தம் செய்யப்படாத அமைப்புச்சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.

  அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. https://eshram.gov.in என்ற இணைதளத்தில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வழிவகை உண்டு.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உரிமம் புதுப்பிக்காத இறால் பண்ணைகள் அகற்றப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • உரிமம் புதுப்பித்திட விண்ணப்பிக்கப்பட்டதும், புதிதாக 13 இறால்பண்ணைகள் பதிவு வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதும் அடங்கும்.

  ராமநாதபுரம்

  ராமேசுவரம்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளில், 11 இறால்பண்ணைகள் கடல்சார் நீர்வாழ் உயிரின் வளர்ப்பு ஆணையத்திடமிருந்து உரிய பதிவு பெற்று இயங்கிவரும் இறால் பண்ணைகளாகும். அதில் 8 பதிவு உரிமம் காலாவதியாகி உள்ள இறால் பண்ணைகள். அவைகளின் உரிமம் புதுப்பித்திட விண்ணப்பிக்கப்பட்டதும், புதிதாக 13 இறால்பண்ணைகள் பதிவு வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதும் அடங்கும்.

  இந்த நிலையில் கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய தலைவர் மற்றும் கலெக்டர், ராமேசுவரம்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளுக்கு மட்டும் 7-வது மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடத்தப்பட்டுமாவட்டக்குழு உறுப்பினர்களால் ராமேசுவரம்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை ஆய்வு செய்திட உபகுழு அமைத்து கூட்டாய்வு செய்து கூட்டறிக்கை அளித்திட ராமநாதபுரம் வருவாகோட்டாட்சியரை தலைவராக கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கடந்த 22.10.2020 அன்று நடைபெற்ற 9- வது மாவட்ட அளவிலான குழுக்கூட்டத்தில் ராமேசுவரம்பகுதியில் உள்ள அனைத்து இறால் பண்ணைகளையும் உபகுழு ஆய்வுக்கு உட்படுத்தியது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

  ராமேசுவரம்வட்ட த்தில் அனைத்துஇறால் பண்ணைகளை மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களால் ராமேசுவரம்காவல்துறை உதவியுடன் ஆய்வு செய்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இதன் தொடர்ச்சியாக, 22.10.2020 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மாவட்ட குழு உறுப்பினர்களால் 16.9.2021 அன்று ( மாவட்ட வருவாய் அலுவலர் நீங்கலாக)மாவட்ட வன அலுவலர், மாவட்ட ஊராட்சி செயலர், வேளாண் இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் (மீன்வளம்) மற்றும் மீனவர் நலத்துறை ஆகியோர்களால் ஆய்வு முடிக்கப்பட்டு மாவட்ட வன அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர்களது கள ஆய்வின் அறிக்கையின் அடிப்படையிலும் மற்றும் அனைத்துமாவட்டகுழு உறுப்பினர்களின் அறிக்கையின் அடிப்படையயிலும் 10- வது மாவட்ட அளவிலான குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டு , அதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் அடிப்படையில் ராமேசுவரம்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை அகற்றிடகடல்சார் நீர்வாழ் உயிரினவளர்ப்பு ஆணையச்சட்டம் 2005 - ன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனமாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் 10 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2021, ஆகஸ்ட் 27 ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தாா்.
  • 2022 - 23-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.

  தஞ்சாவூர்:

  தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசுக் கலைக் கல்லூரிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூா் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் எழிலன் தெரிவித்துள்ளாா்.

  இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:-தமிழகத்தில் 10 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2021, ஆகஸ்ட் 27 ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தாா். இதன்படி, தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலைக் கல்லூரியும், திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு மகளிா் கலைக் கல்லூரியும் தொடங்கவும், இதில் இளநிலையில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணினி அறிவியல், கணிதம் ஆகிய 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

  இதையடுத்து, 2022 - 23 -ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப ங்களை இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். திருக்காட்டுப்பள்ளியில் தொடங்க உள்ள புதிய அரசு கலைக் கல்லூரி தற்காலிகமாக பூதலூா் ஊராட்சி ஒன்றிய பழைய அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிா் கலைக் கல்லூரி தற்காலிகமாக ஜாமியா அரசு உதவிபெறும் பள்ளியில் தொடங்கப்பட உள்ளது.

  எனவே, அந்தந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். இது தொடா்பான மேலும் தகவல்களைப் பெற திருக்காட்டுப்பள்ளி அரசுக் கல்லூரிக்கு தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியின்உதவி மைய த்தையும், கூத்தாநல்லூா் அரசுக் கல்லூரிக்கு திருவாரூா் திரு.வி.க. அரசுக் கலைக் கல்லூரியின் உதவி மையத்தையும் நேரில் அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொதுத்துறை நிறுவனமான (சி.பி.சி.எல்) சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
  • பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை வாங்கவும் விற்கவும் உள்ள தடைகளை நீக்கி பத்திர பதிவுகள் செய்யும் வகையில் உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர்.

  நாகப்பட்டினம்:

  திருமருகல் ஒன்றியம் பனங்குடி இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனமான (சி.பி.சி.எல்) சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. விவசாய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகேசன் வரவேற்றார்.

  இக்கூட்டத்தில் திருமணம் மற்றும் உயிரிழப்பு போன்ற நேரங்களில் தங்களது சொத்துக்களை அடமானம் வைக்கவோ, விற்கவோ முடியாத சூழல் நிலவுவதால் நாகூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை வாங்கவும் விற்கவும் உள்ள தடைகளை நீக்கி பத்திர பதிவுகள் செய்யும் வகையில் உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க உறுப்பினர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து பலர் கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பதிவு செய்ய தவறினால் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண், தற்போதைய இருப்பிட முகவாி ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

  தாராபுரம்:

  தாராபுரம் நகராட்சி தலைவா் கே.பாப்புகண்ணன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

  தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள வெளிமாநிலத்தவா்கள் மற்றும் அவா்களை வைத்து வீடு கட்டும் உாிமையாளா்கள், என்ஜினீயா்கள், கட்டிட ஒப்பந்ததாரா்கள், ஓட்டல் மற்றும் விடுதி உாிமையாளா்–கள், பண்ணை உாிமையாளா்கள், பானிபூாி மற்றும் குல்பி ஐஸ் தொழில் செய்து வருபவர்கள் மற்றும் உள்ளூா்வாசிகள் மூலம் இதர வேலை செய்யும் வெளிமாநிலத்தவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. எனவே 15 நாட்களுக்குள் அவர்களை பற்றிய விவரங்களை தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  அதற்காக அவா்கள் தங்கள் பெயா், வயது, புகைப்படம், ஆதாா் அட்டை, கைப்பேசி எண், தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயா், தற்போதைய முகவாி, நிறுவனத்தின் உாிமையாளா் ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண், தற்போதைய இருப்பிட முகவாி ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய தவறினால் அவா்கள் அல்லது அவா்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கானாவில் பத்திரப்பதிவுக்கான புதிய நடைமுறை குறித்த அறிவிப்பு ஒன்றை முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வெளியிட்டார்.#TELANGANACM #ChandraSekharRao
  ஐதராபாத்:

  தெலுங்கானாவில் விவசாய மக்களுக்காக ரைத்து பந்து என்ற முதலீட்டு உதவி திட்டத்தை கரீம்நகரில் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பத்திரப்பதிவுக்கான புதிய நடைமுறை குறித்த அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

  இந்த புதிய திட்டத்தின்படி விவசாயிகள் தங்களிடம் உள்ள பட்டா, பாஸ்புத்தகம் மூலம் எளிதாக வங்கி கடன்களை பெற இயலும். மாநிலம் முழுவதும் உள்ள 2.38 கோடி ஏக்கர் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டதில், 1.4 கோடி ஏக்கர் விவசாய நிலமாக அறியப்பட்டு அவை முறையாக டிஜிட்டல் முறையில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

  இந்த புதிய முறை ஜூன் 2-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருவதோடு, மண்டல் ரெவின்யூ அலுவலர்கள் சார் பதிவாளர்களாக செயல்பட இருக்கிறார்கள். தெலுங்கானா மாநிலம் உருவான நாளில் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இந்த திட்டத்தின்படி இணையதளம் மூலம் பத்திரப்பதிவுக்கான தேதியை பதிவு செய்து விட்டு, அந்த நாளில் பத்திரபதிவை மிக எளிதாக செய்து முடிக்க முடியும். இது குறித்த தகவல் 4 அல்லது 5 நாட்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  தெலுங்கானா அரசால் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீரமைப்புகள் அடிப்படையில் பத்திரப்பதிவு முறைகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பத்திரப்பதிவு சமயத்தில் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இந்த முறை பெரும் உதவியாக இருக்கும் என்று தெலுங்கான அரசு தெரிவித்துள்ளது. #TELANGANACM #ChandraSekharRao
  ×