என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Love marriage"
- கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.
- கலியுகத்தின் அறிகுறி என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மாமியார் மருமகள் என்றாலே எப்போதுமே எதிர் எதிர் துருவங்களாக இருப்பது தான் வழக்கம். இதற்கு மாறாக மாமியார் மருமகள் இருவரும் தங்களுடைய எல்லையைத் தாண்டி ஓரின சேர்க்கை திருமணம் செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர வயது பெண் சுமன். இவருடைய சொந்த மருமகள் ஷோபா. கடந்த 3 ஆண்டுகளாக மாமியார் சுமனுக்கு மருமகள் சோபா மீது காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்தனர்.
இது இவர்களின் கணவர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கண்டித்தனர். இதனால் மாமியார் மருமகள் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
அப்போது மாமியார் சுமன் பேண்ட் சட்டை அணிந்து மணமகன் போல காட்சி அளித்தார். மருமகள் சோபாவுக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவிலில் இருவரும் மாலை மாற்றினர். பின்னர் மாமியார் சுமன் மருமகள் கழுத்தில் தாலி கட்டினார். அவரது நெற்றியில் குங்குமம் வைத்தார். இருவரும் புதுமண தம்பதிகளாக அங்குள்ள நெருப்பை சுற்றி வந்து அக்னிசாட்சியாக நாங்கள் எப்போதும் ஒன்றாக இருப்போம் என உறுதி ஏற்றனர்.
மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமியார் கூறுகையில்:-
நான் எனது மருமகளை வெறித்தனமாக காதலிக்கிறேன். அவள் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதை என்னால் தாங்க முடியவில்லை.
உலகம் என்ன நினைக்கும் என்பதை பற்றி கவலைப்படாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள எங்களது மனம் தூண்டியது.
கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் எப்போதும் பிரிய மாட்டோம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தம்பதியினர் தாங்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோவை அவர்களுடைய குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மாமியார் மருமகள் திருமணம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் சூடான விவாதத்தை தூண்டி உள்ளது.
சிலர் அவர்களின் முடிவை ஆதரித்தும் பலர் இது இயற்கைக்கு மாறான விதி மீறல். கலியுகத்தின் அறிகுறி என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மாமியார் மருமகள் திருமணம் செய்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
बिहार के गोपालगंज से थोड़ा विचित्र मामला सामने आया है....
— Afroz Alam (@AfrozJournalist) August 12, 2024
जहां मामी और भांजी के बीच प्यार हो गया और दोनों ने जन्म-जन्म तक साथ रहने की कसमें खा ली।
मामी- भांजी ने पुरे रिती रेवाज के साथ शादी कर ली....#SameSexMarriage pic.twitter.com/AyDSUzKZBb
- 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
- விமானம் மூலம் டெல்லி சென்று, ஜம்மு காஷ்மீரில் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் தவுலத் மகள் சுமையா பேகம் (வயது 22).
இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கத்தமிழன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களுடைய காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இவர்கள் வெவ்வேறு சமூகம் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 5-ந் தேதி 2 பேரும் வீட்டில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் மூலம் சென்னைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்று, ஜம்மு காஷ்மீரில் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் 2 பேரும் மணக்கோலத்தில் பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் வரவழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இளம்பெண்ணை கடத்தி சென்ற குடும்பத்தினர், அவரை கொலை செய்து உடலை எரித்தனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பெண்ணின் உடல் 80 சதவீதத்துக்கும் மேல் எரிந்திருந்தது.
சாதி, மதம், படிப்பு, தகுதி, அந்தஸ்து, பொருத்தம் ஆகியவற்றை பார்த்து ஒரு மகன் அல்லது மகனுக்கோ திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்கின்றனர். இதெல்லாம் மீறி மகனோ அல்லது மகளோ தங்களது விருப்பம் இல்லாமல் காதல் திருமணம் செய்தால் அவர்களை கொலை செய்யும் அளவுக்கும் பெற்றோர் செல்கின்றனர்.
அப்படி ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
தங்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ததற்காக 24 வயது இளம்பெண்ணை குடும்பத்தினர் கடத்தி சென்று கொன்று உடலை எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் ரவி பீல் என்பவரை பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக திரமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதை அறிந்த காதல் தம்பதி பல்வேறு இடங்களில் தங்கி தங்களது உயிரை பாதுகாத்து வந்தனர். இறுதியாக காதல் தம்பதியினர் வங்கிக்கு வரவுள்ள தகவல் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.
இதனால் வங்கிக்கு சென்ற குடும்பத்தினர் அங்கே காத்திருந்து, அப்பெண்ணை கணவரின் கண் முன்னே காரில் கடத்தி சென்றன. இதையடுத்து கணவர் போலீசில் புகார் அளித்தார். அதற்குள்ளாக அந்த இளம்பெண்ணை கடத்தி சென்ற குடும்பத்தினர், அவரை கொலை செய்து உடலை எரித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பெண்ணின் உடல் 80 சதவீதத்துக்கும் மேல் எரிந்திருந்தது. போலீசார் வருவதை அறிந்த குடும்பத்தினர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.
- டாப்ஸி காதல் திருமணம் கடந்த 23-ந் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது
- நடிகை டாப்ஸிக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்
நடிகர் தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதை தொடர்ந்து 'ஆரம்பம்', 'காஞ்சனா 2' உள்பட பல படங்களில் அவர் நடித்து உள்ளார்.
தற்போது இந்தி படங்களில் டாப்ஸி நடித்து வருகிறார். பிரபல நடிகர் ஷாருக்கானுடன் ஜோடியாக நடித்த 'டங்கி' படம் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் 'டென்மார்க்' நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்யாஸ் என்பவரை பல ஆண்டுகளாக டாப்ஸி காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் இந்த மாதம் இறுதியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் டாப்ஸி காதல் திருமணம் கடந்த 23-ந் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சினிமா பிரபலங்கள் பங்கேற்று உள்ளனர். இதையடுத்து நடிகை டாப்ஸிக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இளம்பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பூவாலூர் கிராமத்தை சேர்ந்த நவீன்- ஐஸ்வர்யா சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இளம்பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக இருந்த பெற்றோரை பட்டுக்கோட்டை காவல்துறை கைது செய்தது.
கொல்லப்பட்ட இளம்பெண்ணின் தந்தை பெருமாள், தாய் ரோஜாவை கைது செய்த காவல்துறை, பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தை சேர்ந்த நவீன்- ஐஸ்வர்யா சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஐஸ்வர்யாவை துன்புறுத்தி பெற்றோர் கொலை செய்ததாக கணவன் நவீன் புகார் அளித்த புகார் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- மாலினியும், கண்ணனும் ஒரே நூற்பாலையில் வேலை பார்த்தனர்.
- புதுப்பெண்ணை காரில் கடத்தி சென்றதாக கண்ணன் போலீசில் புகார் செய்தார்.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள சென்னிமலை கிராமத்தை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மகன் கண்ணன் (வயது 21). களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் மாலினி (20). இவரும், கண்ணனும் ஒரே நூற்பாலையில் வேலை பார்த்தனர்.
காதல் திருமணம்
அப்போது இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் ஏறி கடந்த 3-ந் தேதி வேளாங்கண்ணியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் மாலினியின் தாயார் செல்வராணி நேற்று முன் தினம் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து நெல்லைக்கு அழைத்து வந்தபோது 2 காரில் வந்த கும்பல் அந்த புதுப் பெண்ணை காரில் கடத்தி சென்றதாக கண்ணன் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.
2 பேரிடம் விசாரணை
அதன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறும் போது, மாலினியை கடத்தி சென்று விட்டதாக கண்ணன் அளித்த புகாரில் விசாரணை நடத்தினோம். அப்போது மாலினியை அவரது உறவினர்கள் காரில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக அவரது உறவினர்கள் 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். ஆனால் தற்போது மாலினி தன்னை யாரும் கடத்த வில்லை என்றும், தனக்கு திருமணமாகவில்லை என்றும் முரண்பாடான கருத்துக்களை கூறி வருகிறார்.
இதனால் வழக்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
- அரவிந்த் ஜெபமலரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- அரவிந்த் ஏமன்குளத்திற்கு வந்து வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
களக்காடு:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் அருகே உள்ள பல்லடத்தில் வசித்து வந்த போது, திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளத்தை சேர்ந்த அருள்தங்கராஜ் மகள் ஜெபமலரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் கணவன், மனைவி இருவரும் காட்டு மன்னார்கோவிலில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 1 ஆண்டுக்கு முன் அரவிந்த் தனது மனைவியின் சொந்த ஊரான ஏமன்குளத்திற்கு வந்து வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.
இதற்கிடையே சம்பவத்தன்று அரவிந்த் தான் வசித்து வந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரவிந்த் தற்கொலை செய்ய காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதல் திருமணம் செய்த தம்பதி உத்தரபிரதேசத்தில் வசித்து வந்தனர்.
- மகள் வேறு மதத்தை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ததை கோரா கானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மும்பை:
மும்பை மான்கூர்டு பகுதியில் உள்ள கிணற்றில் கடந்த சனிக்கிழமை வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில், அந்த வாலிபர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இருப்பினும் அவர் யார்? என்ற அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை நவிமும்பை பன்வெல் பகுதியில் புதருக்குள் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற பன்வெல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த பெண்ணும் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
2 பேரும் ஒரே மாதிரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பதால், அவர்கள் காதலர்கள் அல்லது கணவன்-மனைவியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில், கொலையான பெண் மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்த கோரா கான்(வயது50) என்பவரின் மகள் குல்னாஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து கோரா கானை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் குட்டு அம்பலமானது. அதாவது, அவரது மகள் குல்னாசை உத்தரபிரதேசத்தை சேர்ந்த கரண் ரமேஷ் சந்திரா(22) என்ற வாலிபர் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்தது தெரியவந்தது. தனது மகள் வேறு மதத்தை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ததை கோரா கானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதற்கிடையே காதல் திருமணம் செய்த தம்பதி உத்தரபிரதேசத்தில் வசித்து வந்தனர். சமீபத்தில் கோரா கான் அவர்களை தொடர்பு கொண்டு நைசாக பேசியுள்ளார். மகள், மருமகனையும் மும்பை வரவழைத்து உள்ளார். பின்னர் தனது மகன் சல்மான் மற்றும் சல்மானின் நண்பர் முகமது கான் ஆகியோருடன் சேர்ந்து மகள் குல்னாசையும், மருமகன் கரண் ரமேஷ் சந்திராவையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்த படுகொலையை மறைப்பதற்காக அவர்கள் கரண் ரமேஷ் சந்திரா உடலை மும்பை மான்கூர்டில் உள்ள கிணற்றிலும், குல்னாஸ் உடலை நவிமும்பை பன்வெல் காட்டுப்பகுதியிலும் வீசி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கோரா கான், சல்மான், முகமது கான் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உதவியதாக 3 சிறுவர்களையும் போலீசார் பிடித்தனர். இவர்கள் அனைவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கொலையாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதம் மாறி திருமணம் செய்த இளம் தம்பதி ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆஷா மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதால் ஐயப்பனின் பெற்றோர் அவரை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
- பெண் வீட்டார் திருமயம் கலிய பெருமாள் கோவிலில் ஆஷாவுக்கும் ஐயப்பனுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா (வயது21). இவரும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(24) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆஷா புதுக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து விட்டு சென்னையில் மகளிர் விடுதியில் தங்கி மொபைல் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார்.
அதேபோல் கல்லூரி படிப்பை முடித்த ஐயப்பன் சேலத்தில் உள்ள தனியார் டவர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ஐயப்பன் சேலத்திலிருந்து அவ்வப்போது சென்னை சென்று ஆஷாவை சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இதில் ஆஷா கர்ப்பம் அடைந்தார்.
இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனிடம் ஆஷா கேட்டிருக்கிறார்.
இதனையடுத்து ஐயப்பன் அவரது பெற்றோரிடம் ஆஷாவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஆஷா மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதால் ஐயப்பனின் பெற்றோர் அவரை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த 9 மாத கர்ப்பிணியான ஆஷா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து திருமயம் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுமையா பானு விசாரணை நடத்தினார்.
அப்போது ஐயப்பன் ஆஷாவை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். ஆனால் ஐயப்பனின் பெற்றோர் ஆஷாவை திருமணம் செய்தால் வீட்டிற்கு அவர்கள் வரக்கூடாது என்றனர்.
இதையடுத்து பெண் வீட்டார் திருமயம் கலிய பெருமாள் கோவிலில் ஆஷாவுக்கும் ஐயப்பனுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
- புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து நிதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் நிதீஷ்குமார் நாகலட்சுமியை திருமணம் செய்ய சம்மதித்தார்.
- நிதீஷ்குமாரிடம் போலீசார் இனிமேல் நாகலட்சுமியிடம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பூவனூர் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ்குமார் பி.ஏ பட்டதாரி.
இவர் எம்.பரூர் கிராமத்தை சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண்ணை கடந்த 6 வருடமாக காதலித்து வந்தார். நாகலட்சுமி மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த கடைக்கு நிதீஷ்குமார் அடிக்கடி சென்று வருவார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் பலமுறை சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாகலட்சுமி 6 மாத கர்ப்பமானார்.
இதனைதொடர்ந்து நாகலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிதீஷ்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு நிதீஷ்குமார் திருமணம் செய்ய மறுத்துவிட்டு நாகலட்சுமியை விட்டு விலக ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி விருத்தாசலம் பூவனூரில் உள்ள நிதீஷ்குமார் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். நிதீஷ்குமார் வீட்டின் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனையடுத்து நாகலட்சுமி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து நிதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் நிதீஷ்குமார் நாகலட்சுமியை திருமணம் செய்ய சம்மதித்தார். இதனைதொடர்ந்து இருவீட்டாரின் முன்னிலையில் விருத்தாசலம் வண்ண முத்துமாரியம்மன் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் நிதீஷ்குமாரிடம் போலீசார் இனிமேல் நாகலட்சுமியிடம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது.
- கோவையில் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
திருமங்கலம்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரியவரதன் (வயது 22). இவரும், மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சாத்தங்குடியை சேர்ந்த ஜீவானந்தம் மகள் சினேகா (21) என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் பிள்ளைகளின் காதலை ஏற்க மறுத்து விட்டனர். பெற்றோர் சம்மதத்துடன் தங்கள் காதல் நிறைவேறாது என்று எண்ணிய காதல் ஜோடி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியது.
பின்னர் அவர்கள் கோவையில் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அங்கேயே ஒரு வாடகை வீட்டில் தனிக்குடித்தனமும் வசித்து வந்தனர். சில மாதங்கள் கழித்து இரு வீட்டாருக்கும் இதுகுறித்து தெரியவந்தது. இந்த நிலையில் மகனை வீட்டிற்கு வருமாறு அவரது தந்தை மணி அழைத்தார்.
ஒரு வழியாக தங்களது திருமணத்திற்கு சம்மதம் கிடைத்து விட்டதாக நினைத்த பிரியவரதன் மகிழ்ச்சி பெருக்கோடு தனது காதல் மனைவியுடன் வீட்டிற்கு வந்தார். அங்கு அவர்கள் 3 நாட்கள் தங்கி இருந்தனர். விருந்து, உபசரிப்பு என புதுமண ஜோடி திளைத்து போனார்கள்.
அதே சமயம் அங்கு சினேகாவின் தந்தை ஜீவானந்தம், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் 2 பேரும் அங்கு வந்தனர். அப்போது அவர்களும் தங்கள் பங்கிற்கு மருமகனையும், மகளையும் தங்கள் ஊருக்கு விருந்துக்காக அழைத்து செல்ல விரும்புதாக மணியிடம் கூறி உள்ளனர்.
அதற்கு சம்மதித்த மணி, மகன் பிரியவரதன், மருமகள் சினேகா ஆகியோருடன் தனது மனைவி சின்னம்மாளையும் அவர்களுடன் அனுப்பி வைத்தார். அவர்கள் காரில் சினேகாவின் சொந்த ஊரான சாத்தங்குடிக்கு புறப்பட்டனர்.
மேலஉரப்பனூர் கண்மாய் அருகே சென்றபோது காரின் வேகத்தை குறைத்து, பிரியவரதன் அவரது தாய் சின்னம்மாள் ஆகிய இருவரையும், காரில் இருந்த சினேகாவின் தந்தை ஜீவானந்தம் மற்றும் அவரது உறவினர்கள், காரில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அவர்கள் சுதாரிப்பதற்குள் அவர்களிடமிருந்து செல்போனையும் பறித்துக்கொண்டு சினேகாவை மட்டும் காரில் அழைத்து சென்றனர். இதையடுத்து கடத்தி செல்லப்பட்ட தனது மனைவியை மீட்டு தருமாறு திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பிரியவரதன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேரும் ஆலங்குளம் என்ற ஊரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
- இளம்பெண்ணின் பெற்றோர் அவர்களது மகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
கோவை:
மதுரையை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவர் உடுமலை பேட்டையில் உள்ள ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு வேறு மதத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே வாலிபர் வேறுமதத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது காதலனுடன் சிவகாசிக்கு சென்றார். அங்குள்ள கோவிலில் வைத்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து 2 பேரும் ஆலங்குளம் என்ற ஊரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி இளம்பெண்ணின் பெற்றோர் எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காதலனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இளம்பெண் மற்றும் அவரது காதலனை மீட்ட னர். பின்னர் தங்கள் மகளை திருமணம் செய்ய அவரது பெற்றோர் வாலிபருக்கு சில நிபந்தனைகளை விதித்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
அதன் பின்னர் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருந்தனர். மேலும் இளம்பெண்ணின் பெற்றோர் அவர்களது மகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் மணமகனை தேடி வந்தனர்.
இதுகுறித்து இளம்பெண் அவரது காதலனுக்கு தகவல் தெரிவித்தார். எப்படியாவது தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார். இதனையடுத்து இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற வாலிபர் அவரை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு வந்தார். பின்னர் 2 பேரும் அங்குள்ள கோவில் வைத்து மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின்னர் காதல் ஜோடி மாலையுடன் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்