என் மலர்
நீங்கள் தேடியது "Manipur"
- இடிபாடுகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். துபுல் ரெயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.
இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடிபாடுகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து நோனி மாவட்ட ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " துப்புல் யார்டு ரெயில்வே கட்டுமான முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. டஜன் கணக்காணவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டதால் மேலும் உயிரிழப்புகள் பதிவாகலாம் என அஞ்சப்படுகிறது.
நிலைமை மோசமடைந்து வருவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், ஆற்றின் அருகே வராமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். முடிந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுங்கள். பொதுமக்கள் மேலும், எச்சரிக்கையாக இருக்கவும், மழையின் நிலை மேலும் மோசமடைந்தால் எந்த உதவிக்கும் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதுகுறித்து மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " துபுல் நிலச்சரிவின் நிலைமையை மதிப்பிடுவதற்கு இன்று அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களை பிரார்த்தினையில் வைப்போம். சம்பந்தப்பட்ட இடத்திற்கு உதவ மருத்துவர்களுடன் ஆம்புலன்ஸ்களும் அனுப்பப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.
நாகா மக்கள் முன்னணி கட்சியில் கடந்த சில நாட்களாகவே பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. நாகாலாந்தில் கட்சிக்குள் நிகழும் பிரச்சினைகளுக்கு பா.ஜனதா தான் காரணம் என்று நாகா மக்கள் முன்னணி கூறி வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் 21 இடங்களை பெற்ற பா.ஜனதா, 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை, ஏ.ஐ.டி.சி கட்சிகள் ஆதரவு அளித்து வந்தது. முதல்வராக பா.ஜனதாவை சேர்ந்த என்.பிரேன்சிங் முதல்வாராக பதவி வகித்து வருகிறார்.
நாகா மக்கள் முன்னணி, மக்களவைத் தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு ஆதரவு பிரசாரம் மேற்கொண்டதாக 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது. அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான மனுவையும் சபாநாயகரிடம் அளித்தது. அதேசமயம், 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைவர்களும் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் நாகலாந்து மாநிலம் கோஹிமாவில் நடைபெற்ற நாகா மக்கள் முன்னணி கூட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சி அமைத்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தங்கள் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் நாகா மக்கள் முன்னணி மாநில தலைவரான அவாங்போநெவ்மாய் கூறியுள்ளார்.




கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் வென்றன.
பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், தனிப்பெரும் கட்சி நாங்களே எனவே எங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என எடியூரப்பா அம்மாநில கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்தார்.
குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்தனர். திடீர் திருப்பமாக நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், தனிப்பெரும் கட்சி என்று கூறி கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது போல, மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்காமல் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களை வைத்துள்ள கட்சி ஆட்சியமைக்கலாம் என அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் நாங்களே தனிப்பெரும் கட்சி எனவே நாளை மதியம் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளோம்.
கடந்த முறை தனிப்பெரும் கட்சியாக இருந்தும் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு எதன் அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது? என்பதற்கான விளக்கத்தையும் கவர்னர் ஜக்திஷ் முக்ஹியிடம் கேட்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.
மணிப்பூர் சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 28 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியை புறம் தள்ளிவிட்டு 21 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க அப்போதைய மணிப்பூர் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#KarnatakaCMRace #ManipurCongress
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் இருவர் மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சட்ட அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் ராமலிங்கம் சுதாகர் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது யாகூப் மிர் மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாற்றப்பட்டதை அடுத்து, அதே நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அலோக் அராதே தற்காலிக தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #NewChiefJustices