என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணம்"

    • இருதரப்பினரும் அங்கிருந்த நாற்காலி, தட்டு என கையில் கிடைத்ததை வைத்து மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.
    • வரதட்சணைக் கேட்டதே திருமணம் நிற்க காரணம் என மணமகள் தரப்பு விளக்கம்

    பீகாரின் புத்தகயாவில் ரசகுல்லா பற்றாக்குறையால் திருமணம் நின்றுபோனது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 29 அன்று புத்த கயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    திருமண சடங்குகள் முடிந்த நிலையில், ரசகுல்லா பற்றவில்லை என பெண்ணின் வீட்டார் பிரச்சனையை தொடங்கியதாக புத்தகயா போலீசார் தெரிவித்தனர். பேச்சு திடீரென மோதலாக மாற இருதரப்பினரும் அங்கிருந்த நாற்காலி, தட்டு என கையில் கிடைத்ததை வைத்து மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் பலரும் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மணமகளின் குடும்பத்தினர் பொய்யான வரதட்சணை வழக்கைப் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர். சண்டை நடந்து கொண்டிருக்கும் போது, மணமகளுக்கு பரிசளிக்க கொண்டு வந்த நகைகளை மணமகளின் குடும்பத்தினர் எடுத்துச் சென்றதாக மணமகனின் தாயார் முன்னி தேவி குற்றம் சாட்டினார். மேலும் ஹோட்டல் புக்கிங்கையும் அவர்களே செய்ததாக மணமகனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தைத் தொடர ஒப்புக்கொண்டாலும், மணமகளின் குடும்பத்தினர் மறுத்ததாக, மணமகன் தரப்பு உறவினர் தெரிவித்தனர்.


    • முதல்ல புடிச்ச பொண்ணு இல்ல பையன் கிட்ட காதலை சொல்லணும்
    • திருமணத்துக்கு ரெண்டு பேரோட பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்கணும்.

    சிவகாசி மேயர் சங்கீதா இன்ப இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    அப்போது பேசிய அவர், "காதல் பண்ணறது EASYனு எல்லாரும் சொல்லுவாங்க ஆனா... இருக்குறதுலயே ரொம்ப கஷ்டமானது இந்த காதல் கல்யாணம்தான். முதல்ல புடிச்ச பொண்ணு இல்ல பையன் கிட்ட காதலை சொல்லணும். அவங்களைச் சம்மதிக்க வைக்கணும். அடுத்து தன்னோட காதல் எவ்ளோ உண்மையானதுன்னு நிரூபிக்கணும். திருமணத்துக்கு ரெண்டு பேரோட பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்கணும். இது போதாதுன்னு சொந்தக்காரங்க வேற வருவாங்க... அவங்களைச் சமாளிக்கணும். காதல் கல்யாணத்துக்கு இதுமாதிரி பல பிரச்னைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்" என்று கலகலப்பாக பேசினார்.

    • நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார் சமந்தா
    • சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் சமந்தாவுக்கும், தி பேமிலி மேன் 2 இயக்குநர் ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.

    தி பேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடெல்: ஹனி பன்னி திரைப்படதில் நடித்த சமந்தா அந்த சமயத்தில் அந்த படங்களின் இயக்குநரான ராஜ் நிடிமொருவுடன் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமொருவும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    • கடுமையாகத் தாக்கி, துப்பாக்கியால் தலையில் சுட்டு, பின்னர் கல்லால் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்தனர்.
    • மரணத்திலும் எங்கள் காதல் வென்றது; என் தந்தையும் சகோதரர்களும் தோற்றனர் என்று அன்சல் கூறினார்.

    மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலனின் சடலத்துடன் காதலி திருமணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் நானந்த் பகுதியை சேர்ந்த 20 வயது சக்ஷம் டேட் மற்றும் அன்சல் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அன்சலின் குடும்பத்தினர் இவர்களது காதலை கடுமையாக எதிர்த்தனர்.

    எதிர்ப்பை மீறி சக்ஷமைத் திருமணம் செய்துகொள்ள அன்சல் முடிவெடுத்ததை அறிந்த அவரது தந்தையும் சகோதரர்களும், வியாழக்கிழமையன்று சக்ஷமைக் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கியால் தலையில் சுட்டு, பின்னர் கல்லால் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்தனர்.

    சக்ஷமின் இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது, அன்சல் அவர் வீட்டிற்குச் சென்றார்.

    அவர் சக்ஷமின் உடலுக்கு மஞ்சள் பூசி, தன் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு இறந்த காதலனை திருமணம் செய்து கொண்டார்.

    அப்போது, சக்ஷமின் மரணத்திலும் எங்கள் காதல் வென்றது; என் தந்தையும் சகோதரர்களும் தோற்றனர் என்று கூறிய அன்சல், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    மேலும் சக்ஷமின் வீட்டிலேயே மருமகளாகத் தன் வாழ்நாள் முழுவதும் வாழப்போவதாகவும் அவர் சபதம் எடுத்துள்ளார்.

    கொலை வழக்கில் அன்சல் உடைய தந்தை, சகோதரர்கள் உள்ளிட்ட 6 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

    • பாரம்பரிய சடங்குகள் இன்றி நடந்த இந்த திருமணத்தில் இருவரும் அரசியலமைப்பு மீது உறுதிமொழி எடுத்தனர்.
    • இதன்மூலம் மொத்தம் 18 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டன.

    ஒடிசாவின் பெர்ஹாம்பூரைச் சேர்த்தவர் ப்ரீத்திபன்னா மிஸ்ரா (40). இவர் தெலுங்கானாவில் ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆந்திராவின் காக்கிநாடாவை சேர்ந்த பானு தேஜா (43) பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஐதராபாத்தில் ஒரு நிகழ்வில் சந்தித்து காதலித்த நிலையில் நேற்று முன் தினம் அவர்கள் திருமணம் பெர்ஹாம்பூரில் நடைபெற்றது.

    பாரம்பரிய சடங்குகள் இன்றி நடந்த இந்த திருமணத்தில் இருவரும் அரசியலமைப்பு மீது உறுதிமொழி எடுத்து திருமணம் செய்து கொண்டனர்.

    இதன்பின் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்த தான முகாமில் ரத்த தானம் செய்தனர். திருமணத்துக்கு வனத்திருந்த உறவினர்களும் ரத்த தானம் செய்தனர். இதன்மூலம் மொத்தம் 18 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டன.

    ஒடிசாவில் அரசியலமைப்பின் மீது உறுதிமொழி எடுத்து தம்பதியினர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

    • 24 வயதான சுஜிதா என்பவருக்கும் இம்மாத தொடக்கத்தில் முன் திருமணம் நடைபெற்றது.
    • சுஜிதாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியை சேர்ந்த விஜய் (31) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த 24 வயதான சுஜிதா என்பவருக்கும் இம்மாத தொடக்கத்தில் முன் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் திருமணம் ஆன 18-வது நாளில் (நவம்பர் 21) மாலையில் புதுப்பெண் திடீரென மாயமாகியுள்ளார். மேலும் புதுப்பெண்ணின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    பின்னர் தனது கணவருக்கு, வாட்ஸ் ஆப்பில் அப்பெண் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், பெற்றோரின் வற்புறுத்தலால் தான் நான் உங்களை திருமணம் செய்துகொண்டேன்... 7 சவரன் தாலியை வீட்டில் கழற்றி வைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நவ.23-ந் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.
    • ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் நேற்று முன்தினம் (நவ.23) திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து ஸ்ருமிதியின் வருங்கால கணவர் பலாஷ் முச்சலுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இச்செய்தி ஸ்ருமிதி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஸ்மிருதி தனது திருமணம் தொடர்பான அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் நீக்கினார். இதனால் இணையவாசிகள் பலரும் பல கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

    இந்நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்ற நிலையில், அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பலாஷ் முச்சல், மேரி டி'கோஸ்டா என்ற பெண்ணிடம், ஸ்விம்மிங் செய்ய அழைத்து Flirt செய்ததாக Reddit பக்கத்தில் வெளியான ஸ்கிரீன்ஷாட்கள்

    அந்த ஸ்கிரீன்ஷாட்டில், ``ஸ்மிருதியை நீங்கள் லவ் பண்றீங்க தானே.. அப்புறம் ஏன் என்னை அழைக்கிறீர்கள்'' என கேட்க, முச்சல் அதற்கு பதில் சொல்லாமல் Avoid செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

    • திருமணம் தொடர்பான பதிவுகளை நீக்கிய ஸ்மிருதி மந்தனா.
    • குடும்பங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என பலாஷ் முச்சலின் தங்கை கோரிக்கை

    இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் நேற்று முன்தினம் (நவ.23) திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து ஸ்ருமிதியின் வருங்கால கணவர் பலாஷ் முச்சலுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இச்செய்தி ஸ்ருமிதி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஸ்மிருதி தனது திருமணம் தொடர்பான அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் நீக்கினார். இதனால் இணையவாசிகள் பலரும் பல கருத்துகளை பதிவிட்டு வந்தனர். 

    இந்நிலையில் பலாஷ் முச்சலின் சகோதரியான பலாக் முச்சல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "ஸ்மிருதியின் தந்தையின் உடல்நிலை காரணமாக, ஸ்மிருதி மற்றும் பலாஷின் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.   

    • மணமகன் மீது சந்தேகம் ஏற்பட்டது.
    • மணமகள் ஆவேசமடைந்து திருமணத்தை நிறுத்தி விட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

    பீகார் மாநிலம் மேற்கு சாம்பரான் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பைதாபூர் பகுதியை சேர்ந்த மணமகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திருமணத்திற்காக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக மேற்கு சாம்பரானுக்கு சென்றனர்.

    தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெற்ற நிலையில் மணமகன் வெகுநேரமாக கண்ணாடி அணிந்திருந்ததை மணமகள் கவனித்துள்ளார். அவருக்கு மணமகன் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் உடனடியாக அதை வெளிக்காட்டவில்லை.

    ஆனால் திருமண சடங்குகள் நடைபெற்ற போது மணமகன் கண்ணாடியை கழற்றிய போது தான் அவருக்கு கண் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதை மறைத்து அவர் திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையறிந்த மணமகள் ஆவேசமடைந்து திருமணத்தை நிறுத்தி விட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

    இதனால் திருமண மண்டபத்தில் குழப்பம் நிலவியது. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகியது.

    • மகன்கள் ஒரு வருடம் முன் வீட்டை விட்டு விரட்டியதால் ஜான்பூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
    • இறுதிச் சடங்குகள் செய்யாமலேயே, உடலை அடக்கம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் தகனம் செய்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தில், வீட்டில் திருமணம் நடப்பதால் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தாயின் உடலை 4 நாட்கள் ப்ரீசரில் வைத்திருக்க மகன் அறிவுறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த மளிகைக் கடை வியாபாரியான பூவல் குப்தா என்பவரின் மனைவி ஷோபா தேவி, நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    மகன்கள் ஒரு வருடம் முன் வீட்டை விட்டு விரட்டியதால் ஜான்பூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் அவர் வசித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையடுத்து, முதியோர் இல்ல ஊழியர்கள் ஷோபா தேவியின் மகன்களுக்குத் தகவல் தெரிவித்தனர். முதலில் இளைய மகனிடம் பேசியபோது, அவர் தனது அண்ணனிடம் கலந்தாலோசித்த பிறகு பதிலளிப்பதாகக் கூறியுள்ளார்.

    பின்னர் அவர் முதியோர் இல்லத்தை திரும்ப அழைத்து, "இப்போது வீட்டில் திருமணம் நடக்கிறது. இந்த நேரத்தில் உடலைக் கொண்டு வந்தால் துரதிர்ஷ்டவசமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு நான்கு நாட்கள் கழித்து வந்து உடலை எடுத்துக்கொள்கிறேன். அதுவரை உடலை டீப் ஃப்ரீசரில் வைத்திருங்கள்" என்று அண்ணன் சொல்ல சொன்னதாக கூறியுள்ளார்.

    முதியோர் இல்லத்தின் ஊழியர்கள் நேரடியாக மூத்த மகனிடம் பேசியபோதும், அப்போதும் அதையே கூறியுள்ளார்.

    இதையடுத்து, ஊழியர்கள் மற்ற உறவினர்களைத் தொடர்பு கொண்ட நிலையில் அவர்கள் ஷோபா தேவியின் மகன்களை சம்மதிக்க வைத்து உடலை பெற்று வந்தனர்.

    ஆனால், மூத்த மகன் தாய்க்கு இறுதிச் சடங்குகள் செய்யாமலேயே, உடலை அடக்கம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் தகனம் செய்துள்ளனர்.

    • திருமணம் தடைப்பட்டது இருவரையும் உணர்ச்சி ரீதியாக பாதித்துள்ளது
    • ஸ்மிருதியின் தந்தை உடல்நலம் தேறிய உடன் திருமணம் நடைபெறும்

    இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவிற்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நேற்று திருமணம் நடைபெறவிருந்தது. இச்சூழலில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இவர்களின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்மிருதியின் காதலர் பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மன அழுத்தத்தால் பலாஷ் முச்சலுக்கு உடல்நிலை மோசமானதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் முச்சலுக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டதாகவும், இசிஜி உட்பட பிற சோதனைகள் செய்யப்பட்டதாகவும், தற்போது குணமடைந்து வீடு திரும்பியதாகவும், ஆனால் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் அவரது தாயார் தெரிவித்தார். திருமணம் தடைப்பட்டது இருவரையும் உணர்ச்சி ரீதியாக பாதித்தாகவும் அவர் தெரிவித்தார். 

    கடந்த வாரம் மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் வைத்து, ஸ்மிருதி மந்தனாவிடம் தன் காதலை வெளிப்படுத்தினார் பலாஷ் முச்சல். அவரின் காதலை ஏற்ற ஸ்மிருதி அவர்களின் திருமணம் தொடர்பாக வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து திருமணம் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    • ஸ்மிருதி மந்தனா- பலாஷ் முச்சல் திருமணம் இன்று நடைபெற இருந்தது.
    • ஸ்மிருதி மந்தனாவின் தந்தை தொடர் சிகிச்சை பெற்று வருவதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீரர் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா- பலாஷ் முச்சல் திருமணம் இன்று நடைபெற இருந்தது.

    இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவர் தொடர் சிகிச்சை பெற்று வருவதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸ் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×