என் மலர்
நீங்கள் தேடியது "Resettle"
- வன்முறையில் குறைந்தது 260 பேர் கொல்லப்பட்டனர்
- மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறையில் உள்ளது
மே 2023 முதல் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையால் இடம்பெயர்ந்த 10,000 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என மணிப்பூர் தலைமைச் செயலாளர் புனித் குமார் கோயல் தெரிவித்துள்ளார்.
2025-26 மணிப்பூர் பட்ஜெட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ. 573 கோடி மதிப்பிலான மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை, 2,200-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10,000 மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 4000 வீடுகள் மீள்குடியேற்றத்திற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன. குடும்பங்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதற்காக, மாநில அரசு, மாநில காவல்துறை, மத்திய ஆயுதக் காவல் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் ராணுவம் ஆகியவை இணைந்து கிராமங்களில் பாதுகாப்புச் சாவடிகளை (security posts) அமைத்து வருவதாகவும் கோயல் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மணிப்பூரில் குக்கி மற்றும் மைதேயி சமூகங்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல குடும்பங்கள் வீடற்றவர்களாக மாறினர். இந்தாண்டு பிப்ரவரியில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில் வன்முறைகள் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.






