search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold price"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு வரவில்லை என புகார் தெரிவித்தனர்.
    • மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் அத்திட்டத்தின்படி உரிமை தொகை வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சில பெண்கள், தங்கம் விலை தற்போது அதிக அளவு உயர்ந்துள்ளதே? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

    தங்கம் விலையை உயர்த்தியது ஒன்றிய பா.ஜ.க. அரசுதான். தங்கம் விலைக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லையம்மா என அவரது பாணியில் நகைச்சுவையாக பதில் அளித்தார்.

    தொடர்ந்து சில பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு வரவில்லை என புகார் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த 70 சதவீதம் பேருக்கு மாதம் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் அத்திட்டத்தின்படி உரிமை தொகை வழங்கப்படும் என்றார்.

    • பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
    • நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    வாக்காளர்களுக்கு பணம்-நகை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் உரிய ஆவணங்கள் இருந்தால் விடுவித்து விடுவதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    பறக்கும் படை வாகன சோதனையில் இதுவரை ரூ.80 கோடி அளவுக்கு நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பிடிபட்டால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அந்த பணத்தை அங்கு ஒப்படைத்து விடுகின்றனர்.

    இதனால் பணம் நகை பொருட்களை வியாபாரிகள் ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

    இப்போது தேர்தல் நெருங்க நெருங்க சோதனைகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த 2 பேரிடம் இருந்து ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு மாட்டுச் சந்தைக்கு மாடு வாங்கு வதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறியும் விடவில்லை. பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர்.

    அடுத்தடுத்து சோதனை நடைபெறும் நிலையில் வியாபாரிகளும், நகை கடைக்காரர்களும் பணம் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதுபற்றி தேர்தல் கமிஷனில் முறையிட்டும் எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என வியாபாரிகள் ஆதங்கப்படுகின்றனர். கொள்முதல் செய்து நகை உள்ளிட்ட பொருட்களை கடைக்கு கொண்டு வர முடியாததால் வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதாகவும் வியாாரிகள் கூறி வருகின்றனர்.

    பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    இதுபற்றி மெட்ராஸ் தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கத் தவைர் ஜெயந்தி லால் சலானியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் போலீசார் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சோதிப்பதால் பொதுமக்கள் நகை வாங்க வருவதற்கு பயந்து கடைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவதற்கு சிறிய நகரங்களில் இருந்து பெரிய நகரங்களுக்கு பணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.

    இந்த மாதம் தொடர்ந்து நகை விலை உயர்ந்து கொண்டு வருவதால் எப்படியாவது கையில் உள்ள பணத்தை கொண்டு நகை வாங்கி விடலாம் என ஒவ்வொரு குடும்பத்தினரும் நினைக்கின்றனர். ஆனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் நகை கடைக்கு வருவதை தவிர்க்கின்றனர்.


    இப்போது உள்ள விலைவாசியில் ஒரு பவுன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் சேர்த்து ரூ.55 ஆயிரம் ஆகிவிடும். எனவே தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள ரூ.50 ஆயிரம் என்ற அளவை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம்.

    மே 10-ந்தேதி அட்சய திருதியை நாள் நெருங்கி வருவதால் நகைக் கடைக்காரர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் தேர்தல் கமிஷன் கெடுபிடியால் நகை பட்டறையில் இருந்து நகைகளை கடைகளுக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    அட்சய திருதியை ஆர்டர், திருமண நகை ஆர்டர் உள்ள நிலையில் நிறைய நகைகளை கொண்டு செல்லும் போது பறக்கும் படையினர் பிடித்து விட்டால் உடனே அதை வாங்க முடியாது.

    2 மாதம் கழித்துதான் பெற முடியும். தங்கம் விலை தினமும் ஏறி வரும் நலையில் 2 மாதம் போலீசாரிடம் நகை இருந்தால் விலை ஏற்றத்தால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடும்.

    எனவே நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து நகைக் கடைகளில் கூட்டம் குறைந்துவிட்டது. வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதால் ஒவ்வொரு கடைக்காரர்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    அட்சய திருதியை தினத்தன்று 1000 கிலோ அளவுக்கு நகை வியாபாரம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்த அளவு வியாபாரம் இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.30-க்கும் பார் வெள்ளி ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்னத்தின் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனையானது.

    இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,115-க்கும் சவரனுக்கு 80 குறைந்து ஒரு சவரன் ரூ.48,920-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.30-க்கும் பார் வெள்ளி ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
    • 11 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் உயர்த்தி 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

    புதுடெல்லி:

    தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 11சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

    கடந்த 2 மாதமாக தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு வரியை உயர்த்தியுள்ளது. இறக்குமதி வரியை 4 சதவீதம் அளவுக்கு உயர்த்தி மத்திய நிதியமைச்சகம் அரசாணை வெளியிட்டது.

    தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியானது தற்போதுள்ள 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்து உள்ளது.

    தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான வரி ஏய்ப்புகளைத் தடுப்பதே இதன் நோக்கமாகும். மேலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்க தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதேபோன்று, விலைமதிப்பற்ற உலோகங்கள் அடங்கிய வினையூக்கிகள் மீதும் இறக்குமதி வரியானது 14.35 சதவீதம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் என்ற அளவிலும், 4.35 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு கூடுதல் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள் ஜனவரி 22-ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
    • தங்கம் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.

    சென்னை:

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே நடந்து வரும் போராலும், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்து வருவதாலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் பவுன் ரூ.45 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது.

    தங்கத்தின் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது.

    இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.45,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.5,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5510-க்கும், பவுன் விலை ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ ரூ.77,500 ஆகவும் இருந்தது.

    சென்னை:

    சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5530 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.44,240 ஆகவும் இருந்தது. இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5510-க்கும், பவுன் விலை ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ ரூ.77,500 ஆகவும் இருந்தது. இன்று கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.77 ஆகவும், கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.77 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • கடந்த 1 மாதமாக தங்கம் விலை ரூ.44 ஆயிரம், ரூ.45 ஆயிரம் என்ற விலையிலேயே உயர்வதும், குறைவதுமாக இருந்தது.
    • 1 கிலோ பார் வெள்ளி ரூ.82,800-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே விலை அதிகரித்து வருகிறது.

    சில மாதங்களுக்கு முன்பு பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு விற்ற தங்கம் படிப்படியாக உயர்ந்து கடந்த மாதம் ரூ.45 ஆயிரத்தை தாண்டியது.

    கடந்த 1 மாதமாக தங்கம் விலை ரூ.44 ஆயிரம், ரூ.45 ஆயிரம் என்ற விலையிலேயே உயர்வதும், குறைவதுமாக இருந்தது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

    இன்று 1 பவுன் தங்கம் ரூ.46 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.45,648 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.46 ஆயிரமாக உயர்ந்துள்ளது. முதல் முறையாக தங்கம் விலை பவுன் ரூ.46 ஆயிரத்தை தொட்டுள்ளது.

    நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,706-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.44 அதிகரித்து ரூ.5,750-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.8180-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.82.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.82,800-க்கு விற்பனையாகிறது.

    • தங்கம் இறக்குமதியில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.
    • தங்கம் இறக்குமதி அதிகரிப்பு நடப்பு கணக்கு பற்றாக்குறையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    புதுடெல்லி:

    தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10.75 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்க தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் அதிகாரித்து வரும் தங்க இறக்குமதியை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    முன்பு தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதமாக இருந்தது. தற்போது அந்த சுங்க வரி 12.5 சதவீதமாக இருக்கும். தங்கம் இறக்குமதியில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் 107 டன் தங்கம்இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் ஜூன் மாதத்திலும் குறிப்பிடத்தக்க இறக்குமதி செய்யப்பட்டது.

    தங்கம் இறக்குமதி அதிகரிப்பு நடப்பு கணக்கு பற்றாக்குறையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,120-க்கு விற்பனை
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிலோ ரூ.66 ஆயிரமாகவும் ஒரு கிராம் வெள்ளி ரூ.66-ஆகவும் உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 120-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 765 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிலோ ரூ.66 ஆயிரமாகவும் ஒரு கிராம் வெள்ளி ரூ.66-ஆகவும் உள்ளது.

    தங்கம் விலை கடந்த 1½ மாதத்தில் ரூ.1,400 உயர்ந்து உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். #Gold #GoldPrice
    சென்னை:

    தங்கத்தின் மீதான விலை ஏற்றம் சமீபகாலமாக வாடிக்கையாளர் இதயத்துடிப்பை எகிற செய்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த மாதம் புதிய உச்சத்தை தொட்டது.

    கடந்த மாதம் 28-ந்தேதி, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 127-க்கும், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 16-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதன்முறையாக தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை கடந்தது. அதனைத்தொடர்ந்து ஏறுமுகத்தில் வீறுநடை போட்டு வந்த தங்கத்தின் விலை மக்களை பீதியடைய செய்து வருகிறது. அந்த நிலை நேற்றும் தொடர்ந்தது.

    சென்னையில் நேற்றுமுன்தினம் கிராம் ரூ.3 ஆயிரத்து 190-க்கும், பவுன் ரூ.25 ஆயிரத்து 520-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்றும் உயர்ந்தது. அதன்படி முந்தைய தினத்தை விட கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 196-க்கும், பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 568-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி கிராம் ரூ.3 ஆயிரத்து 21-க்கும், பவுன் ரூ.24 ஆயிரத்து 168-க்கும் தங்கம் விற்பனை ஆனது. அந்தவகையில் கடந்த 1½ மாதத்தில் மட்டும் தங்கம் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து, ரூ.1,400 உயர்ந்து உள்ளது.

    தங்கத்தின் ‘கிடுகிடு’ விலை உயர்வு குறித்து சென்னை தங்க-வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறியதாவது:-

    அமெரிக்காவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அமெரிக்காவின் எல்லை பரப்புகளில் வேலி அமைப்பது எனும் அரசின் உத்தரவுக்கு அங்குள்ள மக்களும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தொடர் போராட்டம் காரணமாக உற்பத்தி பெருமளவு பாதித்து பொருளாதாரம் வீழ்ச்சி பாதைக்கு சென்றுவருகிறது.

    அதேபோல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த 2 காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து உயரவே வாய்ப்பு உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். நகைக்கடைகளிலும் வியாபாரம் குறைந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் நேற்று உயர்ந்து காணப்பட்டது.

    சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.43.40-க்கும், கிலோ ரூ.43 ஆயிரத்து 400-க்கும் வெள்ளி விற்பனை ஆனது. இந்தநிலையில் முந்தைய தினத்தை காட்டிலும் கிராமுக்கு 20 காசு அதிகரித்து ரூ.43.60-க்கும், கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43 ஆயிரத்து 600-க்கும் வெள்ளி நேற்று விற்பனை ஆனது.  #Gold #GoldPrice
    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. #Goldprice
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 384 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.3,173-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.43.30க்கு விற்கிறது. #Goldprice

    தங்கம் விலை ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை கடந்து, புதிய வரலாறு படைத்து உள்ளது. ஓராண்டில் ரூ.1,640 அதிகரிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். #Gold #GoldPrice
    சென்னை :

    திருவிழாக்கள், பண்டிகை காலங்கள், திருமணம் போன்ற விசே‌ஷ நிகழ்ச்சிகளின் போது தங்க நகைகள் அணிவதை மக்கள் பெருமையாகவும், ஆடம்பரமாகவும் கருதுகிறார்கள். எனவே தங்கம் விலை அதிகரித்தாலும், அதன் மவுசு மட்டும் குறைவதே இல்லை.

    இந்திய மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆண்டு தோறும் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுவதால், அதன் விலை ஏறுமுகத்தில் செல்கிறது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும் நேரங்களிலும் தங்கம் விலையில் ‘கிடுகிடு’ உயர்வு காணப்படுகிறது.

    இந்த நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக காணப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 121-க்கும், பவுன் ரூ.24 ஆயிரத்து 968-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு மேலும் ரூ.6 அதிகரித்து ரூ.3 ஆயிரத்து 127 ஆனது. இதன்மூலம் பவுன் ரூ.25 ஆயிரத்து 16 ஆக உயர்ந்து புதிய சரித்திரம் படைத்தது. தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை கடப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.

    சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 922-க்கும், பவுன் ரூ.23 ஆயிரத்து 376-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஓராண்டில் பவுனுக்கு ரூ.1,640 விலை அதிகரித்துள்ளது. கடந்த 1930-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கம் 14 ரூபாய் 50 காசுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானி, நிருபரிடம் கூறியதாவது:-

    அமெரிக்காவில் பொருளாதாரம், வேலைவாய்ப்பு குறியீடு சரிந்துள்ளது. அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பை மீறி அந்நாட்டு அதிபர் டிரம்ப், மெக்சிகோ எல்லையில் வேலி அமைப்பதால் பொருளாதாரத்தில் சரிவுநிலை ஏற்பட்டுள்ளது.



    எனவே உலக சந்தையில் பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள்.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ.25 ஆயிரத்தை கடந்துள்ளது.

    தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என்பதால், மக்கள் மத்தியில் முன்கூட்டியே தங்கத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் நகை விற்பனையில் பாதிப்பு ஏற்படவில்லை.

    விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தால் மட்டுமே, தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தங்கத்தை போன்று வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. சென்னையில் கடந்த 24-ந் தேதி ஒரு கிராம் வெள்ளி 42 ரூபாய் 10 காசுக்கும், கிலோ ரூ.42 ஆயிரத்து 100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ஒரு கிராம் வெள்ளி 43 ரூபாய் 20 காசுக்கும், கிலோ ரூ.43 ஆயிரத்து 200 ஆகவும் விலை உயர்ந்து விற்பனை ஆனது. #Gold #GoldPriceHike
    ×