என் மலர்tooltip icon

    வழிபாடு

    அட்சய திருதியை - செய்ய வேண்டிய தான தர்மங்கள்
    X

    அட்சய திருதியை - செய்ய வேண்டிய தான தர்மங்கள்

    • தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வியில் மேன்மை கிட்டும்.
    • தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும்.

    நமது நாட்டில் பெரும்பான்மையான பண்டிகைகள் பஞ்சாங்கத்தின் முக்கிய அம்சங்களான திதி மற்றும் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு அனுசரிக்கப்படுகின்றன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பிடுவது திதியாகும். பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் வளர்தல் என்று பொருள்.

    அட்சய திருதியை நாளான இன்று செய்ய வேண்டிய தான தர்மங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    * கோடை வெயில் தாக்கம் தீர குடை, விசிறி, காலணி, பாய், போர்வை வழங்கினால் இன்ப வாழ்வு உண்டாகும்.

    * ஆடை தானம் செய்ய மன நிம்மதி கிட்டும்.

    * தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வியில் மேன்மை கிட்டும்.

    * தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும்.

    * தீராத நோயால் அவதிப்படுபவர்கள், உடல் நிலை மோசமானவர்களுக்கு மருந்து வாங்கித் தருவதால், உடல் ஆரோக்கியமாகும்.

    * பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து பசுவிற்கு உணவளித்தால் சகலபாவமும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.

    * பெண்கள் புடவை, ஜாக்கெட் மற்றும் மங்களப் பொருட்களை தானமாக வழங்க சுமங்கலித்தன்மை கூடும்.

    * படிக்கும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

    Next Story
    ×