என் மலர்
நீங்கள் தேடியது "padma shri"
- தினந்தோறும் அப்பெண்ணை 5வது மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- மீண்டும் ஸ்வாமிஜியை தொடர்பு கொள்ள கூடாது என்று மிரட்டி வாகனத்திலிருந்து தள்ளி விட்டனர்.
இந்த வருடம், நாட்டின் 4வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஸ்வாமி பிரதிபாந்தா மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
பாரத் சேவாஸ்ரம சங்கத்தின் முர்ஷிதாபாத் பிரிவில் பிரதிபாந்தா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆசிரமத்தின் பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறியும் பின்னர் மிரட்டியும் கடந்த 2013 முதல் தன்னை பலமுறை பிரதிபாந்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.
புகாரின்படி, பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2012 டிசம்பரில் பிரதிபாந்தாவை சந்தித்தார். பள்ளியில் வேலை தருவதாக உறுதியளித்து அவரை ஆசிரம விடுதியில் தங்க வைத்துள்ளார். பின்னர் தினந்தோறும் அப்பெண்ணை 5வது மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அப்பெண்ணுக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவதாக கூறி விடுதியிலிருந்து அனுப்பி வைத்தார். இடையில் 2013 இல் அப்பெண்ணை ஆசிரம பள்ளி ஊழியர்கள், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.
அதை அப்பெண் எதிர்த்தபோதும் மருத்துவர் மற்றும் ஆசிரம ஊழியரகள் முன்னிலையில் அவரை மிரட்டடி அதற்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதுபோல முர்ஷிதாபாத்தில் உள்ள ஆசிரமத்தின் வெவ்வேறு கிளைகளுக்கும் அவரை அழைத்துச்சென்று வன்கொடுமைக்கு செய்து வந்துள்ளார். தான் மனரீதியாக உடைந்த நிலையில் இருந்து வந்தேன் என்று அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
கடைசியாக கடந்த ஜூன் 12 ஆம் தேதி அப்பெண் சாமியாரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரை ஜூன் 13 இரவு பெராபூர் என்ற இடத்துக்கு வரச்சொல்லியுள்ளார்.
அங்கு சென்ற தன்னை 2 நபர்கள் அணுகி, மீண்டும் ஸ்வாமிஜியை தொடர்பு கொள்ள கூடாது என்று மிரட்டி வாகனத்திலிருந்து தள்ளி விட்டனர் என்று அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இது எல்லாம் தன்மீதான அவதூறு என பிரதிபானந்தா மறுத்துள்ளார்.
- சாத்வி ரிதம்பரா, ஜதின் கோஸ்வாமி, கைலாஷ் நாத் தீட்சித் ஆகியோர் பத்ம பூஷன் பெற்றனர்.
- தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று, மத்திய அரசு மொத்தம் ஏழு பத்ம விபூஷன் விருதுகளையும், 19 பத்ம பூஷன் விருதுகளையும், 113 பத்மஸ்ரீ விருதுகளையும் அறிவித்தது.
முதல் கட்டத்தில், நடிகர் அஜித், பாலகிருஷ்ணா ஆகியோருக்கு பத்ம பூஷன் என மொத்தம் 71 பேருக்கு ஏப்ரல் 28 அன்று விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் வைத்து எஞ்சியுள்ள 68 விருத்தாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளைச் செய்த புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அந்த வகையில் இந்த நிகழ்வில் பிரபல நடிகை ஷோபனா பத்ம பூஷன் விருதைப் பெற்றார். தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கும் பத்ம பூஷன் வழங்கப்பட்டது.
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர், குமுத்னி ரஜினிகாந்த் லக்கியா ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
மேலும், சாத்வி ரிதம்பரா, ஜதின் கோஸ்வாமி, கைலாஷ் நாத் தீட்சித் ஆகியோர் பத்ம பூஷன் பெற்றனர்.
பொருளாதார நிபுணர் பிபேக் தேப்ராய் மறைவுக்குப் பிறகு கவுரவிக்கப்பட்டனர்.
கண்ணப்பா சம்பந்தன், டாக்டர் நீர்ஜா பட்லா, மந்த கிருஷ்ண மடிகா, சையத் ஐனுல் ஹசன், சாந்த் ராம் தேஸ்வால் ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.
- "சேட்டு (மரம்) ராமையா" , "வனஜீவி" என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.
- ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதற்காக, 2017 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
தெலுங்கானாவை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 'வனஜீவி' ராமையா இன்று (சனிக்கிழமை) மாரடைப்பால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 87.
தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த பசுமைப் போராளி, "சேட்டு (மரம்) ராமையா" ,"வனஜீவி" என்று பிரபலமாக அழைக்கப்படும் தாரிபள்ளி ராமையா கடந்த பல தசாப்தங்களாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதற்காக, 2017 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
இந்நிலையில் கம்மம் மாவட்டத்தில் ரெட்டிபள்ளி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவரின் மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் மறைவு சுற்றுசூழல் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- 2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
- பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது . இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.
- பத்ம விருது பெற தேர்வாகியுள்ளவர்களுக்கு பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- விஜயகாந்த் உள்ளிட்ட 17 பேர் பத்ம பூஷன் விருது பெறுகிறார்கள்.
பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது பெற்ற குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த நண்பர் விஜயகாந்த் ஆகியோருக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்திய நாட்டின் இரண்டாவது உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது பெற்ற குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த நண்பர் விஜயகாந்த், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்ம விபூஷன் விருது பெற்ற கலைஞர்கள் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமணியம், பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமிய கலையான கும்மி ஆட்ட பயிற்சியாளர் பத்தரப்பன், சின்னப்பா, இயற்கை விவசாயி செல்லம்மாள் உள்ளிட்ட விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

இவர் மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்ப உள்ளார். சமீபத்தில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட மசோதா தாக்கல் செய்தது. அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு டைரக்டர் அரிபம் ஷியாம் சர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அண்டை நாடுகளான வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014 டிசம்பர் 31-ந்தேதிவரை இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு அதிவிரைவாக குடியுரிமை வழங்க வழி வகை செய்கிறது.
இதற்கு மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த விருதை திரும்ப அனுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
டைரக்டர் சர்மா பல தேசிய விருதுகளை பெற்று இருக்கிறார். அவருக்கு மத்திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. #PadmaShri #AribamSyamSharma
மத்திய அரசு நேற்றிரவு அறிவித்த பத்ம விருது பெறுவோர் பட்டியலில் 9 விளையாட்டு பிரபலங்களும் இடம் பெற்று இருக்கிறார்கள். காமன்வெல்த் விளையாட்டில் 3 பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத்கமல் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
இதே போல் இரண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தவரான கவுதம் கம்பீர், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர், செஸ் வீராங்கனை ஹரிகா, வில்வித்தை மங்கை பம்பைய்லா தேவி, கூடைப்பந்து வீராங்கனை பிரசாந்தி சிங், மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ஆகியோரும் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள். மலையேற்றத்தில் பல சாதனைகள் படைத்திருக்கும் உத்தரகாண்டை சேர்ந்த வீராங்கனை பச்சேந்திரி பாலுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. #PadmaShri #GautamGambhir






