search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pet dog"

    • ஹரி வார விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமையில் தனது மனைவி, மகளுடன் வீட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் செல்வது வழக்கம்.
    • சாலையில் செல்பவர்களை வேடிக்கை பார்த்த படி ரூபி ஹாயாக சென்று வருகிறது.

    திருப்போரூர்:

    சோழிங்கநல்லூர் அடுத்த நாவலூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரி. என்ஜினீயரான இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனைவி மற்றும் மகளுடன் வசித்து வரும் ஹரிக்கு வீட்டில் குட்டியில் இருந்தே வளர்த்து வரும் "ரூபி" என்ற நாய் மீது அதிக பாசம் உண்டு. வெளியூர் சென்றால் கூட நாயை உடன் அழைத்து சென்று வந்தார். ஒரு நாள் கூட ஹரியும், அவரது குடும்பத்தினரும் வளர்ப்பு நாயை விட்டு பிரியாமல் இருந்தனர்.

    இந்தநிலையில் ஹரி வார விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமையில் தனது மனைவி, மகளுடன் வீட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் செல்வது வழக்கம். அப்போது அவர் தனது செல்லபிராணி ரூபியையும் சைக்கிளில் அழைத்துசென்று வருவது சவாலாக இருந்தது.

    கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இ.சி.ஆர். சாலையில் தனது சைக்கிளின் பின்பக்கம் அமரவைத்து அழைத்து செல்லும் ரூபி எங்கு கீழே விழுந்து விபத்தில் சிக்கிவிடுமோ என்று ஒவ்வொரு முறையும் பயந்தார்.

    இதையடுத்து இணையதளத்தில் ஜெர்மன் நாட்டு குறும்படம் ஒன்றில் அங்கு சைக்கிளிங் செய்பவர்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சொகுசு வண்டியை சைக்கிளுடன் இணைத்து வளர்ப்பு நாயை சைக்கிளிங் அழைத்து செல்வதை ஹரி பார்த்தார். உடனடியாக அவர் ஆன்லைன் மூலம் ஜெர்மன் நாட்டில் இருந்து அந்த பிரத்யேக வாகனத்தை வரவழைத்தார். இதற்காக அவர் ரூ.25 ஆயிரம் செலவும் செய்து உள்ளார்.

    தற்போது ஹரி தனது வளர்ப்பு நாய் ரூபியை பிரத்யேக வாகனத்தில் அமர வைத்து அதனை தனது சைக்கிளில் பொருத்தி அழைத்து சென்று வருகிறார். அதில் சாலையில் செல்பவர்களை வேடிக்கை பார்த்த படி ரூபி ஹாயாக சென்று வருகிறது. இந்த சிறப்பு வாகனத்தில் மழை, வெயில் படாதவாறு தடுப்பும் உள்ளது. குடும்பத்தில் ஒருவர் போல் வளர்ப்பு நாயை பராமரித்து வரும் ஹரியின் பாசபிணைப்பினை பொதுமக்கள் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

    • மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார்.
    • வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    வாழப்பாடி:

    இன்றைய நவீன உலகில் மொபைல் போன் பயன்படுத்துகிற பெரும்பாலானோர் வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வுகளை யதார்த்தமாக பதிவு செய்து வருகிறார்கள். அதுபோன்று 7 மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலான வீடியோவால் தொழிலாளி கைதாகி கம்பி எண்ணும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி குமார் (வயது 46). இவர் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வந்தார். குமாரின் மகள் அந்த நாயை கொஞ்சி விளையாடுவது வழக்கம்.

    7 மாதங்களுக்கு முன்பு தெருவோர வெறிநாய் ஒன்று கடித்ததில் அந்த வளர்ப்பு நாய்க்கு வெறி பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது குமாரின் மகளை நாய் கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த குமார் அந்த நாயை கோபத்தில் அடித்தார். மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார். இதில் அந்த நாய் இறந்தது.

    இந்த சம்பவத்தை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். சென்னை திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிராணிகள் நல அமைப்பின் தலைவர் விக்னேஷ், இதுபற்றி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு அவர் ஆத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அருண்குமார் முன்பாக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டுவிடம் குமார் மகளை நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்திற்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆவணங்களை பார்த்தார். இதையடுத்து கூலித்தொழிலாளி குமாரை மாஜிஸ்திரேட்டு அருண்குமார் ஜாமீனில் விடுதலை செய்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு சென்றார்.
    • தடை செய்யப்பட்ட பகுதிக்கு ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை அழைத்து சென்றுள்ளார்.

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு சென்றார். மேலும் தனது வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றார். அந்த பூங்கா பகுதியில் நாயை அழைத்து வர தடை உள்ளது. ஆனால் அதை மீறி ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை பூங்காவுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், விதியை நினைவுப்படுத்தினார். இதையடுத்து நாய் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ரிஷி சுனக் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    ஏற்கனவே அவர் கொரோனா கட்டுப்பாட்டை மீறி விருந்தில் பங்கேற்றது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது ஆகிய சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • செல்லப் பிராணி சே சீ முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினார்.
    • அலங்காரம் செய்து நாய் சேசீயை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளர்கள் நலுங்கு வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓலையாம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் - மாரியம்மாள்.

    இவர்களது மகன் ஹரிஹரன். பட்டதாரி வாலிபரான ஹரிஹரன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் நாய்க்குட்டியை ஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்து வளர்த்துள்ளார்.

    மகனின் ஆர்வத்தைக் கண்ட அவரது பெற்றோரும் நாய்க்கு பால், பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி மகனுடன் சேர்ந்து பாசமாக நாய்க்குட்டியை தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக வளர்த்து வந்தனர்.

    அந்த நாய்க்கு சே சீ என பெயரிட்டு தங்கள் குடும்ப உறுப்பினராகவே அவற்றை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் தாங்கள் வளர்த்து வரும் செல்லப் பிராணி சே சீ முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினார்.

    முதலில் தயங்கி அவரது பெற்றோர் பின்னர் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வரும் செல்ல பிராணி சே சீக்கு சீமந்தம் செய்ய முன்வந்தனர்.

    அதன்படி நல்ல நாள் பார்த்து நேற்று சே சீக்கு சீமந்தம் செய்தனர். முன்னதாக ஆப்பிள் உட்பட பழ வகைகள் இனிப்புகளை சீர் வரிசை தட்டுகளாக வைத்தனர். ஒரு சிலரை மட்டும் சீமந்தத்திற்கு அழைத்தனர்.

    பின்னர் சே சீக்கு அலங்காரம் செய்து நாய் சேசீயை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளர்கள் நலுங்கு வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதனை வீடியோவாக எடுத்து தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சிறுவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பெண் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
    • வலியால் துடித்த சிறுவனை கண்டுக்கொள்ளாமல் இருந்த பெண்ணை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ராஜ்நகர் விரிவாக்கத்தில் வீட்டு வசதி வாரிய கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு, குடியிருக்கும் பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை லிஃப்டில் அழைத்து சென்றுள்ளார். அந்த லிஃப்டில் ஏற்கனவே சிறுவன் ஒருவன் இருந்துள்ளான்.

    அந்த சிறுவன் தனது இறங்கும் தளம் வருவதை அடுத்து, லிஃப்டின் கதவு அருகே வந்தான். அப்போது, அங்கிருந்த நாய் சீறிப்பாய்ந்து சிறுவனின் காலை கடித்துவிட்டது. இதனால் சிறுவன் வலியால் துடி துடித்து காலை உதறி கத்தினான். நாயை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்ட அந்த பெண், சிறுவன் வலியில் கதறுவதை பொருட்படுத்தாமல் மனிதாபிமானமின்றி இருந்தார். இந்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

    இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பெண் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வலியால் துடித்துக் கொண்டிருந்த சிறுவனை கண்டுகொள்ளாமல் இருந்த பெண்ணை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.



    • சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக, கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
    • சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சி அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

    நாசிக்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள முங்சரே கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை தாக்கியது. சிவப்பு கழுத்து பட்டை அணிந்திருந்த அந்த கருப்பு நாய் வீட்டின் ஒரு தாழ்வான சுவரில் அமர்ந்திருக்கிறது.

    சில வினாடிகளுக்குப் பிறகு, அங்கு வரும் ஒரு சிறுத்தை கண்ட அந்த நாய் குரைத்து விரட்ட முயற்சிக்கிறது. முதலில் பின்வாங்கும் சிறுத்தை, திரும்பி பாய்ந்து வந்து நாயைத் தாக்குகிறது. சிறிது நேர சண்டைக்குப் பிறகு, நாயை கவ்விக் கொண்டு அங்கிருந்து சிறுத்தை ஓடுகிறது.

    அந்த வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சி குறித்த வீடியோ, வெளியான உடனே ட்விட்டரில் 20,000க்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

    சிறுத்தை தாக்குதல் குறித்து பேசிய நாசிக் வனத்துறை துணைப் பாதுகாவலர் பங்கஜ் கர்க், இந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கிராம மக்கள் இரவில் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×