என் மலர்
வழிபாடு

அட்சய திருதியையின் சிறப்புகள்
- அட்சய திருதியை நாளில் ஆதிசங்கரருக்கு ஏழை பெண் வறுமையிலும் நெல்லிக்கனியை தானம் தந்தார்.
- கிருஷ்ணன் தனது நண்பர் குசேலர் அன்புடன் கொடுத்த அவலை அட்சயம் என்று கூறி மூன்று பிடி உண்டு கோடி கோடியாக செல்வங்களை அள்ளிக் கொடுத்து குசேலனை குபேரனாக்கினார்.
அட்சய திருதியை நாளில் நடந்த வரலாற்று சம்பவங்கள்
* படைத்தல் தொழிலை நடத்தி வரும் பிரம்மா அட்சய திருதியை நாளில் உலகத்தை படைத்தார். அதனால் தான் உலக மக்களுக்கு தேவையான வளங்கள் உற்பத்தியாகிக் கொண்டு இருக்கிறது. மக்கள்தொகை உபரியாகிக் கொண்டு இருக்கிறது.
*அட்சய திருதியை நாளில் ஆதிசங்கரருக்கு ஏழை பெண் வறுமையிலும் நெல்லிக்கனியை தானம் தந்தார். மனம் குளிர்ந்த ஆதிசங்கரர் ஏழைப் பெண்ணின் வறுமை நீங்கும் எனக்கூறி, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமகாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஏழை பெண்ணின் வறுமையை போக்க தங்க நெல்லிக் கனிகளை மழையாக பொழியச் செய்தார்.
* இதே நாளில் கிருஷ்ணன் வறுமையில் வாடிய தனது நண்பர் குசேலர் அன்புடன் கொடுத்த அவலை அட்சயம் என்று கூறி மூன்று பிடி உண்டு கோடி கோடியாக செல்வங்களை அள்ளிக் கொடுத்து குசேலனை குபேரனாக்கினார்.
* மகா விஷ்ணுவின் அதிபதி கிழமையான புதன்கிழமையும் கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியும் இணைந்த நாளில் அட்சய திருதியை வருவதால் அன்றைய தினம் மகாலட்சுமி, நாராயணர் படம் வைத்து கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம் பாடி, குசேலர் கதை படித்து அவல் பாயாசம் வைத்து வழிபட்டால் பல தலைமுறை வறுமை, கடன், தீராத சொத்து பிரச்சினை, திருமணத் தடை தீரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
* திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்கு கடன் வழங்கிய குபேரன் அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியை வழிபட்டு சங்கநிதி, பதும நிதியை பெற்றதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் லட்சுமி குபேர பூஜை செய்தால் குறையாத செல்வம் உள்ள செல் வந்தர்களாக, லவுகீக வாழ்க்கைக்கு தேவையான அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்று பூரண நலத்துடன் வாழலாம்.






