என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்ப்பிணி மனைவியை துண்டுதுண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவரில் அடைத்த கணவன்.. ஐதராபாத்தில் அதிர்ச்சி
    X

    கர்ப்பிணி மனைவியை துண்டுதுண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவரில் அடைத்த கணவன்.. ஐதராபாத்தில் அதிர்ச்சி

    • வாதி (25 வயது) மற்றும் மகேந்தர் ரெட்டி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பாலாஜி ஹில்ஸில் வசித்து வந்தனர்.
    • உடல் பாகங்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து வெளியே எடுத்துச் செல்ல ஆயத்தமானார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கர்ப்பிணி மனைவியை கணவன் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஐதராபாத் புறநகரில் உள்ள மேட்சல், மெடிபள்ளியில் பாலாஜி ஹில்ஸில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    விகாராபாத் மாவட்டம், காமரெட்டிகுடாவைச் சேர்ந்த ஸ்வாதி (22 வயது) மற்றும் மகேந்தர் ரெட்டி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    வேலை தேடி வந்த மகேந்தர் கர்ப்பமாக இருந்த மனைவி ஸ்வாதியை அழைத்துக்கொண்டு 28 நாட்களுக்கு முன்பு பாலாஜி ஹில்ஸில் குடியேறி உள்ளார்.

    இந்நிலையில் மனைவி ஸ்வாதியை கணவர் மகேந்தர் நேற்று வீட்டில் வைத்து கொலை செய்துள்ளார்.

    ஸ்வாதியின் உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து முசி நதியில் வீசியுள்ளார். ஸ்வாதியின் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்டுள்ளன.

    இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கு ஸ்வாதியின் தலை, கைகள் மற்றும் கால்கள் அற்ற உடலை கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.

    இதைத்தொடர்ந்து மகேந்தரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருக்கின்றனர்.

    Next Story
    ×