என் மலர்
நீங்கள் தேடியது "Andhra state"
- ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்தஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
- இவருக்கு மோகனப்பி ரியா(வயது34) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முத்துமகேசுவரன்(35). இவர் 2005-ம் ஆண்டு ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவில் பணியில் சேர்ந்தார். தற்போது ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள 10-வது என்ஜினீயர் ரெஜிமெண்டில் ஹாவில்தா ராக பணியாற்றினார்.
ராணுவவீரர் முத்து மகேசுவரனுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. செகந்திராபாத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று மாலை அவர் உடல் ஆம்புலன்சு மூலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு முத்துமகேசுவரன் உடலுக்கு ராணுவ அதி காரிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடல் இருந்த பெட்டியில் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ராணுவவீரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மரணமடைந்த ராணுவவீரர் முத்துமகே சுவரனுக்கு மோகனப்பி ரியா(வயது34) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
- ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா்.
- உதகை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஊட்டி
ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ்(23). இவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் நாகராஜ் தனது நண்பா்கள் 2 பேருடன் ஊட்டியில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க ஊட்டிக்கு வந்தார். 3 பேரும் ஒரு தனியாா்ஓட்டலில் அறை எடுத்து தங்கினா். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக நாகராஜ் கூறியதைத் தொடா்ந்து அவரது நண்பா்கள் அவரை அருகிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு சிகிச்சைக்கு பின்னா் அவா்கள் 3 பேரும் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பினா். இந்நிலையில் வரும் வழியில் நாகராஜ் திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக அவருடைய நண்பா்கள் அவரை ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் நாகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து உதகை நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்
திருமலை:
திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு பரிணாமத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருப்பதி நகரின் நிலத்தடி நீர் அளவு குறைந்தது மட்டுமல்லாமல், சுற்றுப்புற மற்றும் சுகாதாரச் சீர்கேடும் அதிகரித்துள்ளது.
மேலும், திருப்பதி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பட்டியலில் உள்ளதால், அதை உலகத் தரம் வாய்ந்தாக மாற்ற ஆந்திர அரசு முயன்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, காந்தி ஜெயந்தி நாளான நேற்று முதல் திருப்பதி நகரில், பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய நகராட்சி முடிவு செய்து அதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.
51 மைக்ரானிற்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், தெர்மோகோலால் செய்யபடும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

அதற்கு, பதில் துணி மற்றும் சணலைப் பயன்படுத்தி செய்யப்படும் பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றபடி, பால் பாக்கெட்டுகள், ஒரு லிட்டருக்கு மேற்பட்ட குடிநீர் பாட்டில்கள், மருத்துவமனைகளில் மருந்துகளை அளிக்க நிலுவையில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்கள், அத்தியாவசிய தேவைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்த திருப்பதி நகராட்சி அனுமதி அளித்துள்ளது.
இதைதொடர்ந்து திருப்பதியில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பொது இடத்தில் கொண்டு வந்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே திருமலையில் ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரம் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது. #TirupatiTemple #PlasticBan