என் மலர்
நீங்கள் தேடியது "செல்லப் பிராணிகள் வளர்ப்பு"
- மாநகராட்சி கூட்டத்தில் செல்ல பிராணிகள் உரிமம் பெறுவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
- கூட்டத்தில் 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. மாமன்ற குழு தலைவர் சதீஷ்குமார் பேசுகையில், எனது வார்டு 182-ல் மக்கள் எனக்கு வாக்களித்தனர். ஆனால் மாநகராட்சி ஆவணங்களில் அது 184-வது வார்டாக காண்பிக்கப்படுகிறது. பெருந்தலைவர் காமராஜர் நகரில் கடந்த 3 ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை இதுவரை சரி செய்யவில்லை. அதனால் அங்கு எந்த பணியும் சரியாக நடைபெறவில்லை. நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்ததாக கூறினார்.
இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. உறுப்பினர் சதீஷ்குமாரை அமரும்படி குரல் கொடுத்தனர். பெரும்பாலான தி.மு.க. உறுப்பினர்கள் இருக்கையை விட்டு எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. உறுப்பினர்களும் பதிலுக்கு குரல் கொடுத்தனர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த திட்டத்தை கொண்டு வந்ததாக தி.மு.க.வினர் பதிலுக்கு குரல் கொடுத்தனர்.
அப்போது சபையில் ஒரே அமளியாக இருந்தது. இறுதியில் சதீஷ்குமார் அ.தி.மு.க. உறுப்பினர்களுடன் சபையை விட்டு வெளிநடப்பு செய்தார்.
இதையடுத்து கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி கூட்டத்தில் செல்ல பிராணிகள் உரிமம் பெறுவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். இதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 24-ந்தேதிக்குள் உரிமம் பெற வேண்டும். அப்படி பெற தவறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி ஊழியர்கள் இதை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள். மேலும் பூங்காக்கள் நடைபாதைகள் பிற பகுதிகளில் கழுத்துப் பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
மயிலாப்பூர் மந்தவெளிபாக்கத்தில் உள்ள கிழக்கு வட்டச் சாலைக்கு பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் சாலை என பெயர் மாற்றம் உட்பட 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தென்கொரியாவில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிப்பதையே விரும்புகின்றனர். குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவு ஆகும் என்பதால், பலர் தங்கள் செல்லப்பிராணிகளையே குழந்தையாக நினைத்து வளர்க்கத் தொடங்கி உள்ளனர்.
தென் கொரியாவின் சியோல் நகரில், காங் சுங் லி என்பவர் மனைவியுடன் வசித்து வருகின்றார். இவர் தனது தாயை காண செல்லும்போதும், பணி நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்லும் போதும் செல்லப்பிராணியான சன்சூ எனும் பொமேரியன் வகை நாயுடன் பயணம் செய்வது வழக்கம். மேலும் சந்திர புத்தாண்டு விடுமுறை நாளில் சின்சூவிற்கு 50 டாலர் மதிப்புடைய ஆடை அணிவிக்க போவதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கூறுகையில், ‘‘குழந்தை வளர்ப்பு பொருளாதார ரீதியாக பெரும் சுமையானது மற்றும் மன அழுத்தம் நிறைந்தது என்பதை புரிந்துக் கொண்டோம். இதனால் செல்லப்பிராணிகளிடம் அன்பை வெளிப்படுத்தினோம். சன்சூவை குழந்தையாகவே பாவித்து வளர்த்து வருகின்றோம். சன்சூவிற்கு மாதம் 90 டாலர் செலவிடுவது அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களைப்போன்று பல தம்பதிகள் செல்லப் பிராணிகளை வளர்க்க விரும்புகின்றனர்” என்றார்.
39 வயதான இவர் செல்லப் பிராணிகளுக்கான சேவை மையம் ஒன்றையும் நிறுவி வருவது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவில் செல்லப்பிராணிகள் தொழில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு வளர்ச்சியடைந்துள்ளது. அதேசமயம் தென் கொரியாவின் பிறப்பு வீதம் 1.05 எனும் அளவுக்கு குறைந்து, உலகிலேயே மிகக் குறைவான பிறப்பு வீதமாக உள்ளது. கல்விக்கான கட்டண உயர்வு , வீட்டு வாடகை உயர்வு மற்றும் அதிக வேலை நாட்கள் என பல காரணங்களால் பிறப்பு வீதம் குறைந்ததாக கூறப்படுகிறது. #Koreapetparenting






