என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Korea"

    • 24 மணிநேரமும் கொரிய இசை மற்றும் நாடகங்களை மட்டுமே பார்த்து வந்துள்ளனர்.
    • மூவரும் தங்கள் குடியிருப்பின் 9 வது மாடியில் இருந்து குதித்து செய்துகொண்டனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்திராபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12, 14, 16 வயதுடைய மூன்று சகோதரிகள் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர்.

    இவர்கள் நீண்ட காலமாகத் தங்களை ஒரு அறைக்குள் தனிமைப்படுத்திக் கொண்டு, கொரிய மொழி கற்பது, கொரிய உணவுகளை உண்பது மற்றும் 24 மணிநேரமும் கொரிய இசை மற்றும் நாடகங்களை மட்டுமே பார்த்து வந்துள்ளனர்.

    இவர்களின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு பெற்றோர் கண்டித்துள்ளனர். அவர்களின் மொபைல் போன்களை புரிந்துள்ளனர். இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மூவரும் தங்கள் குடியிருப்பின் 9 வது மாடியில் உள்ள வீட்டில் தங்கள் அறையில் உள்ள ஜன்னல் வழியே   குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

    டைரியில் கண்டெடுக்கப்பட்ட அவர்களின் தற்கொலைக் கடிதத்தில் "நாங்கள் சாகப்போவதில்லை; இந்த உடல் ரீதியான உலகத்தை விட்டு வெளியேறி, எங்களின் உண்மையான தேசமான தென்கொரியாவிற்குச் செல்கிறோம். இந்தியாவின் வாழ்க்கை முறை, உணவு மற்றும் சமூகக் கட்டுக்கோப்புகள் எங்களுக்குப் பிடிக்கவில்லை.

    நாங்கள் கொரியர்களாகவே வாழ விரும்புகிறோம். எங்கள் ஆன்மா ஏற்கனவே கொரியாவில் தான் வசிக்கிறது; இந்த உடலையும் அங்கேயே கொண்டு சேர்க்கப் போகிறோம்.

    எங்களை கொரியாவிற்கு அனுப்ப நீங்கள் மறுத்துவிட்டீர்கள். எங்கள் போன்களைப் பறித்து எங்களைச் சிறை வைத்தீர்கள். இனி எங்களால் இங்கே வாழ முடியாது" என்று எழுதி மூவரும் கொரிய மொழியில் கையெழுத்திட்டுள்ளனர்.

    அவர்களின் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், அவர்கள் சில ஆன்லைன் கொரிய குழுக்களுடன் தொடர்பில் இருந்ததும், அங்கு தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் விதமான கருத்துகள் பகிரப்பட்டதும் தெரியவந்துள்ளது.

    நிஜ வாழ்க்கையின் கவலைகளில் இருந்து தப்பிக்க இணைய உலகையே உண்மையான வாழ்க்கையாகக் கருதும் இந்த போக்கு ஒரு தீவிரமான ஆன்லைன் அடிமைத்தனம் (Online Escapism) என்று மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

    • தென்கொரியா தொடர்ந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது.
    • கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    பியாங்க்யாங்:

    கொரிய தீபகற்ப பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு வடகொரியாவுக்கு ஐ.நா.சபை தடை விதித்துள்ளது.

    அதனை பொருட்படுத்தாமல் வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருகிறது. இதனால் தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றது.

    ஆனால் இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனினும் தென்கொரியா தொடர்ந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரியா நேற்று ஏவுகணை சோதனையை நடத்தியது. இது சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவு பாய்ந்து இலக்குகளை தாக்கியது. இதனை தொடர்ந்து அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    தென் கொரியாவில் குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவாகும் என்பதால், பலர் செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். #Koreapetparenting
    சியோல்:

    தென்கொரியாவில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிப்பதையே விரும்புகின்றனர். குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவு ஆகும் என்பதால், பலர் தங்கள் செல்லப்பிராணிகளையே குழந்தையாக நினைத்து வளர்க்கத் தொடங்கி உள்ளனர்.

    தென் கொரியாவின் சியோல் நகரில், காங் சுங் லி என்பவர் மனைவியுடன் வசித்து வருகின்றார். இவர் தனது தாயை காண செல்லும்போதும், பணி நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்லும் போதும் செல்லப்பிராணியான சன்சூ எனும் பொமேரியன் வகை நாயுடன் பயணம் செய்வது வழக்கம். மேலும் சந்திர புத்தாண்டு விடுமுறை நாளில் சின்சூவிற்கு 50 டாலர் மதிப்புடைய ஆடை அணிவிக்க போவதாகவும் கூறியுள்ளார்.

    இது குறித்து மேலும் கூறுகையில்,  ‘‘குழந்தை வளர்ப்பு பொருளாதார ரீதியாக பெரும் சுமையானது மற்றும் மன அழுத்தம் நிறைந்தது என்பதை புரிந்துக் கொண்டோம். இதனால் செல்லப்பிராணிகளிடம் அன்பை வெளிப்படுத்தினோம். சன்சூவை குழந்தையாகவே பாவித்து வளர்த்து வருகின்றோம். சன்சூவிற்கு மாதம் 90 டாலர் செலவிடுவது அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களைப்போன்று பல தம்பதிகள் செல்லப் பிராணிகளை வளர்க்க விரும்புகின்றனர்” என்றார்.

    39 வயதான இவர் செல்லப் பிராணிகளுக்கான சேவை மையம் ஒன்றையும் நிறுவி வருவது குறிப்பிடத்தக்கது.

    தென் கொரியாவில் செல்லப்பிராணிகள் தொழில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு வளர்ச்சியடைந்துள்ளது. அதேசமயம் தென் கொரியாவின் பிறப்பு வீதம் 1.05 எனும் அளவுக்கு குறைந்து, உலகிலேயே மிகக் குறைவான பிறப்பு வீதமாக உள்ளது. கல்விக்கான கட்டண உயர்வு , வீட்டு வாடகை உயர்வு மற்றும் அதிக வேலை நாட்கள் என பல காரணங்களால் பிறப்பு வீதம் குறைந்ததாக கூறப்படுகிறது. #Koreapetparenting

    ×