என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்பத்திரி"

    • வாலிபர், மனைவியை சரமாரியாக தாக்கினார்.
    • வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பீகார் மாநிலம் கயா அடுத்த கிஜ்ரா சராய் நகரை சேர்ந்த வாலிபர் அவரது மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது வாலிபர், மனைவியை சரமாரியாக தாக்கினார். பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்த அவரது மனைவி, திடீரென ஆவேசமடைந்தார். கணவனை அடித்து கீழே தள்ளினார். பின்னர் கணவனின் உடல் மீது உட்கார்ந்து கொண்டு அவரது நாக்கை கடித்து மென்று விழுங்கினார்.

    நாக்கு துண்டானதால் வாலிபர் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது மனைவி கணவன் மீது உட்கார்ந்து கொண்டு இருந்தார். அவரது வாய், முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது.

    இருவரையும் சமாதானம் செய்தனர். வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரது உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் ஆபத்தான நிலைக்கு சென்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மகத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.
    • திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர்:

    உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.

    வேடசந்தூர் ரெங்கநாதபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 32 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நிமித்தமாக பெங்களூர் சென்று சொந்த ஊருக்கு வந்தார்.

    தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடையாததால் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை வேடசந்தூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் லோகநாதன் உறுதி செய்தார்.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வலையுடன் கூடிய 8 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இங்கு கொரோனா தொற்றுடையவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வார்டில் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கோவில் வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் குச்சி ஐஸ் விற்பனை செய்துள்ளார்.
    • போலீசார் குச்சி ஐஸ் விற்பனை செய்த வியாபாரியை தேடி வருகின்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் கிழக்கு ஊராட்சி புள்ளிபாளையத்தில் பிரசித்திபெற்ற ஏணிபாலி பச்சியம்மன் கோவில் உள்ளது. அங்கு அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதேபோல் வெள்ளிக்கிழமையான நேற்று ஏணிபாலி பச்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில் சங்ககிரி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள், பொங்கல் வைத்து சாமி வழிபட்டனர். அப்போது கோவில் வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் குச்சி ஐஸ் விற்பனை செய்துள்ளார்.

    அவரிடம் குழந்தைகள் சிலர் ஐஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதனையடுத்து சிறிது நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சங்ககிரி பறையங்காட்டானூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், தேவி ஆகியோரின் மகன் அகி (14), நங்கவள்ளியை சேர்ந்த குணசேகரன், கோகிலா ஆகியோரின் மகள் ஸ்ரீ திக்சா (7), ஆகிய 2 குழந்தைகள் சங்ககிரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    அதேபோல் திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் ஆதவ ராஜ் (5), அ.புதூரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் யோகேஸ்வரன் (18), தர்மபுரியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகள் ஸ்ரீநிதி (10) ஆகியோர் சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து மருத்துவர்கள் கூறியபோது, வாந்தி வயிற்றுப்போக்குடன் வந்த குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தைகள் நலமுடன் உள்ளதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் குச்சி ஐஸ் விற்பனை செய்த வியாபாரியை தேடி வருகின்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் சிறுமி போல் இருந்ததால் அவரது வயதை டாக்டர்கள் விசாரித்தனர்.

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    அந்த பெண் சிறுமி போல் இருந்ததால் அவரது வயதை டாக்டர்கள் விசாரித்தனர். அப்போது அவருக்கு 16 வயது மட்டுமே ஆவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துள்ளார். அவரும், அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 22) என்பவரும் காதலித்துள்ளனர்.

    கோபாலகிருஷ்ணன் மாணவியை திருமணம் செய்து முடிவு செய்துள்ளார். இதையடுத்து 2 பேரின் பெற்றோர் சம்மதத்துடன் அங்குள்ள கோவிலில் அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளனர். கோபாலகிருஷ்ணன் வீட்டில் மாணவி வசித்துள்ளார். அதன்பிறகும் அவர் பள்ளிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே மாணவி கர்ப்பம் ஆனதால் அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வயிறு வலி வந்ததைத் தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கோபால கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த மாதம் 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
    • காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில் வடக்கு காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

    வடக்கு காசாவின் முக்கிய மருத்துவமனையான அல்-அஹ்லி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் தவித்து வருகிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து உருக்குலைந்தது.

    • சவ ஊர்வலம் சென்ற சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன.
    • தேனீக்கள் கொட்டியதில் 40 பேர் கவுரி தேவி பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், கன்னெரு கொய்யா பாடுவை சேர்ந்தவர் பல்லையம்மா (வயது 86). வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இறந்து விட்டார்.

    நேற்று அவரது இறுதி சடங்குக்கான பணிகள் நடந்தன. இதையடுத்து உறவினர்கள் பல்லைய்யமாவின் பிணத்தை பாடையில் வைத்து தோளில் இடுகாட்டிற்கு சுமந்து சென்றனர்.

    அப்போது சவ ஊர்வலத்தில் வந்தவர்கள் நடனமாடியபடி பட்டாசுகளை வெடித்தனர்.

    சவ ஊர்வலம் சென்ற சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன. சவ ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு பறந்து சென்று தேனி கூட்டில் விழுந்தது.

    இதனால் கூடு கலைந்து தேனீக்கள் பறந்து வந்து சவ ஊர்வலத்தில் சென்றவர்களை விரட்டி, விரட்டி கொட்டின.

    இதனால் வலி தாங்காத அவர்கள் பிணத்தை நடுரோட்டிலேயே போட்டுவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். மூதாட்டியின் பிணம் நீண்ட நேரம் நடுரோட்டிலேயே கிடந்தது.

    தேனீக்கள் சென்ற பிறகு மாலை மூதாட்டியின் உறவினர்கள் வந்து அவரது பிணத்தை எடுத்துச் சென்று இடுகாட்டில் இறுதி சடங்கு செய்தனர்.

    தேனீக்கள் கொட்டியதில் 40 பேர் கவுரி தேவி பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த 4 பேர் பத்ராசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அடுத்த சில நிமிடத்தில் அப்பெண் திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பயணிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல்லடம் வழியாக ஆறாக்குளத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் ஏறிய பெண் பயணி ஒருவர் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சின்னக்கரையை கடந்து செல்லும்போது அவர் மயக்கமடைந்தார். சக பெண் பயணிகள் இது குறித்து கண்டக்டர் சக்திவேலிடம் தெரிவித்தனர்.

    அவர் ஆம்புலன்சை தொடர்பு கொண்டதில், தாமதமாகும் என்ற நிலையில், பல்லடம் போக்குவரத்து கழக கிளை மேலாளர் செந்தில்குமாரிடம் இது குறித்து தெரிவித்தார். பஸ்சில் உள்ள பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பிவிட்டு மயக்கமடைந்த பயணியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கிளை மேலாளர் உத்தரவிட்டார்.

    அதன்படி பயணிகள் வீரபாண்டி பிரிவில் இறக்கி விடப்பட்டனர். பயணித்த சில பெண்கள் மயக்கமடைந்த பெண்மணியை தனியாக விட்டுச்செல்ல மனமின்றி, தாங்களும் மருத்துவமனைக்கு வருவதாக கூறி சென்றனர்.

    இதனைத்தொடர்ந்து துரிதகதியில் செயல்பட்ட டிரைவர் ராசு கண்ணன், அரசு பஸ்சை ஆம்புலன்சாக கருதி வேகமாக இயக்கினார். அடுத்த சில நிமிடத்தில் அப்பெண் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மின்னல் வேகத்தில் செயல்பட்ட அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பயணிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டினர்.

    • நாமக்கல் நள்ளிபாளையம் பகுதிைய சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடை பெற்றது. கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ெகாடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • இதனால் மனவேதனை அடைந்த வசுமதி திருச்செங்கோட்டில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்த 30-தேதி வீட்டில்தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 55). இவரது மூத்த மகள் வசுமதி (23). என்ஜினீயர்.

    இவருக்கும், நாமக்கல் நள்ளிபாளையம் பகுதிைய சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடை பெற்றது.இந்த நிலையில் வசுமதியிடம் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ெகாடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை

    இதனால் மனவேதனை அடைந்த வசுமதி திருச்செங்கோட்டில் உள்ள

    பெற்றோர் வீட்டில் கடந்த

    30-தேதி வீட்டில்தூ க்குப்போட்டு தற்கொ லைக்கு முயன்றார்.

    சேலம் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 9-ந்தேதி சிகிச்சை பலனின்றி வசுமதி பரிதாப மாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி, கணவர் வினோத் ,மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோதரி காவியா உள்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை , தற்ெகாலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்ததும் 4 பேரும் தலைமறைவாகினர்.

    உடலை வாங்க மறுப்பு

    இதனிடையே அவர்கள் 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே வசுமதியின் உடலை வாங்குவோம் என கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள், சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு உடலை வாங்க மறுத்து கடந்த 9-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலமுறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை.இதனை தொடர்ந்து திருச்செங்கோடு டவுன் போலீசார் நேற்று மல்ல சமுத்திரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வசுமதியின் கணவர் வினோத்தை அதிரடியாக கைது ெசய்தனர். அவரிடம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இருப்பி

    னும் இன்று 4-வது நாளாக

    உடலை வாங்க மறுத்து வசுமதியில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள

    னர். மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோ தரி காவியா ஆகியோரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என கூறி வருகின்றனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.இதனால் 4-வது நாளாக வசுமதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது . 

    • மகன் ஹரிஹரனுடன் வீட்டில் இருந்தபோது கடந்த 10 -ந் தேதி இரவு மெழுகுவர்த்தி சரிந்து ஓலையில் தீ பிடித்தது.
    • படுகாயமடைந்த ஷீலாவை சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரை குளம் அருகே உள்ள வடக்கு தாமரைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கர நாராயணன்.

    இவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷீலா (வயது 52) மகன் ஹரிஹரனுடன் வீட்டில் இருந்தபோது கடந்த 10 -ந் தேதி இரவு மெழுகுவர்த்தி சரிந்து ஓலையில் தீ பிடித்தது.

    இதில் படுகாயமடைந்த ஷீலாவை சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் ஹரிஹரன் கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கண்காணிப்பு
    • பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்.

    நாகர்கோவில்:

    சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் பி.எப். 7 வகை வைரஸ் மற்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    இதையடுத்து இந்தியா வில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலை யில் இருக்க வேண்டும் என்றும் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைத்தி ருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொேரானா அறிகுறி யுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் வீட்டுத் தனிமை யில் உள்ளனர். இவர்களை சுகாதாரத் துறை அதிகாரி கள் கண்காணித்து வருகிறார்கள்.

    வெளிநாட்டிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வருப வர்களை கண்காணிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.கன்னியாகுமரி ஆசாரிப்பள் ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இவற்றில் 20 படுக்கை வசதிகள் அதிதீவிர சிகிச்சை வசதிகளை கொண்ட படுக்கைகளாகும். 40 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 40 படுக்கை கள் சாதாரண படுக்கைகள் ஆகும். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டை மருத்துவக் கல்லூரி கண்காணிப் பாளர் அருள் பிரகாஷ் தலைமை யிலான குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் டாக்டர்கள் கூறுகையில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான அளவு ஆக்சிஜன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் நிரப்பகம் உள்ளது. 3000 லிட்டர் கொண்ட ஆக்ஸிஜன் நிரப்பகமும் செயல்பாட்டில் உள்ளது. இது தவிர ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் மற்றும் 550 லிட்டர் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் உற்பத்தி மையமும் உள்ளது. இது தவிர 296 சிலிண்டர்களும் உள்ளன.

    ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

    பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். காய்ச்சல் இருமல், சளி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

    • டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் நடந்தது
    • கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்

    நாகர்கோவில்:

    சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உருவாகி உள்ள கொரோனா பி.எப்.7 வைரஸ் பரவல் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் போன்ற வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடந்தது. டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் கொரோனா வார்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. நோயாளிகள் வந்தால் சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ் மற்றும் டாக்டர்கள் இதில் பங்கேற்றனர்.

    • தட்டி கேட்டவருக்கு அடி-உதை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே வெள்ளை யம்பலம் பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. சம்பவ தினம் இரவு இங்கு ஐரேனி புரம் எட்வின் ஜேக்கப் (வயது 32) என்பவர் பணி யில் இருந்துள்ளார்.

    அப்போது முஞ்சிறை பகுதி ராஜு மகன் ரீகன், அவரது சகோதரர் ரெஜின், நெடுமானி வயலங்கரை பாபு மகன் மனோஜ் உள்பட 4 பேர் உடல் நிலை பாதித்த ரீகனின் தாயாரை மருந்து வாங்க அழைத்து சென்றுள்ளனர்.

    அப்போது அங்குள்ள நர்சு களிடம் தகாத வார்த்தைகள் பேசியதாகவும் இதை தட்டிக் கேட்ட எட்வின் ஜேக்கப்பை ரீகன், ரெஜின், பாபு உள்ளிட்ட 4 பேரும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் அதே மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர்.

    இது போன்று ரெஜின் அளித்துள்ள புகாரில் உடல் நிலை பாதித்த எனது தாயாரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, அங்குள்ள பணியாளர் எட்வின் ஜேக்கப் மற்றும் மேலும் 3 பேர் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி உள்ளார்.

    இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×