search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "name"

    • முன்னதாக, கடந்த ஜூன் மாதம் முதல் திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன.
    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், 23.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

    திருப்பூர்: 

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், 23.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் 27 -ந் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படுகிறது.

    முன்னதாக, கடந்த ஜூன் மாதம் முதல் திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக 7 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு மாவட்ட மொத்த ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 2,520 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்ட்ராங் ரூமில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, வரும் 27-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெறுகின்றன.

    அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், நவம்பர் மாதம் 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் சுருக்கமுறை திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    சுருக்கமுறை திருத்தத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தங்கள் நடைபெறுகிறது. இதற்காக, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர், தாசில்தார்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில், சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும்.

    Voters.eci.gov.in என்கிற இணையதளம், VSP மொபைல் செயலி வாயிலாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்து வரும் 2024 ஜனவரி 5ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான பட்டியல் என்பதால், இந்தாண்டுக்கான வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி முக்கியத்துவம் பெறுகிறது.

    வீடுவீடாக செல்லும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்காக, இறந்தோர் விவரங்கள், பெயர் சேர்ப்பதற்காக புதியவர் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    வருகிற 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் ஒட்டப்படும். வாக்காளர்கள் தவறாமல் வரைவு பட்டியலை பார்வையிடவேண்டும். குடும்ப உறுப்பினர்களின் பெயர், புகைப்பட விவரங்கள், முகவரி, தொகுதி சரியாக உள்ளனவா என சரிபார்க்க வேண்டும். மாறுதல்கள் இருப்பின் சுருக்கமுறை திருத்த காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை சேர்ப்பதில், தேர்தல் கமிஷன் அதிக கவனம் செலுத்திவருகிறது. இதற்காக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 1-ந் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளைஞர்கள், தவறாமல், தங்களை வாக்காளராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

    • மகளிர் உரிமை தொகை பெற சேலத்தில் சிறப்பு முகாம்களில் பயோ மெட்ரிக் மூலம் பெயர் பதிவு நடந்தது.
    • ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்தனர்.

    சேலம்:

    சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்ப டும் என வாக்குறுதி அமைக் கப்பட்டது.

    இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்ட நிலையில் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்

    தொடங்கப்படும்என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்திருந்தார்.

    விண்ணப்பம்

    இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப் பம் மற்றும் டோக்கன் விநியோகம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் விண் ணப்ப பதிவு முகாம் தொடங்கி யது. இதையொட்டி தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விண்ணப்ப பதிவு முகாமை தொடங்கி வைத்தார்.

    ஆயிரம் முகாம்

    இதை தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் உள்ள 11 லட்சம் கார்டுகளில் 500 கார்டுகளுக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் அரசு பள்ளிகள், திருமண மண்டபங்களில் 1000-க்கும் மேற்பட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் இன்று தொடங்கியது. இதையொட்டி, டோக்கனில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தின் படி பொதுமக்கள் முகாம்களில் குவிந்தனர்.

    அவர்களிடம் முதலில் ஆதார் எண் பதியப்பட்டது. பின்னர் விரல் ரேகை பயோ மெட்ரிக் கருவி மூலம் சரி பார்க்கப்பட்டது. விரல் ரேகை பதிவு சரியாக அமை யாத வர்களுக்கு ஆதார் அட்டை யுடன் இணைக்கப் பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. பெறப்பட்டு பதிவு ெசய்யப்பட்டது. பின்னர் விண்ணப்பங்களுக்கு ரசீதுகள் வழங்கப்பட்டது.

    இந்த பணியில் வட்ட வழங்கல் துறை மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட் டுள்ளனர். இந்த முகாம் நடைபெறும் சில இடங்க ளில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் மாவட்ட வழங்கல் துறை அதிகாரி களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தகுதி உள்ள அனை வருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தென்காசி மாவட்டத்தில் ரெயில் நிலையங்களில் பெயர் பலகைகளில் எழுத்துப் பிழைகள் உள்ளது என ரெயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் எழுதப்பட்டிருந்ததில் ஆங்கில எழுத்தில் பிழைகள் காணப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் ெரயில் நிலையங்களில் பெயர் பலகைகளில் எழுத்துப் பிழைகள் உள்ளது என ெரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் எழுதப்பட்டிருந்ததில் ஆங்கில எழுத்தில் பிழைகள் காணப்பட்டது.

    இது குறித்து பயணிகள் பாவூர்சத்திரம் பெயர் பலகையில் இருக்கும் பிழையை திருத்தி எழுத வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை ஏற்று தென்னக ெரயில்வே சார்பில் ஆங்கிலத்தில் இருந்த எழுத்துப் பிழை நீக்கப்பட்டது. இதற்கு பாவூர்சத்திரம் பகுதி ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • காட்டு மாரியம்மன் கோவில் வரை உள்ள தார்ச்சாலைக்கு தலைவர் தண்டபாணி சாலை என பெயர் சூட்டப்பட்டது.
    • ஊராட்சி பகுதி முழுவதும் அரசன், வேம்பு, புங்கன், வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் சின்னேரிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான எம்.தண்டபாணி நினைவாக நடுவச்சேரி ஊராட்சி வரதராஜ் நகர் முதல் வளையபாளையம் வழியாக ராயபாளையம் காட்டு மாரியம்மன் கோவில் வரை உள்ள தார்ச்சாலைக்கு தலைவர் தண்டபாணி சாலை என பெயர் சூட்டப்பட்டது.

    மேலும் அந்த சாலையில் கல்வெட்டு நிறுவப்பட்டது. பெயர் சூட்டுவிழா நிகழ்ச்சியில் நடுவச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கே.சி.வரதராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் முத்துசாமி, ஊராட்சி செயலாளர்கள் ரங்கசாமி, மணிகண்டன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சின்னேரிபாளையம் ஊராட்சி பகுதி முழுவதும் அரசன், வேம்பு, புங்கன், வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. 

    • 100க்கும் மேற்பட்ட கார்டுகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
    • ஏராளமான ரேசன் அட்டைதாரர்கள் பயன் பெற்றனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று போளூர் வட்ட வழங்கல் அலுவலர் தேவி மேற்பார்வையில், ஸ்மார்ட் ரேசன் கார்டில் திருத்தம் பணி நடைபெற்றது.

    இதில் வட்ட வழங்கல் அலுவலகத்திற்குட்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் கார்டுதாரர்களின் பெயர், விலாசங்கள் திருத்தம் மற்றும் போட்டோ மாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் மூலம் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறும் முகாமினை கலெக்டர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கலெக்டர் விஜயலட்சுமி கூறியதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் வரைவு பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்தம்-2019 பணிகள் கடந்த 1-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. அது சமயம் 1.1.2019 அன்று வரை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்று (அதாவது நேற்று) அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. மேலும் வருகிற 22-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 6, 13-ந்தேதி ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம், பிரிவை அந்தந்த கிராம சபைகளில் படித்து பெயர்களைச் சரிபார்க்கும் பணியும் மற்றும் வருகிற 23-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 7, 14-ந்தேதி ஆகிய நாட்களில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் சிறப்பு முகாமும் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி வெளியிடப்படும். எனவே, 18 வயது நிரம்பிய தகுதியான நபர்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தாசில்தார் முத்துலட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    ×