என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BillGates"

    • மாநிலத்தின் ஸ்வர்ணந்திரா தொலைநோக்கு 2047 குறித்து சந்திரபாபு நாயுடு விளக்கினார்.
    • அமராவதிக்கு அருகிலுள்ள உண்டவல்லி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய வயலைப் பார்வையிட்டார்.

    மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆந்திராவில் சஞ்சீவானி மருத்துவ சேவை உள்ளிட்ட சில முக்கிய சமூகத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக பில்கேட்ஸ் இன்று ஆந்திரா வந்தார்.

    அமராவதியில் உள்ள மாநில தலைமை செயலகத்திற்கு சென்றார். பில்கேட்ஸுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அமைச்சர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பின்னர் பில் கேட்ஸ் குழுவினர் அவர்களை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு, பில்கேட்ஸ் சந்திப்பு நடந்தது.

    கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் திட்டங்களை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    பொது சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் முழுவதும் சீர்திருத்தங்கள் மற்றும் நீண்டகால இலக்குகளை கோடிட்டுக் காட்டும் மாநிலத்தின் ஸ்வர்ணந்திரா தொலைநோக்கு 2047 குறித்து சந்திரபாபு நாயுடு விளக்கினார்.

    மெட்டெக் திட்டங்கள், நோயறிதல் சேவைகள், துல்லியம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விவசாயம் மற்றும் கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சஞ்சீவனி திட்டம் ஆகியவை குறித்து விவாதித்தனர்.

    பின்னர், பில்கேட்ஸ், சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து, அமராவதிக்கு அருகிலுள்ள உண்டவல்லி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய வயலைப் பார்வையிட்டார். டிரோன்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேம்பட்ட விவசாய நடைமுறைகளை அவரது குழு பார்வையிட்டனர்.

    தொழில்நுட்பம் எவ்வாறு உற்பத்தித்திறனை அதிகரிக்கும் மற்றும் மாநிலத்தில் நிலையான விவசாயத்தை ஆதரிக்க முடியும் என செயல்விளக்கம் அளித்தனர்.

    ஆந்திர மாநில அரசின் முயற்சிகளை பில்கேட்ஸ் பாராட்டினார். மேலும் இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

    • மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • அகமதாபாத்தில் அமைக்கப்பட்ட ஒற்றுமை சிலையை பில் கேட்ஸ் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்.

    அகமதாபாத்:

    மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை சிலையை பில் கேட்ஸ் நேற்று பார்வையிட்டு, அஞ்சலி செலுத்தினார்.

    இதுதொடர்பாக பில் கேட்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஈர்க்கக்கூடிய ஒற்றுமை சிலையைப் பார்வையிட அழைத்தமைக்கு நரேந்திர மோடிக்கு நன்றி. இது ஒரு பொறியியல் அதிசயம் மற்றும் சர்தார் பட்டேலுக்கு ஒரு பெரிய அஞ்சலி. இது உள்ளூர் பழங்குடி சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பை உருவாக்குவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள செய்தியில், இதைப் பார்த்ததில் மகிழ்ச்சி! ஒற்றுமை சிலையில் உங்கள் அனுபவத்தை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி. இனி வரும் காலங்களில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் அதைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    ×