படவேடு கிராமத்தில் ஸ்மார்ட் ரேசன் கார்டு திருத்தும் பணி

100க்கும் மேற்பட்ட கார்டுகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.ஏராளமான ரேசன் அட்டைதாரர்கள் பயன் பெற்றனர்.
படவேட்டில் ஸ்மார்ட் ரேசன் கார்டு திருத்தம் செய்யும் பணி நடந்தது.
படவேட்டில் ஸ்மார்ட் ரேசன் கார்டு திருத்தம் செய்யும் பணி நடந்தது.
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று போளூர் வட்ட வழங்கல் அலுவலர் தேவி மேற்பார்வையில், ஸ்மார்ட் ரேசன் கார்டில் திருத்தம் பணி நடைபெற்றது.

இதில் வட்ட வழங்கல் அலுவலகத்திற்குட்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் கார்டுதாரர்களின் பெயர், விலாசங்கள் திருத்தம் மற்றும் போட்டோ மாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com