பதிவுத்துறை கார் ஏலம்

பொது ஏலம் வருகிற 31-ந்தேதி காலை 10 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளது. பதிவு செய்தவர்கள் மட்டும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
பதிவுத்துறை கார் ஏலம்
Published on

மதுரை

மதுரை மண்டல துணைப்பதிவு துறைத்தலைவர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அம்பாசிட்டர் கார் (வாகன எண்.TN64G0159)பொது ஏலம் வருகிற 31-ந்தேதி காலை 10 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மதுரை மண்டல துணைப்பதிவு துறைத்தலைவர் அலுவலகத்தில் தங்களது ஆதார், ரேஷன், பேன் கார்டு நகலுடன் காப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தி நாளை (28-ந்தேதி) மாலை 6 மணிக்குள் பெயரை பதிவு செய்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

வாகனம் ஏலம் எடுக்கவில்லையெனில் காப்புத்தொகை திருப்பி அளிக்கப்படும். ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு கோரும் நபருக்கு வாகனம் விற்பனை செய்யப்படும். மேலும் உறுதி செய்யப்பட்ட வாகன ஏலத்தொகையினை அரசு நிர்ணயம் செய்துள்ள 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து ரொக்கமாக செலுத்தி வாகனத்தினை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு துணைப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம், மதுரை மண்டல ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிடம், டி.என்.ஏ.யு. நகர், ராஜகம்பீரம், ஒத்தக்கடை, திருமோகூர் சாலை, மதுரை என்ற முகவரியிலோ அல்லது 0452 2422517 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com