என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akshaya Tritiya"

    • அட்சய திருதியை நாளில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்ய பொதுமக்கள் கோரிக்கை.
    • 2024-25 ம் நிதியாண்டில் கடந்த 10.2.2025 அன்று ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது.

    சென்னை:

    பத்திரப்பதிவுத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மங்களகரமான நாளான நேற்று (ஏப். 30-ந் தேதி) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.

    பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நேற்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.

    2024-25 ம் நிதியாண்டில் கடந்த 10.2.2025 அன்று ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.

    2025-26-ம் நிதியாண்டில் இதற்கும் அதிகமாக நேற்று ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இதுவரை இல்லாத அளவில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது என வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்க வர்த்தகத்தில் 60 சதவீத வணிகம் பெங்களூருவிலும், மீதமுள்ளவை பெரும்பாலும் ஹூப்பள்ளி, மங்களூரு மற்றும் மைசூருவிலும் நடைபெற்றது.
    • நேற்று ஒரு கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ராமர் உருவம் கொண்ட நாணயங்களுக்கான தேவை அதிகரித்தது.

    பெங்களூரு:

    அட்சய திருதியை நாளான நேற்று (புதன்கிழமை) கர்நாடக மாநிலம் முழுவதும் தங்க நகைகள் அதிகமாக வாங்கப்பட்டது. மாநிலத்தில் கிட்டத்தட்ட 2 டன் தங்கம் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.1,700 கோடி ஆகும்.

    தங்க வர்த்தகத்தில் 60 சதவீத வணிகம் பெங்களூருவிலும், மீதமுள்ளவை பெரும்பாலும் ஹூப்பள்ளி, மங்களூரு மற்றும் மைசூருவிலும் நடைபெற்றது.

    கடந்த ஆண்டும் மாநிலத்தில் சுமார் 2 டன் மட்டுமே வர்த்தகம் செய்யப்பட்டிருந்தாலும் விலை குறைவாக இருந்தது. கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு விற்பனை அளவு சமமாக உள்ளது.

    தங்கத்திற்கான மிகப்பெரிய தேவை விலை உயர்வுக்கு வழிவகுத்தது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்குவது குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ராமர் உருவம் கொண்ட நாணயங்களுக்கான தேவை அதிகரித்தது. கூடுதலாக, ஆன்லைன் கடைகளில் இருந்து 10 நிமிடங்களுக்குள் தங்கத்தை வாங்க முடியும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு தங்கம் வாங்குவதை இன்னும் எளிதாக்கியது.

    • டெல்லியில் ஒட்டுமொத்த திருமணம் தொடர்பான வணிகம் ரூ.1,000 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிட்டுள்ளது.
    • தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகத்தில் மட்டும் சுமார் ரூ.200 கோடி வருவாய் கிடைக்கும்.

    தேசிய தலைநகரில் இன்று அட்சய திருதியை முன்னிட்டு இன்று ஒரே நாளில் சுமார் 21,000 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதனால், டெல்லியில் திருமணம் தொடர்பான வணிகங்கள் ஒரே நாளில் ரூ.1,000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்து நாட்காட்டி மாதமான வைசாகத்தின் பிரகாசமான பாதியின் மூன்றாம் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் அட்சய திருதியை, இந்த ஆண்டு புதன்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.

    இதுகுறித்து வர்த்தக மற்றும் தொழில்துறை சபை கூறுகையில்," இது திருமண சீசனின் உச்ச நாட்களில் ஒன்றாகும். இது விருந்து அரங்குகள், ஹோட்டல்கள், கேட்டரிங் நிறுவனங்கள், சலூன்கள், அலங்கார நிறுவனங்கள், நிகழ்வு மேலாளர்கள் மற்றும் இசைக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு வணிகங்களுக்கு பயனளிக்கிறது.

    இன்று டெல்லியில் ஒட்டுமொத்த திருமணம் தொடர்பான வணிகம் ரூ.1,000 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிட்டுள்ளது.

    தேவை அதிகமாக இருப்பதால் விருந்து அரங்குகள் மற்றும் ஹோட்டல்களின் விலைகள் 10-15 சதவீதம் அதிகரித்துள்ளன.

    தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகத்தில் மட்டும் சுமார் ரூ.200 கோடி வருவாய் கிடைக்கும்" என்றார்.

    மேலும், "இருப்பினும், தங்கத்தின் விலை சாதனை அளவில் உயர்ந்துள்ளதால், வாங்குபவர்கள் இலகுரக நகைகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று ரூ.73,500 ஆக இருந்த பத்து கிராம் தங்கத்தின் விலை தற்போது ரூ.97,000 ஆக உள்ளது.

    இதன் விளைவாக, வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்ய வர்த்தகர்கள் சிறிய, இலகுவான தங்கம் மற்றும் வைர நகைகளில் கவனம் செலுத்துகின்றனர்.

    குடும்பங்கள் தங்கள் திருமண பட்ஜெட்டில் சுமார் 10 சதவீதத்தை ஆடைகளுக்காகவும், 15 சதவீதத்தை நகைகளுக்காகவும், தலா 5 சதவீதத்தை மின்னணு பொருட்கள், இனிப்புகள் மற்றும் உலர் பழங்களுக்காகவும் செலவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

    சிடிஐ-ன் மூத்த துணைத் தலைவர் தீபக் கார்க் கூறுகையில், "பரிசுப் பொருட்கள் செலவினன் சுமார் 4 சதவீதம் ஆகும்.

    சேவைகள் பிரிவில், பட்ஜெட்டில் 5 சதவீதம் பொதுவாக விருந்து அரங்குகள் மற்றும் ஹோட்டல்களுக்கும், 3 சதவீதம் நிர்வாகத்திற்கும், 10 சதவீதம் கூடாரம் மற்றும் அலங்கார சேவைகளுக்கும், மேலும் 10 சதவீதம் கேட்டரிங் போன்ற பிற சேவைகளுக்கும் செல்கிறது என்று அவர் கூறினார்.

    மலர் அலங்காரம் மொத்த செலவுகளில் 4 சதவீதம் ஆகும், அதே நேரத்தில் போக்குவரத்து, புகைப்படம் எடுத்தல் மற்றும் இசை தொடர்பான சேவைகள் ஆகியவை சுமார் 15 சதவீதமாகும்" என்றார்.

    • அட்சய திருதியை தினம் அனைவர் வாழ்விலும் வெற்றி, செழிப்பு, மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.
    • இந்த தினம் வளர்ந்த இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு புதிய பலத்தை அளிக்கட்டும்.

    அட்சய திருதியை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    அட்சய திருதியை தினம் அனைவர் வாழ்விலும் வெற்றி, செழிப்பு, மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். இந்த தினம் வளர்ந்த இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு புதிய பலத்தை அளிக்கட்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பித்ரு கடன் தீர்க்க உகந்த நாள்.
    • திருதியை திதியின் அதிதேவதை கவுரி என்பதால் பார்வதி தேவியை வழிபட்டால் திருமணத் தடை அகலும்.

    அட்சய திருதி நாளில் செய்ய வேண்டிய சுப காரியங்கள்:

    அட்சய திருதியை நாளான இன்று புதுக்கணக்கு தொடங்க, புதிய தொழில் துவங்க வீடு கட்ட ஆரம்பிக்க, கிணறு தோண்ட, நெல் விதைக்க, கல்வி கற்க ஆரம்பித்தல், பெண் பார்க்க, திருமணம் நிச்சயித்தல் போன்றவற்றிற்கு சிறந்த நாளாகும்.

    பித்ரு கடன் தீர்க்க உகந்த நாள்.

    திருதியை திதியின் அதிதேவதை கவுரி என்பதால் அன்று பார்வதி தேவியை வழிபட்டால் திருமணத் தடை அகலும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.

    பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து செந்தாமரை மலர்களால் வழிபட்டால் தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.

    • தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வியில் மேன்மை கிட்டும்.
    • தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும்.

    நமது நாட்டில் பெரும்பான்மையான பண்டிகைகள் பஞ்சாங்கத்தின் முக்கிய அம்சங்களான திதி மற்றும் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு அனுசரிக்கப்படுகின்றன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பிடுவது திதியாகும். பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் வளர்தல் என்று பொருள்.

    அட்சய திருதியை நாளான இன்று செய்ய வேண்டிய தான தர்மங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    * கோடை வெயில் தாக்கம் தீர குடை, விசிறி, காலணி, பாய், போர்வை வழங்கினால் இன்ப வாழ்வு உண்டாகும்.

    * ஆடை தானம் செய்ய மன நிம்மதி கிட்டும்.

    * தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வியில் மேன்மை கிட்டும்.

    * தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும்.

    * தீராத நோயால் அவதிப்படுபவர்கள், உடல் நிலை மோசமானவர்களுக்கு மருந்து வாங்கித் தருவதால், உடல் ஆரோக்கியமாகும்.

    * பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து பசுவிற்கு உணவளித்தால் சகலபாவமும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.

    * பெண்கள் புடவை, ஜாக்கெட் மற்றும் மங்களப் பொருட்களை தானமாக வழங்க சுமங்கலித்தன்மை கூடும்.

    * படிக்கும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

    • காலை முதலே சென்னையில் உள்ள அனைத்து நகைகக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.
    • நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வருகிற 3-வது திதியை 'அட்சய திருதியை' என்று குறிப்பிடுவார்கள். அந்த நாளில் சிறிய அளிவிலாவது தங்கம் உள்பட மங்கல பொருட்களை வாங்குவது வழக்கம். தங்க ஆபரணங்களை வாங்குவது நன்மை தரும் என்றும் அதன் மூலம் மேலும், மேலும் தங்கம் அபிவிருத்தியாகும் என்பது மக்களின் நம்பிக்கை.

    இந்த நிலையில், இன்று அட்சய திருதியை ஆகும். இதனால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் காலை முதலே சென்னையில் உள்ள அனைத்து நகைகக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலையில் மாற்றமில்லை. ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.8,980-க்கும் ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது.

    காலை 10.30 மணிக்கு தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதால் காலையில் நகைக்கடைகளுக்கு செல்வோர் பழைய விலையில் தங்கம் வாங்கலாம் என நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். 

    • அட்சய திருதியை நாளில் ஆதிசங்கரருக்கு ஏழை பெண் வறுமையிலும் நெல்லிக்கனியை தானம் தந்தார்.
    • கிருஷ்ணன் தனது நண்பர் குசேலர் அன்புடன் கொடுத்த அவலை அட்சயம் என்று கூறி மூன்று பிடி உண்டு கோடி கோடியாக செல்வங்களை அள்ளிக் கொடுத்து குசேலனை குபேரனாக்கினார்.

    அட்சய திருதியை நாளில் நடந்த வரலாற்று சம்பவங்கள்

    * படைத்தல் தொழிலை நடத்தி வரும் பிரம்மா அட்சய திருதியை நாளில் உலகத்தை படைத்தார். அதனால் தான் உலக மக்களுக்கு தேவையான வளங்கள் உற்பத்தியாகிக் கொண்டு இருக்கிறது. மக்கள்தொகை உபரியாகிக் கொண்டு இருக்கிறது.

    *அட்சய திருதியை நாளில் ஆதிசங்கரருக்கு ஏழை பெண் வறுமையிலும் நெல்லிக்கனியை தானம் தந்தார். மனம் குளிர்ந்த ஆதிசங்கரர் ஏழைப் பெண்ணின் வறுமை நீங்கும் எனக்கூறி, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமகாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஏழை பெண்ணின் வறுமையை போக்க தங்க நெல்லிக் கனிகளை மழையாக பொழியச் செய்தார்.

    * இதே நாளில் கிருஷ்ணன் வறுமையில் வாடிய தனது நண்பர் குசேலர் அன்புடன் கொடுத்த அவலை அட்சயம் என்று கூறி மூன்று பிடி உண்டு கோடி கோடியாக செல்வங்களை அள்ளிக் கொடுத்து குசேலனை குபேரனாக்கினார்.

    * மகா விஷ்ணுவின் அதிபதி கிழமையான புதன்கிழமையும் கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியும் இணைந்த நாளில் அட்சய திருதியை வருவதால் அன்றைய தினம் மகாலட்சுமி, நாராயணர் படம் வைத்து கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம் பாடி, குசேலர் கதை படித்து அவல் பாயாசம் வைத்து வழிபட்டால் பல தலைமுறை வறுமை, கடன், தீராத சொத்து பிரச்சினை, திருமணத் தடை தீரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    * திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்கு கடன் வழங்கிய குபேரன் அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியை வழிபட்டு சங்கநிதி, பதும நிதியை பெற்றதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் லட்சுமி குபேர பூஜை செய்தால் குறையாத செல்வம் உள்ள செல் வந்தர்களாக, லவுகீக வாழ்க்கைக்கு தேவையான அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்று பூரண நலத்துடன் வாழலாம்.

    • அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
    • அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை.

    அட்சயம் என்ற சொல்லுக்கு குறைவில்லாதது என்று பொருள். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் மென்மேலும் வளரும், இந்த நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து பாக்கிய பலனை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

    சமீப காலத்தில் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்ற நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை.

    பரணி, பூரம், பூராடம் போன்ற சுக்கிரனின் நட்சத்திரம் வரும் நாட்களில் புதன், சுக்கிர ஹோரையில் தங்க நகை வாங்கலாம். அதே போல் புதன், வெள்ளி கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் சேர்ந்தது போல இருக்கும் நாட்களில் புதன், சுக்கிரன் ஹோரைகளில் நகை வாங்கினால் தங்கம் சேரும்.

    அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் ஐஸ்வர்யம் எப்போதும் தங்கும்.

    அட்சய திருதியை அன்று வாங்கக் கூடிய சில சுப மங்களப் பொருட்கள்:

    மண்பானை, துளசி செடி, கல் உப்பு, மல்லிகை பூ, சர்க்கரை, வெள்ளை தாமரை, நவதானியங்கள், ராமர் பாதம், சோழி, ஸ்ரீசக்கரம், வலம்புரிச்சங்கு, ஸ்வஸ்திக் சின்னம் போன்ற பொருட்களை வாங்கலாம்.

    சந்தனம், மஞ்சள் கிழங்கு, குங்குமம், வெற்றிலை பாக்கு, முனை முறியாத பச்சரிசி போன்றவற்றை வாங்கினால் லட்சுமி கடாட்சம் கூடும்.

    • தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும்.
    • செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    அட்சய திருதியை தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் கோலம் போட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகள் சாற்ற வேண்டும். குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்கவும்.


    பின்னர் கோலத்தின் மீது பலகை வைத்துக் கோலம் போடவும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள், பொன், சிறிய நகைகள் போடவும். அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். அதன் மீது தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும்.

    இதற்கு முன் கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த பிறகு தூபம், தீபம் காட்டி, பால் பாயாசம் நைவேத்யம் செய்யலாம்.

    இவ்வாறு பூஜை செய்தால் அளவற்ற பலன்கள் கிடைக்கும். அட்சய திருதியை தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. அன்றைய தினம் செய்யப்படும் தானங்கள், பித்ரு காரியங்களுக்குப் பல ஆயிரம் பலன்கள் உண்டாக்கும்.


    பொருளை தேடிக் கொள்வதைப் போல புண்ணியத்தையும் தேடிக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சரியான சந்தர்ப்பமாக அட்சய திருதியை வருகிறது. நீங்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும்.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் 10 சதவீதம் தர்மம் செய்தாலே, அது பல்கி பெருகி உங்களுக்கு 100 சதவீத புண்ணியத்தைத் தேடித் தரும். இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

    இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். மகாலட்சுமி படம் முன்பு நெய் தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலை மகள் உங்கள் வீட்டில் அவதரிப்பாள்.

    • தங்கம் வாங்கினால் தான் நல்லது என்பது தவறு.
    • அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது.

    எந்தெந்த நாட்களில் எதை எதை வாங்கி வைத்தால் நலமாக இருக்கும் வளர்ச்சி அடையும் என்றெல்லாம் பசூர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் பிரதானமாக வெள்ளை நிறப் பொருட்கள் வாங்கினால் நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு மஞ்சள் நிற பொருட்கள் வாங்குவது நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.


    வெள்ளை நிறத்திற்கு பிளாட்டினம் வாங்கலாம். மஞ்சள் நிறத்திற்கு தங்கத்தை வாங்குங்கள் என்கிறார்கள். இதெல்லாம் ஆன்மீக ரீதியாக சரியானதல்ல. ஏற்புடையதும் அல்ல. தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளியும் வாங்கலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை.

    பல நூல்கள் வெள்ளியை மிகவும் உயர்வாக குறிப்பிடுகிறது. அதற்குப் பிறகு தான் தங்கத்தையே கொண்டு வருகிறது. அதனால் வெள்ளியும் வாங்கலாம். ஆனால், தங்கம் வாங்கினால் தான் நல்லது என்பது தவறு. பொதுவாக தானியங்களில் தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள்.

    அதனால் தான் திருமணம் முடிந்த பெண்கள் முதன் முதலாக மாப்பிள்ளை வீட்டிற்கு வரும் போது மரக்காவில் அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கு ஏற்றி அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் உள்ளே வரச் சொல்வார்கள். அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது.

    (கைக்குத்தல் அரிசி தான் முனை முறியாத அரிசி) அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது. அதற்கடுத்து மஞ்சள். இதில் தான் மகிமையும் உள்ளது. மஞ்சள் தான் எல்லா வகையிலும் நல்லது தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம்.

    மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. அடுத்தது, அட்சய திருதியை விரதம் இருப்பது பற்றி பலருக்கு பலவிதமான சந்தேகம் உள்ளது.

    அட்சய திருதியை தினத்தன்று விரதம் இருக்க விருப்பம் உள்ளவர்கள் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    உத்திர கால விரதம் என்ற நூலில் கூட, அன்றைக்கு தானம் செய்யுங்கள் என்று தான் சொல்கிறது. அன்னதானம் செய்யுங்கள். வஸ்திர தானம் துணி தானம் கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும்.


    காசாக கொடுக்கக்கூடாது. அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இவை தவிர, அட்சய திருதியை அன்றைக்கு நிதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி திதி கொடுக்க வேண்டும்.

    அப்படி திதி கொடுக்கும் போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் கொடுத்து தானே திதி கொடுக்கிறோம். அதுவும் ஒரு வகையான தானம் தான். எல்லாவற்றையும் தாண்டி மனதார, வாயார, வயிறார யாராவது வாழ்த்தினால் தான் அட்சய திருதியை அன்று நமக்கு நல்லது நடக்கும். அதற்கு தானம் செய்யுங்கள்.

    • அட்சய திரிதியை தானத் திருவிழா என்றும் கூறுவர்.
    • சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதி என்பர்.

    அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர். சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்துக் கூறுவதுடன் விழாவாகவும் கொண்டாடுகிறோம். அட்சய என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள்.


    அற்புதத் திருநாள் அட்சய திரிதியை. அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் என்பர். இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் தங்கம் வாங்க ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லாராலும் வாங்க முடியாதே.

    அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு உபயோகமான பொருட்களை வாங்கி பயனடையலாம். உப்பு (கண்டிப்பாக), அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம். எப்படியும் மாதா மாதம் மளிகை வாங்கியே ஆகவேண்டும். சித்திரை மாத மளிகையை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாம்.

    ஏனெனில் குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில்தான் பெற்றான். குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாளும் இதுவே.


    பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான். மணிமேகலையும் இப்பாத்திரம் பெற்றுள்ளாள். பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிட மிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான்.

    கௌரவர் சபையில் பாஞ்சாலி ஆடையை துச்சாதனன் உருவும்போது, "அட்சய' என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் இதுதான். பரசுராமர் அவதரித்த நாளும் இதுதான்.

    மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள். கேரள சொர்ணத்து மனையில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே.

    இதனை தானத் திருவிழா என்றும் கூறுவர். அட்சய திரிதியையில் செய்யும் எல்லா வகை தான- தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும்.

    கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும். ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும் விளங்குகிறாள். ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.

    ×