என் மலர்
நீங்கள் தேடியது "fishe"
- விவசாயி பணிகளை முடிந்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சருகுவலையபட்டி ஊராட்சியை சேர்ந்தது அரியூர்பட்டி. இங்கு மோகினி சாத்தான் கண்மாய் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் தங்கள் விவசாயி பணிகளை முடிந்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் மீன்பிடித் திருவிழா விவசாய பணிகள் முடிந்த பின்பு இன்று காலை 5 மணி அளவில் தொடங்கியது. இந்த மீன் பிடி திருவிழாவில் பங்கேற்க சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மட்டுமன்றி சிவகங்கை, திண்டுக்கல் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.
முதலில் கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளைத் துண்டு வீச, சுற்றி இருந்த மக்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டு இறங்கி தங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, வலை, குத்தா போன்ற ஏராளமான மீன்பிடி சாதனங்களை பயன்படுத்தி மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.
இதில் கெண்டை, கெளுத்தி, கட்லா, ரோகு ஜிலேபி, வீரா மீன்கள் என சிறிய ரக மீன்கள் முதல் 2 கிலோ, 3 கிலோ வரை உள்ள பெரிய மீன்கள் பிடிபட்டது. பிடித்த மீன்களை இப்பகுதி மக்கள் விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து சமைத்து சாமி கும்பிட்டு சாப்பிடுவது வழக்கமாய் உள்ளது.
இப்படி செய்வது மூலம் வருங்காலங்களில் மழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்கும் என்பதை பகுதி மக்களின் தொடர் நம்பிக்கையாக உள்ளது. இத்திருவிழாவில் ஜாதி மத பாகுபாடு இன்றி சமத்துவமாய் நடைபெறும் ஒரு சமத்துவ திருவிழாவாக நடைபெற்றது.
- மீனவர்கள் கிரேன் உதவியுடன் மீனை கரைக்கு கொண்டு வந்தனர்.
- மீனவர்கள் சென்னை வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டினம் அடுத்த சில்காலண்டி மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது மீனவர்கள் வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியது.
இதனை கண்ட மீனவர்கள் வலையில் சிக்கிய மீனை கரைக்கு இழுத்து வந்தனர். கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது சுமார் 1500 கிலோ எடையுள்ள தேக்கு மீன் சிக்கி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மீனவர்கள் கிரேன் உதவியுடன் மீனை கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து மீனவர்கள் சென்னை வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னை வியாபாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீனை வாங்கி லாரியில் ஏற்றி சென்னைக்கு கொண்டு வந்தனர்.
- 2 கடைகளுக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்தனர்.
- பார்மலினை இறைச்சிகளில் கலந்தால் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மை உடையது.
ராயபுரம்:
காசிமேடு துறைமுகத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடோன்களில் மீன்களை பதப்படுத்தி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
தரமற்ற மீன்கள் ரசாயனத்தால் பதப்படுத்தப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், உள்ளூர் மீன்களுடன் இந்த மீன்களும் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இந்த நிலையில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் செல்வம், சதாசிவம் மற்றும் அதிகாரிகள் நேற்று காசிமேட்டில் உள்ள 20 மீன்குடோன்களில் ஆய்வு செய்தனர். அப்போது 2 கடைகளில் இறால் மற்றும் மீன்கள் கெட்டுப் போய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 450 கிலோ கெட்டுப்போன மீன்களை பினாயில் ஊற்றி அதிகாரிகள் அழித்தனர். இதையடுத்து அந்த 2 கடைகளுக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்தனர்.
மேலும் இந்த மீன்களில் பார்மலின் என்னும் இறைச்சி கெட்டுப்போவதை தடுக்கும் ரசாயனம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் அடைந்து உள்ளனர். இதைத் தொடர்ந்து 6 மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து சுகாதார அதிகாரிகளிடம் கேட்ட போது, மீன்களின் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். பரிசோதனை முடிவில் மீன்களில் பார்மலின் ரசாயனம் கலக்கப்பட்டு உள்ளதா? இல்லையா? என்பது தெரிய வரும். இந்த முடிவு வர 6 நாட்கள் ஆகும். இந்த பார்மலினை இறைச்சிகளில் கலந்தால் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மை உடையது. ஆனால் அது மனிதர்களின் உடலுக்கு நல்லது அல்ல. கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பரிசோதனை முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
காசிமேடு சந்தையில் ரசாயனம் கலந்த மீன் விற்பனை நடைபெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மீன்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. அதிகாரிகள் அடிக்கடி மீன் சந்தைகளில் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






