என் மலர்
நீங்கள் தேடியது "வளர்ப்பு நாய்"
- தொடர்மழை மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, உரிமம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
- உரிமையாளர்களின் வசதிக்காக, மைக்ரோசிப் பொருத்துதல், தடுப்பூசி செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி, செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறும் காலக்கெடுவை டிசம்பர் 14, 2025 வரை நீட்டித்துள்ளது. செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கான காலக்கெடு முதலில் நவம்பர் 23, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் டிசம்பர் 7, 2025 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது, பெய்து வரும் தொடர் மழை மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, உரிமம் பெறுவதற்கான காலக்கெடு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்திலும் மைக்ரோசிப் பொருத்துதல், வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வாரத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் இதனைப் பயன்படுத்தி 14.12.2025க்குள் தங்களின் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை கட்டாயம் பெற்றுக் கொண்டு அபராதம் செலுத்துவதைத் தவிர்த்திடுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் இது நாள் வரை 91,711 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 45,916 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது.
- வனராஜ் மஞ்சாரியா தனது வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தார்.
நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து ரேபிஸ் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் வளர்ப்பு நாயின் நகம் கீறியதால் காவல் ஆய்வாளர் ஒருவர் ரேபிஸ் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது. ஆனால் நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்ததுடன், வெறும் நகக் கீறல்தானே என்று அவர் அலட்சியமாக இருந்துள்ளார். இதன் காரணமாக ரேபிஸ் நோய் பாதித்து அவர் உயிரிழந்துள்ளார்.
- பத்திரிகையாளர் ஒருவரின் வீட்டில் மர்மநபர்கள் வெடிப்பொருள் வீசியுள்ளனர்.
- நாயின் இந்த செயலால் பத்திரிகையாளரின் குடும்பத்தினர் உயிர் பிழைத்தனர்.
பெரு நாட்டில் வளர்ப்பு நாய் வெடிப்பொருளை வாயிலேயே கடித்து அணைத்ததால் குடும்பமே உயிர் தப்பிய நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பத்திரிகையாளர் ஒருவரின் வீட்டில் மர்மநபர்கள் வெடிப்பொருள் வீசியுள்ளனர். இதனை பார்த்த உரிமையாளரின் வளர்ப்பு நாய், தனது உயிரை பணயம் வைத்து வெடிப்பொருளை வாயிலேயே கடித்து அணைத்தது.
நாயின் இந்த செயலால் பத்திரிகையாளரின் குடும்பத்தினர் உயிர் பிழைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன.
- அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர்மேன், லேப்ராடர், சிப்பிபாறை, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 365 நாய்கள் இதில் பங்கேற்றன.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன. இந்த நாய்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக நாய்களின் மோப்பதிறன், பராமரிப்பு முறை, உரிமையாளர்களின் கட்டளைக்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் நாய்களின் சாகச திறமைகளை சுற்றுலா பயணிகள் கண்டு வியப்படைந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வளர்த்த இங்கிலீஸ் ஷட்டர் வகை நாய் தட்டிச்சென்றது. அந்த நாயுடன் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- பொதுமக்களுக்கு அச்சம் மூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்கக்கூடாது.
- வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்படும்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருகின்றன.
செல்லப்பிராணிகளின் உரிமையார்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் முகமூ இன்றி திரியவிட்டாயோ / அழைத்து சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவ்வாறான நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கு அச்சம் மூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்கக்கூடாது. மேலும் பொது இடங்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு செல்லப்பிராணியை மட்டுமே அதன் உரிமையாளர்கள் எடுத்து செல்ல வேண்டும்.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவாறு அந்த செல்லப் பிராணியை அழைத்து செல்லும் பொழுது மற்றவர்கள் பாதுகாப்பை கருதி அதன் வாயை மூடியிருக்க (Muzzle) செய்தும், கட்டாயம் கழுத்துப்பட்டையுடன் சங்கிலியால் கட்டி வைத்திருக்கவும் வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் உரிமம் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்படும்.
விலங்குகளின் நடவடிக்கைகள் நன்கு அறிமுகமான மனிதர்கள் மற்றும் அதன் இருப்பிட சூழ்நிலையில் இயல்பு நிலையிலும் மற்ற இடங்களில் மாறுபட்டும் இருக்கக் கூடும். இதனை உரிமையாளர்கள் உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வுடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இவற்றை வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
பொது இடங்கள், அடுக்கக குடியிருப்புகளின் மின்தூக்கிகள் (Lift) ஆகியவற்றில் மிகுந்த பாதுகாப்போடும் மற்றவர்களுக்கு அச்சுமூட்டும் வகையிலோ (அ) அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலோ நாய்களின் நடவடிக்கைகள் இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பாகும்.
இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி (Guidelines with respect to Pet Street Dogs and their care givers and for Residents Welfare Associations and Apartment Owners Associations இந்த விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.
இதனை மீறி உரிமம் பெறாமல் ஆபத்து ஏற்படும் வகையில் வெறித்தன்மை, பதற்றம் மற்றும் துரத்தி கடிக்கும் தன்மையுள்ள நாய்களை அந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள், அவற்றை பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திறந்துவிட்டால் அவ்வாறான நாய்கள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படியும், பொதுமக்களின் உடல் / மன அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளர்களின் மீது உரிய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளின்படியும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எம்.எஸ்.தோனி செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
- எம்.எஸ்.தோனி தனது வீட்டில் நாய்களை வளர்த்து வருகிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.
எம்.எஸ்.தோனி செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் தனது வீட்டில் நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில், வளர்ப்பு நாய்களுடன் எம்.எஸ்.தோனி கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை அவரது மனைவி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
- நாயின் உரிமையாளர் ஷோபா ராணி புகார் அளித்தார்.
- நாய் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது
உத்தரப் பிரதேசத்தில் தனது மகனை பார்த்து குரைத்ததற்காக நாயை காரில் 3 கி.மீ தூரம் இழுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்
நாயின் உரிமையாளர் ஷோபா ராணி அளித்த புகாரின்படி, இந்த சம்பவம் புதன்கிழமை கிரேட்டர் நொய்டாவில் உள்ள நை பஸ்தி பகுதியில் நடந்தது. அமித் என்பவரின் 10 வயது மகன், அந்த வழியாகச் செல்லும்போது தனது செல்லப்பிராணி மீது கல்லை எறிந்தார்.
சிறுவனை நோக்கி நாய் குரைத்ததால் அவன் விழுந்தான். இதைத் தொடர்ந்து, அமித் 4 வயது நாயை குச்சிகளால் அடித்து, தனது காரில் கட்டி 3 கி.மீ தூரம் இழுத்துச் சென்றதாக ராணி குற்றம் சாட்டினார்.
நாய் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது என்று ராணியின் கணவர் போலீசாரிடம் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில், அமித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், நாய் தனது மகனைக் கடித்ததாகக் கூறி அமித் கூறியதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.
- 1914-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஆட்சி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
- சமாதியில் பிரந்தா எ டியர் டாக் 26 நவம்பர் 1914 என்ற தேதியையும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்துள்ளனர்.
செஞ்சி:
செஞ்சியில் பிரெஞ்சுகாரர்கள் வளர்ப்பு நாய்க்கு நினைவிடம் கட்டி வைத்துள்ளனர்.
1914-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஆட்சி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அப்போது அவர்கள் தங்குவதற்காக செஞ்சி-திண்டிவனம் சாலையில் சங்கரபரணி ஆற்றின் அருகே தாழ்வாரம் உள்ள ஒரு அடுக்கு கொண்ட வீட்டினை செங்கற்களால் மிக அழகாக கட்டியுள்ளனர்.
பிரெஞ்சுக்காரர்கள் தங்களுடைய பாதுகாப்பு கருதியும் கவுரவமான வாழ்க்கை நடத்துவதில் ஆசை கொண்ட இவர்கள் மிகச் செல்லமாக வளர்த்து வந்த பிரந்தா என்ற பெயரிட்டுள்ள நாய் இறந்து விட்டதை இந்த பங்களாவுக்கு அருகிலேயே புதைத்து அதற்கு சமாதியும் அமைத்துள்ளனர்.
அவர்கள் வசித்த வீடு 110 வருடங்களுக்குப் பிறகும் இதுவரை நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு அந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை பங்களாவாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் அருகில் உள்ள நாய்க்கு கட்டப்பட்ட சமாதியும் இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.
சமாதியில் பிரந்தா எ டியர் டாக் 26 நவம்பர் 1914 என்ற தேதியையும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்துள்ளனர். இது பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. நூறாண்டுகளைக் கடந்த பங்களாவும் தற்போது பழமை மாறாமல் நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் வந்தால் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஆனால் அவரது நாய்க்குத் தேவையான ஆவணங்கள் அவரிடம் இல்லை
- கழிப்பறையில் மூழ்கடித்து கொன்று, அதன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளார்.
அமெரிக்காவில் 57 வயது பெண் ஒருவர் தனது நாயை விமானத்தில் ஏற்றிச் செல்ல அனுமதிக்காததால், அதை விமான நிலைய கழிப்பறையில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தி இன்டிபென்டன்ட் செய்தியின்படி, இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது. அங்கு துப்புரவு ஊழியர்கள் பணியின்போது கழிப்பறையில் ஒரு இறந்த நாயினைக் கண்டனர்.
விசாரணையில், அலிசன் அகதா லாரன்ஸ் என்ற அந்த 57 வயது பெண் தனது வளர்ப்பு நாயுடன் விமானத்தில் பயணிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அவரது நாய்க்குத் தேவையான ஆவணங்கள் அவரிடம் இல்லை. மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக, அவர் தனது நாயை விமான நிலைய கழிப்பறையில் மூழ்கடித்து கொன்று, அதன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளார்.
சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அதிகாரிகள் கைது வாரண்டைப் பிறப்பித்தனர். சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 18 அன்று, விலங்குகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் லாரன்ஸ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் 5,000 டாலர் செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார். சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கண்டனங்களை குவித்து வருகிறது.
- ஹாசன் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- பண்ணை வீட்டில் உள்ள கோழிப்பண்ணையில் 12 அடி நீள ராஜநாகம் நுழைந்துள்ளது.
கர்நாடகாவில் கோழிப்பண்ணைக்குள் நுழைந்த ராஜ நாகத்துடன் பிட் புல் வகை வளர்ப்பு நாய் 'பீமா' போராடி சண்டையிட்டு, தனது உயிரை கொடுத்து உரிமையாளரின் குடும்பத்தினரை காப்பாற்றியுள்ளது.
ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஷமந்த் கவுடா என்பவரின் பண்ணை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பண்ணை வீட்டில் உள்ள கோழிப்பண்ணையில் 12 அடி நீள ராஜநாகம் நுழைந்துள்ளது. அந்த இடத்தில் ஷமந்த் கவுடாவின் குழந்தை விளையாடி வந்துள்ளது. ராஜ நகத்தை கவனித்த வளர்ப்பு நாய் 'பீமா' ராஜநாகத்துடன் சுமார் 40 நிமிடங்கள் சண்டையிட்டு 10 துண்டுகளாக குதறி கொன்றது. இந்த சண்டையில் விஷம் ஏறி 'பீமா' உயிரிழந்தது.
வளர்ப்பு நாய் 'பீமா' குறித்து பேசிய அதன் உரிமையாளர், "பாம்புகளுடன் சண்டையிடுவது பீமாவுக்குப் புதிதல்ல. இந்த தோட்டத்தில் புகுந்த சுமார் 15 விஷ பாம்புகளை பீமா கொன்றுள்ளது" என்று தெரிவித்தார்.
- செல்லப் பிராணி சே சீ முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினார்.
- அலங்காரம் செய்து நாய் சேசீயை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளர்கள் நலுங்கு வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓலையாம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் - மாரியம்மாள்.
இவர்களது மகன் ஹரிஹரன். பட்டதாரி வாலிபரான ஹரிஹரன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் நாய்க்குட்டியை ஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்து வளர்த்துள்ளார்.
மகனின் ஆர்வத்தைக் கண்ட அவரது பெற்றோரும் நாய்க்கு பால், பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி மகனுடன் சேர்ந்து பாசமாக நாய்க்குட்டியை தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக வளர்த்து வந்தனர்.
அந்த நாய்க்கு சே சீ என பெயரிட்டு தங்கள் குடும்ப உறுப்பினராகவே அவற்றை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் தாங்கள் வளர்த்து வரும் செல்லப் பிராணி சே சீ முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினார்.
முதலில் தயங்கி அவரது பெற்றோர் பின்னர் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வரும் செல்ல பிராணி சே சீக்கு சீமந்தம் செய்ய முன்வந்தனர்.
அதன்படி நல்ல நாள் பார்த்து நேற்று சே சீக்கு சீமந்தம் செய்தனர். முன்னதாக ஆப்பிள் உட்பட பழ வகைகள் இனிப்புகளை சீர் வரிசை தட்டுகளாக வைத்தனர். ஒரு சிலரை மட்டும் சீமந்தத்திற்கு அழைத்தனர்.
பின்னர் சே சீக்கு அலங்காரம் செய்து நாய் சேசீயை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளர்கள் நலுங்கு வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.
இதனை வீடியோவாக எடுத்து தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாயை வெளியில் கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டனர்.
- நாயை வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபுகுமார்(வயது39). தொழில் அதிபர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு கடன் பெற்றார்.
வாங்கிய வீட்டுக்கடனை குறித்த காலத்தில் செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் அவரது வீடு ஏலத்துக்கு வந்தது.
அப்போது வங்கி அதிகாரிகளிடம் வீட்டினை தானே வாங்கி கொள்வதாக பாபுகுமார் கூறியிருந்தார். ஆனால் அதனை வங்கி அதிகாரிகள் ஏற்காமல் ஏலத்தில் விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாபுகுமார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பாபு குமாரின் வீட்டுக்கு நேற்று வங்கி அதிகாரிகள் போலீசாருடன் வந்தனர்.
பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு, திடீரென வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது.
அப்போது தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாயை வெளியில் கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து பாபுகுமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பின்னர் வீட்டில் இருந்த நாயை மட்டும் 3 மணி நேரத்திற்கு பிறகு வெளியில் கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
நாயை வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






