search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Merchants Association"

  • வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்துவதாக இருப்பது மிகவும் வேதனைக் குரியதாகும்.
  • சொத்து பரிமாற்றத்திலும், மிகப்பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும்.

  சென்னை:

  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  தமிழகத்தில் குடியிருப்பு மனைகளின் அரசு மதிப்பீடு அண்மையில் அனைத்து பகுதிகளிலும், உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வணிக பயன்பாட்டுக்கான மனைகளின் அரசு வழிகாட்டு மதிப்பீடு, சாதாரண குடியிருப்பு மனை மதிப்பீட்டிலிருந்து 3 மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட இருப்பதாக தெரிய வருகின்றது.

  வணிகர்களும், வணிகமும் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. ஆன்லைன் வர்த்தகம், தற்காலிக விழாக்கால கடைகள், போக்குவரத்து கட்டண உயர்வு, மின் கட்டணம், சொத்துவரி உயர்வு, என பல்வேறு காரணங்களால் தொழில் நசிந்து வரும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.

  இந்த கால கட்டத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்துவதாக இருப்பது மிகவும் வேதனைக் குரியதாகும். இதனால் புதிதாக தொழில் தொடங்குவோர், புதிய வணிக நிறுவனர்கள் தொழிலுக்கு வருவதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சொத்து பரிமாற்றத்திலும், மிகப்பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும். இதனால், வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும். தமிழக முதலமைச்சர் இவற்றை கவனத்தில் கொண்டு, வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டுமென வணிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • முப்பெரும் விழாவில் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.
  • சிறப்பு விருந்தினர்களுக்கு தாய்சீனிஸ் தியேட்டர் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  கல்லிடைக்குறிச்சி:

  விக்கிரமசிங்கபுரம் வணிகர் சங்க கொடியேற்று விழா, புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் கல்வி பரிசளிப்பு என முப்பெரும் விழா அசிசி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

  இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா , நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன், மாநில கூடுதல் செயலாளர் காளிதாஸ், மாவட்ட தலைவர் செல்வராஜ், கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜன், வள்ளிமயில் வேம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

  விழாவிற்கு வி.கே.புரம் வணிகர்கள் சங்க தலைவர் பீட்டர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

  சேக் அலி, ஜெயகுமார், முருகேசன், பிரபாகரன், தங்கதுரை, ஹரி, மனோகரன், அபுல் கலாம் ஆசாத், சிற்றரசன், மவுதுகனி, அய்யலுசாமி, டேவிட் பெரியசாமி, இசக்கி, அதியமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  விழா குழு தலைவர் குட்டி கணேசன் வரவேற்று பேசினார். துணைத் தலைவர் பொன்ராஜ் தொகுத்து வழங்கினார். வர்த்தக சங்க தீர்மானங்களை ஜவகர், காசிராஜன், செல்லத்துரை ஆகியோர் வாசித்தனர்.

  சிறப்பு விருந்தினராக அம்பை ஒன்றிய தலைவர் பரணி சேகர், விக்கிரம சிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், அம்பை ஒன்றிய துணைத் தலைவர் ஞானக்கனி, வி.கே.புரம் நகராட்சி துணைத் தலைவர் திலகா சிற்றரசன், சிவந்திபுரம் ஊராட்சி தலைவர் ஜெகன், அடையகருங்குளம் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி மதன கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

  விழாவில் வர்த்தக சங்க தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசுகையில், அகஸ்தியர் அருவிக்கு செல்ல ரூ.30 வசூலிப்பதை தடுக்க அரசிடம் வலியுறுத்துவோம். நெல்லையில் இருந்து பாபநாசம் வர சுமார் ஒரு மணி நேரம் ஆகும் என்பார்கள். ஆனால் தற்போது 1½ மணி நேர ஆகிறது. எனவே சாலைப்பணிகளை விரைவாக முடிக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசுவேன் என்றார்.

  விழாவில் அகஸ்தியர் அருவி கட்டணம் ரத்து, நெல்லையில் இருந்து புறப்படும் அந்தியோதியா ரெயிலை அம்பை வழியாக நெல்லை - செங்கோட்டை செல்லும் ரெயிலுடன் இணைக்கும் விதமாக 5.20 அந்தியோதியா ரெயிலை நெல்லையில் இருந்து இயக்க கோருதல் உள்பட சுமார் 11 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.

  முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு தாய்சீனிஸ் தியேட்டர் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நகர வணிகர்கள் அனைவரும் விழா நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

  • செல்வராஜ் தலைமையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
  • 23-ந் தேதி இரவு முழுவதும் கடைகள் திறக்க அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.

  நெல்லை:

  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் (மேற்கு) சரவணகுமாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

  அந்த மனுவில், 'தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாநகர பகுதிகளில் வருகிற 20, 21, 22-ந் தேதிகளில் இரவு 2 மணி வரையிலும், 23-ந் தேதி அன்று இரவு முழுவதும் கடைகள் திறந்து வணிகம் செய்ய வழக்கம் போல் இந்த ஆண்டும் அனுமதி வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது.

  இதேபோல் மேலும் சில போலீஸ் அதிகாரிகளிடமும் மனு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்ட செயலாளர் நயன்சிங், பொருளாளர் அசோகன், மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், துணைத்தலைவர் ஸ்டீபன் பிரேம்குமார், தொகுதி செயலாளர் கருப்பசாமி, செய்தி தொடர்பாளர் பகவதிராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

  ×