என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மத்திய மந்திரி"
- பகவதி அம்மனின் ஒற்றைக்கால் பாதத்தை பார்த்து வணங்கினார்.
- மத்திய மந்திரி விவேகானந்தர் பாறையில் இருந்தவாரே திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டார்.
கன்னியாகுமரி :
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி பிரதீமா பவுமிக் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் நேற்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி வந்தார். அவர் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுமூலம் சென்றார். அங்கு வந்த அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி.தாணு, மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள ஸ்ரீபாத மண்டபத்துக்கு சென்றார். அங்கு பாறையில் இயற்கையாகவே பதிந்திருந்த பகவதி அம்மனின் ஒற்றைக்கால் பாதத்தை பார்த்து வணங்கினார்.அதன்பிறகு அவர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்வையிட்டார். திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் இடையே கண்ணாடி கூண்டு இழை யினால் ஆன இணைப்பு பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவ தால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்கு வரத்து நடக்க வில்லை. இதனால் மத்திய மந்திரி விவேகானந்தர் பாறையில் இருந்தவாரே திரு வள்ளுவர் சிலையையும் பார்வை யிட்டார்.
அதன்பிறகு அவர் மீண்டும் அதே படகில் கரைக்கு திரும்பினார். மத்திய மந்திரி வருகையை யொட்டி கன்னியா குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான 27 கூடுதல் தரவுத்தொகுப்புகள் ஆகியவை உள்ளன.
- 77 லட்சம் வீடுகள் பயனாளிளுக்கு வழங்கப்பட்டுள்ளன."
புதுடெல்லி:
இந்தியாவின் நகர அமைப்புகள் தொடர்பான ஆண்டு ஆய்வின் ஆறாவது பதிப்பான ஏ.எஸ்.ஐ.சி.எஸ்-2023 அறிக்கையை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார். இந்த அறிக்கை குறித்து அவர் கூறியதாவது;-
"இந்த அறிக்கையில் 82 நகராட்சி சட்டங்கள், 44 நகர ஊரமைப்பு சட்டங்கள், 176 தொடர்புடைய சட்டங்கள், விதிகள் மற்றும் அறிவிப்புகள், 32 பிற கொள்கை மற்றும் திட்ட ஆவணங்கள், இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான 27 கூடுதல் தரவுத்தொகுப்புகள் ஆகியவை உள்ளன.
நகர்ப்புற மேம்பாட்டுக்காக 2014-ம் ஆண்டு முதல் ரூ.18 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 1.19 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1.13 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டு அதில் 77 லட்சம் வீடுகள் பயனாளிளுக்கு வழங்கப்பட்டுள்ளன."
இவ்வாறு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
- காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்
- சன்னதி தெருவில் இந்த சமுத்திரகிரி ரத யாத்திரை தொடக்க விழா நடக்கிறது.
கன்னியாகுமரி, அக்.18-
குமரி மாவட்ட எல்லையான பத்துகாணி பகுதியில் உள்ள காளிமலை யில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் துர்க்கா ஷ்டமி திருவிழா நாளை தொடங்கி 6 நாட்கள் நடக்கிறது இதையொட்டி கன்னியா குமரியில் இருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை நாளை காலை தொடங்குகிறது. முன்னதாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு இருமுடி கட்டு மற்றும்புனிதநீர்குடங் களில்நிரப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கலையரங்கம் முன்பு உள்ள சன்னதி தெருவில் இந்த சமுத்திரகிரி ரத யாத்திரை தொடக்க விழா நடக்கிறது.
விழாவுக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்ககுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளி யுறவு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி முரளிதரன், மதுரை ஆதீனம் 293-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிய ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சமுத்திரகிரி ரதயாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்கள்.
கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த சமுத்ரகிரி ரத யாத்திரை விவேகானந்தபுரம், கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தக்கலை, குலசேகரம் வழியாக 22-ந்தேதி பத்துகாணி பகுதியில் உள்ள காளிமலையை சென்று அடைகிறது.
- திருத்தல மயான வளாகத்தில் ஆன்றோ உடல் அடக்கம் செய்யப்பட்டது.
- புனித காணிக்கை அன்னை திருத்தலத்தில் திருப்பலி
குளச்சல் :
மணப்பாடு கடலில் மீட்கப்பட்ட குளச்சல் மீனவர் ஆன்றோ உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று பிற்பகல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. வீட்டுமுன் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஏ.ஜெ.ஸ்டாலின் ஆகியோர் ஆன்றோ உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சிவகுமார், கல்குளம் தாசில்தார் கண் ணன், குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்துபாண்டி, கிராம அலுவலர் ராஜேஷ், நகர பாரதிய ஜனதா தலைவர் கண்ணன், நகர்மன்ற துணை தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ் மற்றும் கவுன்சிலர்கள், பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் புனித காணிக்கை அன்னை திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருத்தல மயான வளாகத்தில் ஆன்றோ உடல் அடக்கம் செய்யப்பட்டது.
- மத்திய மந்திரியிடம் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
- மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் :
டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்கரியை விஜய்வசந்த் எம்.பி. சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிக் காக தங்களின் நிலத்தை அரசுக்கு வழங்கிய மக்களுக்கு போதிய இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. குறிப்பாக திருப்பதி சாரம், குன்னத்தூர், பேரூர், கப்பியறை, ஆளூர், தோவா ளை, பெருங்குடி மற்றும் ஆரல்வாய்மொழி ஆகிய ஊர்களுக்குட்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கு வதில் அரசு பாரபட்சம் காட்டியுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் 2013-ன்படி இழப்பீடு தொகையை மாவட்ட கலெக்டர் முன் 2018 பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தின் போது வழங்க ஒத்துக்கொண்டனர். பின்னர் நெடுஞ்சாலைத் துறை உரிய இழப்பீடு தொகை வழங்க மறுத்து விட்டது. இந்த கிராமங்களுக்கு பழைய சட்டத்தின் கீழ் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று தெரிவித்தது.
2021-ம் ஆண்டுக்கு பின்னர் இழப்பீடு வழங்கு வதை தேசிய நெடுஞ்சாலைத்துறை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கையால் 251 நில உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு ஆணையிட்ட பின்னரும், இந்த தொகையை வழங்கு வதற்கு நெடுஞ்சாலைத்துறை மறுத்து வருகிறது. இது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே தாங்கள் தயவு கூர்ந்து நெடுஞ்சாலை துறையை அறிவுறுத்தி, நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்று தாமதம் இன்றி உரிய இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான்கு வழி சாலை திட்டப்பணியை விரைவாக முடிப்பதற்கு இது மிகவும் முக்கியம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாட்டின் எல்லையை காப்பவர்களாக மீனவர்கள் இருக்கிறார்கள் என மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.
- இந்திய பொருளாதாரத்தில் 8 சதவீதம் மீனவர்கள் பங்கு உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற் றும் பால் வளத்துறை மந் திரி புருஷோத்தம ரூபாலா 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தனுஷ்கோடி சென்று பார்வையிட்டார்.
பின்னர் ராமேசுவரம் வந்த மத்திய மந்திரி புருஷோத்தம ரூபாலாவும், மத்திய இணை மந்திரி எல்.முருகனும் துறைமுக கடல் பகுதியில் மீன்வளத்துறை மூலம் நடைபெற்று வரும் துறைமுக சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட–னர். அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.
அதன்பின்னர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறி–ய–தாவது:-
சாகர் பரிக்கிரமா யாத்தி ரையானது கடந்த 4 மாதத் திற்கு முன்பு குஜராத்தில் தொடங்கி பல மாநிலங்களில் உள்ள கடற்கரையோர பகுதிகளில் உள்ள மீனவர்களை சந்தித்து வருகிறோம். தமி ழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்துவிட்டு, தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளை பார்த்துவிட்டு, திட்டங்களை ஆய்வு செய்தோம். ராமேசு வரத்தில் துறைமுக பணி களை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம்.
இங்குள்ள மீனவர்கள் ராமேசுவரம் கடல் பகுதியில் புதிய துறை முகம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மாநில அரசு ஆய்வு நடத்தி வருவதால் அந்த ஆய்வு முடிந்த பின்னர் இதுபற்றி முடிவு செய்யப்ப டும். ஏர் ஆம்புலன்ஸ் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களின் படகு களை மத்திய வெளியுறவு துறை மூலம் மீட்க நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி, தூத்துக் குடி, திருநெல்வேலி ஆகிய பகுதி மீனவர்களை சந்தித்த போது மீனவர்கள் வைத்த பிரதான கோரிக்கை என்ன வென்றால், கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போது மீனவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடன டியாக அவர்களை மீட்டு காப்பாற்ற வசதியாக ஏர் ஆம்புலன்ஸ் வசதி வேண்டு மென்று கோரிக்கை வைத் துள்ளனர். இது குறித்து அரசிடம் பேசி ஏர் ஆம்பு லன்ஸ் கொண்டுவர நடவ டிக்கை எடுக்கப்படும்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள கடல் பகுதிக்கு செல்லும்போது, அந்த துறைமுகப் பகுதிக்குள் சென்று படகுகளை நிறுத்த வசதியாக குறிப்பாக ஒடிசா, குஜராத், மங்களூரு போன்ற கடல் பகுதிகளுக்கு சென் றால் அங்குள்ள துறைமு கத்தில் படகுகளை நிறுத்த வசதியாக தேசிய அடையாள அட்டை வேண்டுமென கேட்டுள்ளனர்.
இந்த கோரிக்கை குறித் தும் பரிசீலனை செய்யப்ப டும். ரூ.38,500 கோடி நிதி பிரதமர் மோடி, மீன்வளத்து றைக்கு மட்டும் ரூ.38 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தால் ஏராள மான பணிகள் நடந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.1500 கோடி நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் 8 சத வீதம் மீனவர்களின் பங்கு உள்ளது. நாட்டை காப்ப வர்களாகவும், நாட்டின் எல்லையை காப்பவர்களா கவும் மீனவர்கள் இருந்து வருகின்றனர்.
மீனவர்கள் முன்னேற்றத் துக்காகவே மத்திய அரசு நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகு களை வழங்கியுள்ளது. அதை மீனவர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இருநாட்டு குழு தமிழக மீனவர்கள் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியா-இலங்கை என இருதரப்பிலும் அதிகாரிகள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும் குழு அமைக் கப்பட்டுள்ளது. இதுவரை அதிகாரிகள் மட்டத்தில் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கொரோனா உள்ளிட்ட சூழ்நிலையால் இருநாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை. அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடை பெற வேண்டும் என்று வெளியுறவுத்துறை மூலம் கேட்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. கச்சத்தீவை யார் தாரை வார்த்தது என்பது அனை வருக்குமே தெரியும். கச்சத் தீவை மீட்பது குறித்து உரிய நேரத்தில் அதற்கான நடவ டிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி, பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர் உள் ளிட்ட பலர் உடன் இருந்த னர். விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசு ராஜா, தேவதாஸ், எமெரிட், சகாயம், நாட்டு படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் ஆகியோர் மீன்வளத்துறை மத்திய மந்திரியிடம் மீனவர்களின் கோரிக்கைகளை விளக்கி கூறினர்.
- பாசி வளர்ப்பு பூங்கா அமைக்க மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு செய்தார்.
- நிர்மலாதேவி, தீபா உட்பட பலர் கலந்து கொன்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கடலோர கிராமமான திருப் பாலைக்குடியில் மீன்துறை மூலம் பாசி–வளர்ப்பு பூங்கா ரூ.11 கோடிமதிப்பில் துவங் கப்பட உள்ளது.
இந்த இடத்தை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். அப்போது பாசி வளர்ப்பு பூங்கா பணிகள் விரைவில் தொடங்கி முடி–வ–டையும் வகையில் மேற் கொள்ள அதிகாரிக–ளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதா–கவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மீன்துறை இணை இயக்குநர் பிரபாவதி, துணை இயக்கு–நர் கோபிநாத், ஆய்வாளர் அபுதாஹிர், மீனவ கூட் டுறவு சங்கத்தலை–வர்கள் பசுருல்ஹக், சுல்த்தான் செய்யது இபுராமுசா, மீன் துறை அலுவலர்கள் முரு–கேசன், ஷகிலாபானு, நிர் மலாதேவி, தீபா உட்பட பலர் கலந்துகொன்டனர்.
- மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்.
- நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
சென்னை:
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று காலையில் டெல்லியில் உள்ள வீட்டில் சந்தித்து பேசினார். அவருடன் துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.
காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய மந்திரியிடம் வழங்கினார். அந்த கடிதத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் எழுதி இருப்பதாவது:-
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி முக்கியமாக உள்ள நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 2018 பிப்ரவரி 16-ம் நாளிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அட்டவணையின்படி, நீர் சேமிப்பு மற்றும் பிலிகுண்டுலுவில் அடையப்பட வேண்டிய நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டது.
இருப்பினும், ஜூன் 1 முதல் ஜூலை 17 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர் இருப்பு 3.78 டி.எம்.சி மட்டுமே இந்தக் காலகட்டத்தில் பெறவேண்டிய தண்ணீர் அளவு 26.32 டி.எம்.சி. என உள்ள நிலையில், 22.54 டி.எம்.சி., நீர் பற்றாக்குறையாக உள்ளது. பிலிகுண்டுலுவில் இந்த 3.78 டி.எம்.சி நீர்வரத்துகூட கே.ஆர்.எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களுக்கு கீழே, கட்டுப்பாடற்ற இடைநிலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பிலிகுண்டுலு வரை பாய்கிறது.
தென்மேற்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடி, மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளதாகவும், குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அது 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே, நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தண்ணீர் தேவைக்கும், நீர்வரத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதால், கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்திட இயலும்.
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் கடந்த 5.7.2023 அன்று ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து, இந்த முக்கியமான பிரச்சனையில் தலையிட்டு, தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டிருந்தார்.
3.7.2023 தேதியிட்ட கடிதத்தின்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்துச் சென்றதாகவும் கூறினோம். காவிரி நீர் மேலாண்மை ஆணையம், 4.7.2023 தேதியிட்ட தனது கடிதத்தில், உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் நீரோட்டத்தினை உறுதி செய்யுமாறு கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும், கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இந்தக் கடினமான சூழ்நிலையில், கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே, தமிழ்நாட்டில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், இந்தப் பிரச்சினையில் ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள மாதாந்திர அட்டவணையைப் பின்பற்றவும், பற்றாக்குறையை ஈடு செய்யவும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிடவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் எழுதியுள்ளார்.
ஜல் சக்தி துறை அமைச்சர் , கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கும் மற்றும் நீர் பற்றாக்குறை காலங்களில் சரியான நீர் பங்கீடு செய்வதற்கு தேவையான முறையை செயல்படுத்து வதற்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதாக உறுதியளித்தார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியையே மட்டுமே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.
- ரங்கசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2014 முதல் பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு நலத்திட்டங்களால் அனைத்துத் தரப்பினரும் பயனடைந்துள்ளனர். முத்ரா கடனுதவித் திட்டம், மருத்துவ காப்பீடுத் திட்டங்களால் கோடிக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களால் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்துத் தரப்பினரும் பயனடைந்து வருவதால் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வே அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராவார்.
உலக அளவில் புகழ் பெற்ற தலைவராக அவர் உள்ளார். அவருக்கு நிகரான தலைவராக ராகுல்காந்தி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியையே மட்டுமே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.
அவரை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளில் அனைத்துக்கட்சித் தலைவர்களுமே தங்களை பிரதமராக எண்ணிக்கொள்கின்றனர்.
புதுச்சேரியில் இலவச கியாஸ் இணைப்பு திட்டம், காப்பீடு திட்டங்களில் தலா 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். பா.ஜ.க.வுடன் இணைந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஏராளமானோர் கோரிக்கை வைக்கின்றனர். தமிழகத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். நாட்டில் பலரும் கோரி வருகின்றனர்.
எனவே அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. அந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது.
எனவே அச்சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் உட்பட யாரும் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.