என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இலங்கை கடற்படையின் கைது சம்பவங்கள் தமிழக மீனவர்களிடையே கோபத்தை ஏற்படுத்துகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  X

  மு.க.ஸ்டாலின்,எஸ்.ஜெய்சங்கர்(கோப்பு படம்)

  இலங்கை கடற்படையின் கைது சம்பவங்கள் தமிழக மீனவர்களிடையே கோபத்தை ஏற்படுத்துகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மீனவர்கள் விடுதலைக்கு நடவடிக்கை கோரி வெளியுறவு மந்திரிக்கு, முதலமைச்சர் கடிதம்.
  • தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும்,கைது சம்பவங்கள் தொடர்கின்றன.

  தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

  தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக்ஜலசந்தி பகுதியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன. இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

  கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக ரீதியிலான வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும் வெளியுறவுத் துறை மந்திரி உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  Next Story
  ×