என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "g20 summit"

    • பேரிடர் மீள்தன்மைக்கான நமது அணுகுமுறை வளர்ச்சி மையமாக இருக்க வேண்டும்.
    • இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் மிகப்பெரிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தையும் நடத்துகிறது.

    ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்கஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    மாநாட்டில் யாரையும் பின்தங்க வைக்காத வகையில் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடந்த முதல் அமர்வில் பிரதமர் மோடி பேசினார்.

    பின்னர் நடந்த 2-வது அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இயற்கை பேரழிவுகள் மனிதகுலத்திற்கு தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளன. இந்த ஆண்டும், இயற்கை பேரழிவுகள் உலகம் முழுவதும் பெரும் மக்களை பாதித்துள்ளன. இது இயற்கை பேரழிவுகளை நிவர்த்தி செய்ய உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை தெளிவாக காட்டுகிறது.

    பேரிடர் மீள்தன்மைக்கான நமது அணுகுமுறை வளர்ச்சி மையமாக இருக்க வேண்டும். எனவே பேரிடர் மீள்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டணியை நிறுவ வேண்டும். இதனுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் ஜி-20 நாடுகள் நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன்களைத் திரட்டி, மீள் தன்மை கொண்ட எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.

    விண்வெளி தொழில்நுட்பம் அனைத்து மனிதகுலத்திற்கும் பயனளிக்க வேண்டும் என்று இந்தியாவும் நம்புகிறது. எனவே இந்தியா ஜி-20 திறந்த செயற்கைக்கோள் தரவு கூட்டாண்மையை முன்மொழிகிறது.

    காலநிலை மாற்றம் மற்றும் பிற சவால்கள் காரணமாக, நமது விவசாயத்துறை, உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மிகவும் கடுமையாகி வருகிறது. எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நாடுகளில் விவசாயிகள் உரங்கள், தொழில்நுட்பம், கடன், காப்பீடு மற்றும் சந்தை அணுகல் ஆகியவற்றில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

    இந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா தனது சொந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு திட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.

    இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் மிகப்பெரிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தையும் நடத்துகிறது.

    வலுவான உலகளாவிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க ஜி20 நாடுகள் ஊட்டச்சத்து, பொது சுகாதாரம், நிலையான விவசாயம் மற்றும் பேரிடர் தயார்நிலையை ஒருங்கிணைக்கும் விரிவான உத்திகளை ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்தது.
    • அமெரிக்க அதிபர் டிரம்ப்​, ரஷிய அதிபர் புதின்​ ஆகியோர் இதில் பங்​கேற்​க​வில்​லை.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

    இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

    பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, மாநாட்டின்போது பிரதமர் மோடியை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர். இரு நாடுகள் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதியேற்றனர்.

    ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி தனித்தனியாக பேசினார்.

    பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்போன்ஸ், கனடா பிரதமர் மார்க் கார்னி, தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்ஜி ஆகியோர் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை.

    • ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
    • ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.

    ஆப்பிரிக்க கண்டத்தில் முதல்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் பிரதானம் பெறுகின்றன.

    ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் G20 மாநாட்டில் போதைப்பொருள்-பயங்கரவாத தொடர்பை தடுத்தல், சுகாதாரப் பாதுகாப்பு, ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.

    மேலும், அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் ஒற்றுமையாக துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி தெரிவித்தார்.

    • ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
    • பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஆப்பிரிக்க கண்டத்தில் முதல்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் பிரதானம் பெறுகின்றன.

    ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

    முன்னதாக, தென் ஆப்ரிக்காவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் கிளம்பினார். மாலையில் ஜோகன்னஸ்பர்க் நகரம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.

    ஜொகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் G20 உச்சி மாநாட்டில் ஜார்ஜியா இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

    • ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது.
    • ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்ரிக்காவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் கிளம்பினார். மாலையில் ஜோகன்னஸ்பர்க் நகரம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.

    அப்போது, டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் சவுதி அரேபியாவில் நடந்த பஸ் விபத்தில் பல இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்ததற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இரங்கல் தெரிவித்தார்.

    ஜி20 உச்சி மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

    • ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார்.
    • மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.

    ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.

    இந்நிலையில், தென்னாப்பிரிக்காவிற்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் அங்கு பாரம்பரிய முறைப்படி நிகழ்ச்சிக் குழுவினர் வரவேற்பு அளித்தனர். அந்நாட்டில் வெண்டா மொழி பேசும் மக்களின் பாரம்பரியத்தின் படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். குறிப்பாக ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார் என வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.

    மேலும் இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.

    அத்துடன் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    • கடந்த ஏழு மாதங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 61 முறை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்திவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
    • அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த உச்சிமாநாட்டிற்குள் மோடி தனது நல்ல நண்பருடனான இராஜதந்திர அரவணைப்பை மீண்டும் தொடங்குவாரா?

    ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.

    ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் மூன்று அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.

    இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டைப் புறக்கணித்துள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி அதில் தைரியமாக பங்கேற்கிறார் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    இது தொடர்பாக எக்ஸ் இல் பதிவிட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், "அடுத்த ஜி-20 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறும், அந்த நேரத்தில், இந்தியா அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம்.

    ஆனால், கடந்த ஏழு மாதங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 61 முறை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்திவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.

    அடுத்த 12 மாதங்களில் அவர் இன்னும் எத்தனை முறை அதை மீண்டும் மீண்டும் சொல்ல முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

    அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த உச்சிமாநாட்டிற்குள் மோடி தனது நல்ல நண்பருடனான இராஜதந்திர அரவணைப்பை மீண்டும் தொடங்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார். 

    • ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது.
    • ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிக்கும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    வாஷிங்டன்:

    ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    அதிபர் டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் அமெரிக்கா பங்கேற்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    ஜி20 மாநாடு அடுத்து ஆண்டு அமெரிக்காவில் நடக்க உள்ளதால் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காக இந்த மாநாட்டில் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது

    • தென் ஆப்பிரிக்காவில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
    • இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா செல்கிறார்.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 21 முதல் 23ம் தேதி வரை ஜி20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்கிறார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.

    இந்த அமர்வில் காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் உரையாற்ற உள்ளார்.

    உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பல உலக நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.

    இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    • வெள்ளை ஆப்பிரிக்க விவசாயிகள் துன்புறுத்தப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் தென் ஆப்பிரிக்க அரசு அனுமதி அளிக்கிறது.
    • டிரம்ப்பின் குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

    ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 22, 23-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடைபெறுவது முற்றிலும் அவமானகரமானது. அங்கு வெள்ளை நிற விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கப்பட்டு தாக்குதல், கொலை செய்யப்படுகின்றனர்.

    அங்கு சிறுபான்மையினராக உள்ள வெள்ளை ஆப்பிரிக்க விவசாயிகள் துன்புறுத்தப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் தென் ஆப்பிரிக்க அரசு அனுமதி அளிக்கிறது. இதனால் அமெரிக்காவில் இருந்து ஜி 20 உச்சி மாநாட்டில் யாரும் பங்கேற்க மாட்டார்கள்' என்று தெரிவித்தார்.

    முன்னதாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். தற்போது இந்த மாநாட்டை அமெரிக்கா முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளார்.

    டிரம்ப்பின் இந்த குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா திட்டவட்டமாக மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்
    • புதின் வரவில்லை என்ற முடிவு அனைவருக்கும் சிறந்தது என்று இந்தோனேசிய அரசு அதிகாரி கூறி உள்ளார்.`

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் பாலியில் அடுத்த வாரம் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா உக்ரைனை ஆக்கிரமித்தபிறகு முதல் முறையாக, அமெரிக்க அதிபர் பைடனும், ரஷிய அதிபர் புதினும் இந்த உச்சிமாநாட்டில் ஒன்றாக கலந்துகொள்வார்கள் என எதிர்பாக்கப்பட்டது.

    ஆனால், ரஷிய அதிபர் புதின் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என இந்தோனேசிய அரசு அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். உக்ரைன் போர் விஷயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடனான மோதல் போக்கை தவிர்ப்பதற்காக இந்த மாநாட்டில் இருந்து புதின் ஒதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதின் வரவில்லை என்ற முடிவு அனைவருக்கும் சிறந்தது என்று ஜி20 நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் லஹட் பின்சார் பாண்ட்ஜைத்தான் கூறி உள்ளார். 

    • பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியிலிருந்து பாலி நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
    • ஜி20 தலைவர்கள் சிலரையும் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் போர் மற்றும் அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியிலிருந்து பாலி நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார். மேலும் உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம் குறித்து பிரதமர் மோடியும் மற்ற நாடுகளின் தலைவர்களும் விவாதிக்கவிருப்பதாகவும் குவாத்ரா கூறினார். இதுதவிர ஜி20 தலைவர்கள் சிலரையும் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார்.

    இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

    தற்போது ஜி20 அமைப்பின் தலைமைப்பொறுப்பில் இந்தோனேசியா உள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் வருகிறது.

    ×