search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "infection"

  • இந்தியாவில் நிலைமை ஆபத்து ஏற்படும் வகையில் இல்லை என அறிவிப்பு.
  • சுகாதாரத் துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிறுத்தியுள்ளது.

  சீனாவில் சில வாரங்களாக குழந்தைகள் இடையே சுவாச பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால் மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஞாயிற்று கிழமை அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியது.

  அதில், இந்தியாவில் நிலைமை ஆபத்து ஏற்படும் வகையில் இல்லை என்றும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

  இந்நிலையில், இந்தியாவிலும் பல்வேறு காரணங்களால் சுவாச கோளாறுகள் அதிகரித்து வருவதால், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், உத்தரகாண்ட், அரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகள், சுவாசக் கோளாறு பாதிப்பால் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  மேலும், பருவகால காய்ச்சல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், பருவகால காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகளை பட்டியலிட்டு, ஆலோசனையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  அதில், இருமல் அல்லது தும்மலின்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பது மற்றும் நெரிசலான இடங்களில் முகமூடிகளைப் பயன்படுத்துவது ஆகியவை அடங்கும்.

  • சிலருக்கு மரபியல் ரீதியாகவும் இந்த பழக்கம் ஏற்படக்கூடும்.
  • அத்தகைய நடத்தைக்கான அடிப்படை காரணங்களைக் கண்டறியுங்கள்.

  தங்களுடைய குழந்தைகள் அடிக்கடி நகம் கடித்திறார்கள் என்று பல பெற்றோர்கள் வருத்தப்படுவார்கள். 30 முதல் 60 சதவிகிதம் குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. புதியவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம், சலிப்பு, மன அழுத்தம், மற்றவரைப் பார்த்து தானும் செய்வது போன்ற காரணங்களால், குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டாகலாம் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். சிலருக்கு மரபியல் ரீதியாகவும் இந்த பழக்கம் ஏற்படக்கூடும்.

  நாளடைவில் பெரும்பாலான குழந்தைகளிடம் இந்த பழக்கம் மறைந்துவிடும். ஆனால் சிலருக்கு பெரியவர்கள் ஆனாலும் இது தொடர்கதையாகவே நீடிக்கும். அந்த வகையில் குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கத்தை தடுப்பது பற்றிய சில விஷயங்கள்.

  குழந்தைகளிடம் இருந்து ஒரு பழக்கத்தை நிறுத்துவதற்கு முயற்சி செய்வதற்கு முன்பு அவர்களின் அத்தகைய நடத்தைக்கான அடிப்படை காரணங்களைக் கண்டறியுங்கள். வளரும்போது பல குழந்தைகளுக்கு சூழ்நிலை காரணாமாக பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது ஆனால் பெற்றோரால் இதை உணர முடிவது இல்லை.

  பெற்றோருக்கு இடையே நடக்கும் சண்டை, புதிய வகுப்பு சூழ்நிலை, தேர்வு பதற்றம் ஆகியவை கூட அவர்களுக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே காரணத்தை முதலில் தெரிந்து கொண்டு அதற்கான தீர்வை கண்டறியுங்கள். உங்கள் குழந்தைக்கு `நகம் கடிப்பது தவறான பழக்கம்' என்பதை சுட்டிக்காட்டி புரிய வையுங்கள். நகம் கடிப்பதால் ஏற்படும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி அவர்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

  கைகளை பல இடங்களில் தொட்டு விட்டு, வாயில் வைத்து கடித்தால் கிருமித்தொற்று ஏற்படும் என்பதை விளக்குங்கள். ஒவ்வொரு முறை குழந்தைகள் நகத்தை கடிக்கும் போதும் அவர்களை சுதாரிப்படையச் செய்யுங்கள். இதன் மூலம் காலப்போக்கில் நகம் கடிக்கும் பழக்கம் மறைந்துவிடும்.

  குழந்தைகளின் ஓய்வு நேரத்தில் அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட அனுமதியுங்கள். இதன் மூலம் சலிப்பு காரணமாக அவர்களுக்கு நகம் கடிக்க வேண்டும் என்ற எண்ணம் வராது. நகம் கடிக்கும் பழக்கத்தை குறைத்தால், அதை ஊக்குவிக்கும் வகையில் சிறு சிறு பரிசுகள் கொடுத்து பாராட்டுங்கள்.

  நகம் கடிக்கும் குழந்தைகளை அன்பால் மட்டுமே திருத்த முயற்சிக்க வேண்டும். கண்டிப்பு காட்டுவது, அவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை உண்டாக்கி நகம் கடிக்கும் பழக்கத்தை தீவிரப்படுத்தும்.

  குழந்தையின் நகம் கடிக்கும் பழக்கம். அதிகமானாலோ, அதனால் விரல்களில் காயங்கள் ஏற்பட்டாலோ, குழந்தையின் நகம் சீரற்று இருந்தாலோ, உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச்செல்லது நல்லது.

  • 'மெட்ராட்ஸ் ஐ' நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிறது.
  • கண்களின் வெள்ளை படலம் சிவப்பு மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் மாறி விடும்.

  கண்வெண்படல அழற்சி என்ற 'மெட்ராட்ஸ் ஐ'  நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. மெட்ராஸ் ஐ' பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் எரிச்சல், நீர்வடிதல் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக கண்களின் வெள்ளை படலம் சிவப்பு மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் மாறி விடுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கின்றனர். நாளுக்கு நாள் கண்நோய் சிகிச்சை பிரிவுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

  தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கண் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளனர்.

  இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி கண் சிகிச்சை பிரிவு டாக்டர் ஒருவர் கூறுகையில், `மெட்ராட்ஸ் ஐ' வைரஸ் கிருமியால் பரவி வருகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும். அதாவது, பாதிக்கப்பட்டவரின் கண்ணை பார்த்தால் மட்டும் பரவாது. அவர்கள் கண்களில் இருந்து வெளிவரும் கண்ணீரில் உள்ள வைரஸ் மூலம் மற்றவர்களுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தும். வீட்டில் ஒருவருக்கு வந்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவும் தன்மை கொண்டது.

  இந்த நோயில் இருந்து தப்பிக்க கண் மற்றும் கைகளை சுத்தமாக வைத்துத் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகளை, பொருட்களை பயன்படுத்தக்கூடாது. குழந்தைகளுக்கு பாதிக்கப்பட்டால் அவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.

  `மெட்ராஸ் ஐ' பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெறலாம். 2 நாட்கள் சிகிச்சை பெற்றால் போதும் பூரண குணம் அடைய முடியும்' என்றார்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • மேக்கப் பிரஷ்சை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.
  • பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் அதில் பெருகி சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

  அழகை மேம்படுத்திக்காட்டுவதற்கு பெரும்பாலான பெண்கள் மேக்கப் செய்துகொள்கிறார்கள். அதற்காக அவர்கள் தினமும் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களை உபயோகப்படுத்திய பிறகு முறையாக பராமரிப்பதில் தான் சருமத்தின் ஆரோக்கியமும் அடங்கி உள்ளது. குறிப்பாக அடிக்கடி பயன்படுத்தும் மேக்கப் பிரஷ்சை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் அதில் பெருகி சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேக்கப் பிரஷ்சை பராமரிக்கும் சில வழிகள்.

  அடிக்கடி கழுவுதல்:

  ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது அவற்றை தண்ணீரில் கழுவ வேண்டும். அதிக அளவு கிரீம் மற்றும் திரவப் பொருட்களை உபயோகிக்கும் போது ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் மேக்கப் பிரஷ்களை நன்றாக துடைத்து வைக்க வேண்டும். முகத்திற்கு நேரடியாக பயன்படுத்தும் மேக்கப் பிரஷ்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.

  உங்களுக்கென பிரத்தியேகமாக மேக்கப் பிரஷ்களை வைத்திருப்பது சிறந்தது. சருமத்தின் தன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சில அழகுசாதனப் பொருட்கள், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதுபோன்ற சமயங்களில், மற்றவர் பயன்படுத்திய மேக்கப் பிரஷ்சை மீண்டும் உங்கள் சருமத்தில் பயன்படுத்தும்போது நோய்த்தொற்று ஏற்படக்கூடும்.

  சுத்தம் செய்யும் முறை:

  மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்வதற்கென பிரத்தியேகமாக பிரஷ் கிளீனர்கள் உள்ளன. இவை பிரஷ்களில் உள்ள அழுக்குகளையும், பிசுபிசுப்புத் தன்மையையும் முழுமையாக நீக்கும். இதுதவிர, மென்மையான சோப்பு கொண்டு மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்யலாம். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பு அல்லது ஷாம்பு கொண்டு இவற்றை சுத்தம் செய்வது நல்லது. மேக்கப் பிரஷ்சின் ஒவ்வொரு இழையையும் சுத்தம் செய்யும் வகையில், பிரஷ் மேட் கடைகளில் கிடைக்கிறது. இது பிரஷ்சில் படித்துள்ள கிரீம் மற்றும் பிசுக்குகளை முழுமையாக நீக்கும்.

  உலர்த்தும் முறை:

  மேக்கப் பிரஷ்களை கழுவிய பிறகு அவற்றை ஒரு பருத்தி துண்டில் அல்லது டிரேவில் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கி சுத்தமான, உலர்ந்த இடத்தில் வைத்து உலர்த்த வேண்டும். மேக்கப் பிரஷ்களை அடுக்கி வைக்கும் ஹோல்டர்களும் சுத்தமாக இருக்க வேண்டும்.

  மேக்கப் பிரஷ்களை தேர்தெடுத்தல்:

  கிரீம், பவுண்டேஷன், பவுடர் ஆகியவற்றை முகம் முழுவதும் பூசுவதற்கு ஏற்ற வகையில் மேக்கப் பிரஷ்சில் உள்ள இழைகள் மிதமான அடர்த்தியோடு மென்மையாக இருக்க வேண்டும். மேக்கப் பிரஷ்களின் இழைகள் இயற்கையாக கிடைக்கும் ரோமங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவையாக இருப்பது நல்லது. இவை மென்மையாகவும், முகத்திற்கு பயன்படுத்த ஏற்ற வகையிலும் இருக்கும்.

  • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
  • தொற்று பரவாமல் இருக்க அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

  திருத்துறைப்பூண்டி:

  திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராம ஊராட்சி மேலத்தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த வீராச்சாமி (வயது 53), தெய்வானை (46), பூமிநாதன் (39)ஆகியோருக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

  இதுகுறித்து, தகவலறிந்த ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

  மேலும், தொற்று பரவாமல் இருக்க அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

  தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு, நலக்கல்வியும் பயிற்றுவிக்கப்பட்டது.

  • சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது.
  • நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

  சேலம்:

  சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்

  பட்டுள்ளது. அதே சமயத்தில் நேற்று 35 பேர் குணமடைந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டனர்.

  மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ள வர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் மருத்துவமனை களிலும், மற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

  • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • சேலத்தில் கொரனாவுக்கு முதியவர் பலியானார்.

  சேலம்:

  சேலத்தில் கொரனாவுக்கு முதியவர் பலியானார்.

  கொரோ பாதிப்பு

  நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவ டிக்கை எடுத்து வருகிறது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவமனை களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை நேற்று முன்தினம் வரை 221 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

  ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 29 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 226 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கொரோனாவுக்கு 1764 பேர் இறந்தனர். கடந்த ஒரு ஆண்டாக உயிரிழப்பு இல்லை.

  முதியவர் பலி

  இந்த சூழலில் இன்று கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ஜாகிர் ரெட்டி பட்டியைச் சேர்ந்த 65 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சுகாதார துறையினர் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  முதியவர் வசித்து வந்த பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும் அவருடன் இருந்தவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு முதியவர் பலியானது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

  • கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் இதே நிலை நீடித்து வருகின்றது.
  • சோதனை செய்தபோது கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது.

  கடலூர்::

  இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் இதே நிலை நீடித்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 நபருக்கு கொ ரோனா ஏற்பட்டு சிகிச்சை பெற்று வர இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் வாலிபர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக சேர்ந்தார். 

  அப்போது அவரை சோதனை செய்தபோது கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த வாலி பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தன. ஆனால் இன்று அதிகாலை வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு மருத்துவமனை களிலும் தனியார் மருத்துவ மனைகள் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டம் முழு வதும் தீவிர கண்காணிப்பு பணியிலும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனா அறிகுறி யுடன் அனுமதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதிலும் இறந்த வாலிபர் கொரோனா தொற்று காரணமாக இறந்தாரா? என்பது குறித்து டாக்டர்கள் உரிய பரிசோ தனைக்கு அனுப்பி உள்ள னர். இது மட்டுமின்றி இறந்த வாலிபர் வசித்து வந்த பகுதிகளில் உள்ள பொது மக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.


  • கொரானா சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு
  • 330 ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 320 மருத்துவர்கள், 230 செவிலியர்கள் என சுமார், 500க்கும் மேற்பட்டோர் தயார்

  திருச்சி,

  அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனையில், கொரானா சிறப்பு சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழு கர்ப்பிணி பெண்கள் உட்பட 9 பேர் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும், கொரோனாவை தடுப்பதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரானா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.கி.ஆ.பெ., விசுவநாதம் மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு தலைமையில் செயல்படும் கொரானா சிறப்பு சிகிச்சை மையத்தில் தற்போது, 42 படுக்கைகள் உள்ளன.மொத்தம், 330 ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 320 மருத்துவர்கள், 230 செவிலியர்கள் என சுமார், 500க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர்.தற்போது, திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும், 300க்கும் அதிகமானோர் கொரானா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.தற்போது இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்டிபிசிஆர் சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.போதுமான மருந்துகளும் கையிருப்பு உள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்றை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை. அதை எதிர்கொள்ள, திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது' என்று மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.இந்த நிலையில் திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதி. 'அனைவரும் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக' டீன் நேரு கூறியுள்ளார்.

  • சுகாதாரத்துறையும் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  • கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இன்னும் வரவில்லை.

  புதுச்சேரி:

  புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிதத்து வருகிறது.

  இதனையடுத்து சுகாதாரத்துறையும் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை எடுத்துள்ளது. புதுவை மாநிலத்தில் 827 கொரோனா பரிசோ தனைகள் செய்யப்பட்டன.

  இதில் புதுவையில் 55 பேர், காரைக்காலில் 23 பேர், ஏனாமில் 2 பேர், மாகியில் 2 பேர் என மொத்தம் 82 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் புதுவையில் 7 பேர், காரைக்காலில் 2 பேர் என மொத்தம் 9 பேர் மருத்துவமனையிலும், 262 பேர் வீட்டு தனிமையிலும் என மொத்தம் 271 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

  இன்று 15 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. தற்போது ஜிப்மரில் ஒருவரும், கோரிமேடு மார்பக மருத்துவமனையில் 2 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 6 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

  இத்தகவல்களை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.புதுவையில் கடந்த சில தினங்களாக கொரோனா படிப்படியா அதிகரித்து வருகிறது. இது புதுவை மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

  இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இன்னும் வரவில்லை. முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் நேற்று பொது இடங்களில் திரிந்த பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியவில்லை.

  ஒரு சதவீதத்துக்கும் முறை வானவர்கள் மட்டுமே முகக் கவசம் அணிந்திருந்தனர். அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளும் முகக் கவசம் அணியாமலேயே புதுவையை வலம் வந்தனர்.