என் மலர்
நீங்கள் தேடியது "கொரோனா"
- 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்தது.
- தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக கடந்த 2 வாரங்களாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த வைரஸ் அதிக வீரியம் இல்லாதது என்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு தகவல் இன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் மத்தியில் எப்படி உள்ளது? என்பது தொடர்பாக இதுவரை 5 கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 2020 அக்டோபர் மாதம் முதல் கட்ட ஆய்வு நடந்த போது தமிழக மக்களில் 32 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த 2-ம் கட்ட ஆய்வில் 29 சதவீதம் பேருக்கும், மே மாதம் நடந்த ஆய்வில் 70 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதியானது. 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்தது.
தற்போது (2025) கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழக மக்களில் 97 சதவீதம் பேருக்கு கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பொது சுகாதாரம் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.
- பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர்:
உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
வேடசந்தூர் ரெங்கநாதபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 32 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நிமித்தமாக பெங்களூர் சென்று சொந்த ஊருக்கு வந்தார்.
தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடையாததால் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை வேடசந்தூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் லோகநாதன் உறுதி செய்தார்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வலையுடன் கூடிய 8 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இங்கு கொரோனா தொற்றுடையவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வார்டில் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
- முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கு சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
பொதுக்குழு கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டம் அலைமோத வாய்ப்புள்ளது.
இந்நிலையில், மதுரையில் நாளை நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டத்திற்கு வரும் 50 வயது கடந்த மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணியவும், முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது கொரோனா குறித்து அச்சம் தேவையில்லை எனவும் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
- மாணவர்களுக்கு அறிகுறி இருந்தால் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் நேற்று மாலை வரை 234 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 1 முதல் மற்ற இணை நோய்கள் இருந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்க உள்ளன. இந்த நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்படி பொருத்தமான சிகிச்சை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும். உடல்நிலை சரியான பின்னர்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
குழந்தைகள் பள்ளிகளுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறியுடன் வந்தால், அவர்களுக்கு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து, வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால், பொருத்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை வழங்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு கர்நாடக மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 26ஆம் தேதி கொரோனா தொற்று தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையாக ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளிகளுக்கு அறிவுறுத்த முடிவு எடுக்கப்பட்டது.
- கொரோனா 2ஆவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது.
- மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆவது அலை உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அரசு டாக்டர் நோயாளியை கொன்றுவிடுங்கள் எனக்கூறும் வகையில் வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியது. முதற்கட்ட அலை தாக்குதலை தாக்குப்பிடித்த நிலையில், 2021-ல் மீண்டும் 2ஆவது அலை உருவானது. அப்போது மக்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். இதனால் உயிர் பிழைப்பதற்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சிகிச்சைக்காக படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு டாக்டர் ஒருவர் சக டாக்டரிடம், யாரையும் மருத்துவமனைக்குள் அனுமதிக்காதீர்கள். சிகிச்சை வந்துள்ள பெண்மணியை கொன்றுவிடுங்கள்" எனக் கூறுகிறார். ஆனால் சக டாக்டர், சமாளித்துக் கொண்டு, நோயாளிக்கு அளிக்கும் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டுள்ளது" என பதில் அளிக்கிறார்.
இது தொடர்பான ஆடியோ வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கிடையே சிகிச்சை பெற்ற பெண்ணின் கணவன், அரசு டாக்டர் மீது புகார் அளிக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த பெண் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துக் கொண்டார்.
போலீசார் ஆடியோ கிளப்பின் உண்மைத்தன்மையை கண்டறிந்து வருகின்றனர். அரசு டாக்டரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சக டாக்டருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
- மோகனின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் நீண்டநாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 60க்கும் மேற்பட்டோரா கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மறைமலை நகரை சேர்ந்த 60 வயதான மோகன் என்பவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
மேகன் என்வர் ஏற்கனவே பல்வேறு இணை நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
மோகனின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.
மேலும், இறந்த நபரின் மூலம் கொரோனா பரவாமல் தடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- டெல்லியில் மட்டும் 104 பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
- கோவிட் காரணமாக மகாராஷ்டிராவில் நான்கு இறப்புகள் பதிவாகி உள்ளன.
2020 முதல் உலகளவில் லட்சக்கணக்கான கணக்கான உயிர்களைக் கொன்ற கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த வாரத்தில் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
மத்திய கோவிட்-19 தகவல் அறிக்கையின்படி, நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இப்போது 1,009 ஐ எட்டியுள்ளது. டெல்லியில் மட்டும் 104 பாதிப்புகள் உள்ளன, அவற்றில் 99 வழக்குகள் கடந்த வாரத்தில் பதிவாகியுள்ளன.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, கேரளாவில் 430 பேரும், மகாராஷ்டிராவில் 209 பேரும், டெல்லியில் 104 பேரும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் 83, கர்நாடகாவில் 47, உத்தரப்பிரதேசத்தில் 15 மற்றும் மேற்கு வங்காளத்தில் 12 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
கோவிட் காரணமாக மகாராஷ்டிராவில் நான்கு இறப்புகளும், கேரளாவில் இரண்டு இறப்புகளும், கர்நாடகாவில் ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தானே நகராட்சி தெரிவித்துள்ளது.
- பெங்களூருவில் நேற்று ஒருவர் கொரோனா வைரஸால் இறந்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருமகிறது.
மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது கோவிட்-19 நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தானே நகராட்சி தெரிவித்துள்ளது.
மும்ப்ராவைச் சேர்ந்த அவர் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மே 22, 2025 அன்று தானேயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே பெங்களூருவில் நேற்று ஒருவர் கொரோனா வைரஸால் இறந்தார்.
- படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துக்கள் மற்றும் தடுப்பூசிகள் தயார்நிலையில் உள்ளன.
- அகமதாபாத்தில் 20 பேர், அரியானாவில் 5 பேருக்கு தோற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் 23 கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதனபடி அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் கூறுகையில், இதுவரை 23 கோவிட்-19 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் பயண விவரங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துக்கள் மற்றும் தடுப்பூசிகளை தயார்நிலையில் வைக்குமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அகமதாபாத்தில் 20 பேர், அரியானாவில் 5 பேருக்கு தோற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 312 ஐ எட்டியுள்ளது.
- அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
- கேரள மாநிலத்தில் 95 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
கொரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் நமது நாட்டில் கேரள மாநிலத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவியது.
இந்தநிலையில் தற்போது சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து அனைத்து நாடுகளிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. நமழ நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
இருந்தபோதிலும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அறிகுறியுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் 95 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களில் 27 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மற்ற 68 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களின் எண்ணிக்கையில் மராட்டிய மாநிலத்தை விட கேரளா மாநிலம் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மற்றொரு நோயாளியை இறக்கிவிட்டு, பந்தளம் செல்லும் வழியில் ஆம்புலன்ஸை ஆளில்லாத பகுதியில் நிறுத்தினார்
- கடந்த 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணை நடைபெற்றது.
கேரளாவில் 2020இல் கோவிட் தொற்று பாதித்த 19 வயது பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று சமயமான 2020 இல் செப்டம்பர் 5 ஆம் தேதி பத்தினம்திட்டா மாவட்டத்தின் அடூர் பொது மருத்துவமனையில் இருந்து பந்தளத்தில் உள்ள அர்ச்சனா மருத்துவமனை கோவிட் சிறப்பு வார்டுக்கு தொற்று பாதித்த 19 வயது பெண் ஆம்புலன்சில் மற்றொரு நோயாளியுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
மற்றொரு நோயாளியை பாதி வழியில் இறக்கிவிட்டுவிட்டு, பந்தளம் செல்லும் வழியில் ஆம்புலன்ஸை ஆளில்லாத பகுதியில் நிறுத்தி 19 வயது பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்தார். அதன்பின் அப்பெண்ணை கொண்டு சேர்க்கவேண்டிய பந்தளம் மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு ஆம்புலன்ஸ் டிரைவர் தப்பியோடினார்.

பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்ததை மருத்துவமனை ஊழியர்களிடமும் பெற்றோரிடமும் முறையிட்டார். இதைத்தொடர்ந்து வழங்கப்பட புகாரில், அடுத்த நாளே அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் நௌபல் (Noufal) கைது செய்யப்பட்டார்.
கடந்த 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த காலகட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று அவர் குற்றவாளி என உறுதி செய்து ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
- பாஜக நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பங்கேற்ற சிந்தியா பாதியில் வெளியேறினார்.
- காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
போபால்:
விமானப் போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாஜக முக்கிய நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த சிந்தியா, காய்ச்சல் காரணமாக பாதியிலேயே அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், தாம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் தமக்கு கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பில் இருந்து வந்த அனைவரும் அருகிலுள்ள சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் மந்திரி ஜோதிராதித்யா தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மத்திய பிரதேச பாஜக ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இன்று மாலை 4:30 மணி விமானத்தில் டெல்லிக்கு திரும்ப அவர் திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.






