search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகின் மிக உயரமான படேல் சிலையில் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மொழி
    X

    உலகின் மிக உயரமான படேல் சிலையில் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மொழி

    உலகின் மிக உயரமாக உருவாக்கப்பட்ட வல்லபாய் படேலின் சிலையில், தமிழ் மொழிப்பெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #VallabhbhaiPatel #Tamil #StatueofUnity
    அகமதாபாத்:

    இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமான இந்த சிலை உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த சிலைக்கு ‘ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி’ அதாவது ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில். இந்த சிலைக்கு கீழே பல்வேறு மொழிகளில் ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற சிலையின் பெயர் மொழிப்பெயர்க்கப்பட்டு இருந்தது. அந்த வரிசையில் தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மிகவும் மோசமாக இருப்பதால் சர்ச்சையாகி உள்ளது.



    ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற ஆங்கில வார்த்தையை கூகுளில் மொழிப்பெயர்ப்பு செய்து இருந்தால் கூட ஒற்றுமையின் சிலை என வந்திருக்கும் ஆனால், ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள். இதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.



    இதையடுத்து, தமிழ் மொழிப்பெயர்ப்பின் மீது வண்ணம் பூசி அதை தற்காலிகமாக மறைத்து உள்ளனர். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட உலகின் மிக உயரமான சிலையில் தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மோசமான நிலையில் இருப்பது, தமிழை வஞ்சிக்கும் பார்வையை வெளிப்படுத்துவதாக கருத்துக்களும், கண்டங்களும் கூறப்படுகிறது. #VallabhbhaiPatel #Tamil #StatueofUnity
    Next Story
    ×