என் மலர்tooltip icon

    இந்தியா

    டிரம்ப் நிறுத்தவில்லை, தற்போது 60வது முறை: பிரதமரை மோடியை சாடிய ஜெய்ராம் ரமேஷ்
    X

    டிரம்ப் நிறுத்தவில்லை, தற்போது 60வது முறை: பிரதமரை மோடியை சாடிய ஜெய்ராம் ரமேஷ்

    • இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
    • நேற்று கூட சவுதி அரேபியா பட்டத்து இளவரசரை சந்திக்கும்போது இதை கருத்தை தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவியது. இருநாட்டு ராணுவ தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போர் நிறுத்தப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நான்தான் தலையிட்டு நிறுத்தினேன் எனத் தெரிவித்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. ஆனால், டிரம்ப் தலையிடவில்லை என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

    ஆனால், உலகத் தலைவர்களை சந்திக்கும்போதெல்லாம், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினேன் எனத் தெரிவித்து வருகிறது.

    அமெரிக்க நேரப்படி நேற்று சவுதி பட்டத்து இளவரசரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் "இந்த கூற்று நிறுத்தப்பட்டுள்ள என நினைத்தால் உலகிற்கு மீண்டும் நினைவூட்டுகிறார். இதற்கு முன்னதாக சவுதி அரேபியா, கத்தார், எகிப்பு, பிரிடடன், நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் பல்வேறு இடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதை தெரிவித்தார். தற்போது 60-வது முறையாக கூறியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    சவுதி பட்டத்து இளவரசர் உடனான சந்திப்பின்போது டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

    நான் உண்மையில் 8 போர்களை நிறுத்தி விட்டேன். மற்றொரு போரை நிறுத்த புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. புதினை பார்த்து எனக்கு சற்று ஆச்சர்யமாக உள்ளது. நான் நினைத்ததை விட சற்று நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால், நாங்கள் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினோம். பட்டியலை நான் வெளியிட முடியும். அந்த பட்டியலில் என்னைவிட உங்களுக்கு நன்றாக தெரியும்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×