என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச நாய்கள் கண்காட்சி"

    • தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன.
    • அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர்மேன், லேப்ராடர், சிப்பிபாறை, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 365 நாய்கள் இதில் பங்கேற்றன.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன. இந்த நாய்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக நாய்களின் மோப்பதிறன், பராமரிப்பு முறை, உரிமையாளர்களின் கட்டளைக்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த போட்டியில் நாய்களின் சாகச திறமைகளை சுற்றுலா பயணிகள் கண்டு வியப்படைந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வளர்த்த இங்கிலீஸ் ஷட்டர் வகை நாய் தட்டிச்சென்றது. அந்த நாயுடன் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • ஒரே இடத்தில் பல வகையான கண்ணை கவரும் நாய்களையும், அவைகள் துருதுருவென போட்டியில் கலந்து கொண்டதையும் பார்த்து பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர்.
    • இந்த போட்டியில் பெரிய அளவில் முடி இல்லாத சில நாய்கள் கலந்து கொண்டன. இந்த நாயை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    மேட்ரிட்:

    ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் நகரில் சர்வதேச நாய்கள் கண்காட்சி கோலாகலமாக நடந்தது. இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விதவிதமான நாய்கள் கலந்து கொண்டன. பிரபலமான டெக்கெல்ஸ் இன நாய்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட நாய்கள் சுறுசுறுப்பாக பங்கேற்று அசத்தியது.

    அழகிய நாய்கள், எஜமானர்களுக்கு கட்டுப்படும் நாய்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

    ஒரே இடத்தில் பல வகையான கண்ணை கவரும் நாய்களையும், அவைகள் துருதுருவென போட்டியில் கலந்து கொண்டதையும் பார்த்து பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர்.

    இந்த போட்டியில் பெரிய அளவில் முடி இல்லாத சில நாய்கள் கலந்து கொண்டன. இந்த நாயை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    போட்டியில் பங்கேற்று அசத்திய நாய்களுக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டு பரிசு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. சுமார் 15 ஆயிரம் நாய்கள் பங்கேற்றன. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி நடத்தப்பட்டது.

    ×